போல்ட் மட்­டுமே தட­க­ளமா?: கார்ல் லுாயிஸ் காட்­ட­ம்

பதிவு செய்த நாள் : 24 ஆகஸ்ட் 2017 10:30


தைபே சிட்டி :

 சர்­வ­தேச தட­க­ளப் போட்­டி­க­ளில் ஓட்­டத்­தில் ஆதிக்­கம் செலுத்­தி­வந்த ஜமைக்­கா­வின் ஓட்ட மன்­னன் உசேன்­போல்ட், தட­க­ளத்­தில் இருந்து ஓய்வு பெற்­று­விட்­டார். எனி­னும், அவ­ரது தாக்­கம் இன்­னும் தட­க­ளத்­தில் இருந்து நீங்­க­வில்லை போலும். அதி­லும், அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த முன்­னாள் தட­கள (நீளம் தாண்­டு­தல்) வீரர் கார்ல் லுாயிசுக்கு போல்ட் மீது அப்­ப­டி­யென்ன கோபமோ தெரி­ய­வில்லை. தைபே­சிட்­டி­யில் நிரு­பர்­க­ளி­டம் கொட்­டித் தீர்த்­து­விட்­டார்.

‘விளை­யாட்­டுத்­துறை என்­பது எப்­போ­தும் ஒரு­வரை சார்