சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 310– எஸ்.கணேஷ்

29 ஆகஸ்ட் 2017, 10:09 PM

‘வெயில்’ திரைப்­ப­டம் வசந்­த­பா­ல­னின் வாழ்க்­கை­யில் வசந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ‘வெயில்’ படத்­தின் வெற்­றிக்கு கிடைத்த வெகு­ம­தி­தான் இந்த ‘அங்­கா­டித்­தெரு’.

தெற்­கத்­திச் சீமை­யில் கரி­சல்­காட்­டில் வறு­மை­யோ­டும், வயிற்­றோ­டும் போரா­டிக் கொண்­டி­ருக்­கும் ஒரு எளிய குடும்­பத்­தின் இளை­ஞன் ஜோதி (மகேஷ்), பிளஸ் 2 படிக்­கும் அவன், பள்­ளி­யி­லேயே முதல் மாண­வன். வறு­மை­யின் நிழல் கூட தெரி­யா­மல் சக தோழர்­க­ளோடு விளை­யாடி திரி­யும் அவ­னது வாழ்க்­கை­யில் சோத­னைச் சூறா­வளி சுழன்­ற­டிக்க எல்­லாமே தலை­கீ­ழாக மாறு­கி­றது.

அவ­னின் தந்­தையை ஒரு கோர விபத்து எம­னி­டம் கொண்டு போகவே, படிப்பு, நூல் அறுந்த பட்­ட­மா­கிப் போகி­றது. குடும்ப வறுமை, அம்மா – தங்­கை­க­ளின் வாழ்க்­கையை நினைத்து படிப்பை தூக்­கிப் போட்­டு­விட்டு வேலைக்கு கிளம்­பு­கி­றான் அந்த இளை­ஞன். பள்­ளி­யில் முதல் மாண­வ­னாக இருந்த அவ­னுக்கு, தலை­ந­க­ரத்­தில் அங்­கா­டித் தெரு­வில் உள்ள ஒரு ஜவு­ளிக்­க­டை­யில் வேலைக்கு சேரத்­தான் கொடுப்­பினை இருக்­கி­றது. அவனை போலவே வாழ வக்­கற்ற அத்­தனை மனி­தர்­க­ளுக்­கும் சங்­க­ம­மாக இருக்­கி­றது சென்னை ரங்­க­நா­தன் தெரு­வில் இருக்­கும் அந்த 'அங்­கா­டித்­தெரு.'

தலை­ந­க­ரத்­தில் இருக்­கும் பெரிய கடை­யில் வேலைக்கு சேர போகி­றோம் என்­கிற கன­வோடு வந்த ஜோதிக்கு, அந்த கடைக்கு பின்னே இருக்­கும் கோர­மு­கம் அதிர வைக்­கி­றது.

அந்த சாக்­க­டைக்­குள் வாழ பழ­கிக்­கொண்ட ஜோதிக்கு, சின்ன ஆறு­த­லாக இருக்­கி­றாள் சேர்­மக்­கனி (அஞ்­சலி). அந்த ஜவு­ளிக்­க­டை­யில் சேல்ஸ்­கேர்­ளாக இருக்­கி­றாள். ஆரம்­பத்­தில் இரு­வ­ரும் சின்­னச்­சின்ன சண்டை போட்­டுக் கொள்­கின்­ற­னர். பிறகு சமா­தா­ன­மாகி ஆத­ரவு இல்­லாத அந்த கொடி­கள் ஒன்­றை­யொன்று பற்­றிக் கொள்­கின்­றன.

ஒரே இடத்­தில் ஆணும், பெண்­ணு­மாக வேலை செய்­தா­லும் பெண் பிள்­ளை­க­ளோடு பேசு­வ­தையே பெருங்­குற்­ற­மாக கரு­தும் கடை முதலா ­ளியான அண்­ணாச்­சிக்கு ஜோதி –- சேர்­மக்­கனி காதல் தெரிந்து விடவே இரு­வ­ரும் சித்­ர­வ­தை­யின் உச்­சத்தை அனு­ப­விக்­கி­றார்­கள். ‘இனி­மேல் சரி­வ­ராது’ என முடி­வெ­டுத்து காதல் கிளி­கள் அங்­கி­ருந்து பறந்து போகின்­றன.

சுய­மு­யற்­சி­யில் வாழ­லாம் என்­கிற முடி­வோடு அன்று இரவை நடை­பா­தை­யில் கழிக்க முயல, மாந­க­ரத்­தின் இருட்­டுப்­பக்­கம் அந்த காதல் ஜோடியை விரட்­டி­ய­டிக்­கி­றது! அப்­போ­து­தான் தெரு­வில் இருக்­கும் ஒரு வியா­பா­ரி­யின் தய­வில் உத­யம் தியேட்­டர் அருகே இருக்­கும் பிளாட்­பா­ரத்­தில் தூங்­கு­கின்­ற­னர். அடுத்த சில மணித்­து­ளி­க­ளில் அவர்­க­ளின் வாழ்க்­கை­யைச் சிதைத்­துப் போடு­கி­றது அந்த கோர விபத்து…! அதன் பிறகு அந்த இரு­வ­ரின் கதி என்­ன­வென்­பது கிளை­மாக்ஸ்…! – விளிம்பு நிலை மனி­தர்­கள் வாழும் வாழ்க்­கையை வலி­யோ­டும், வேத­னை­யோ­டும் சொன்ன ‘அங்­கா­டித்­தெ­ரு’­­­­வின் கதை இது­தான்.

ஒவ்­வொரு கதா­பாத்­தி­ர­மும் அதன் பின்­ன­ணி­யும் நெஞ்சை கனக்க வைக்­கின்­றன.

தெற்­கத்தி சீமை பெண்­க­ளுக்கே உரித்­தான நிறத்­தில் உரு­வத்­தோற்­றத்­தில் தெனா­வட்­டுப் பேச்­சில், சிரிப்­பில், சீற்­றத்­தில், சேர்­மக்­க­னி­யா­கவே மாறி ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­கி­றார் அஞ்­சலி. அதி­லும் அவர் சொந்­தக் குர­லில் திரு­நெல்­வேலி தமிழ் பேசி அசத்­திய விதம் அசர வைத்­தது.

தெலுங்கு தேசத்­தி­லி­ருந்து வந்த தேவதை, அஞ்­சலி. ‘கற்­றது தமிழ்’ படம் வாயி­லாக தமிழ் சினி­மா­வுக்­குள் வந்­தார். ஆனால், அவ­ருக்­கொரு அங்­கீ­கா­ரத்­தைத் தந்­தது இந்த ‘அங்­கா­டித்­தெ­ரு’­­­­தான். இந்த பட வெற்­றிக்கு பிறகு அஞ்­சலி தமிழ் சினி­மா­வின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக மாறி­னார்.

நாய­கன் மகேஷ் இந்த படத்­தில்­தான் அறி­மு­கம். ஆனால் அவ­ரின் பக்­கு­வ­மான நடிப்பு இவரா புது­மு­கம் என ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யது.

ரிச்­சர்டு எம். நாத­னின் கேமரா படத்­தின் ஒரு முக்­கிய கேரக்­ட­ரா­கவே மாறி­யி­ருந்­தது. ஜெய­மோ­க­னின் திரு­நெல்­வேலி தமிழ் தெற்­கத்­திச் சீமைக்­குள் வாழும் உணர்வை தந்­தது.

ஜி.வி. பிர­கா­ஷின் இசை­யில் ‘அவள் அப்­ப­டி­யொன்­றும் அழ­கில்லை..’ பாடல் இத­மாக ஒலித்­தது.

தமிழ் சினி­மா­வில் அபூர்­வ­மாக சில குறிஞ்­சிப் பூக்­கள் பூத்து ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தும். ‘அங்­கா­டித்­தெரு’ அப்­ப­டி­யொரு அபூர்வ குறிஞ்சி.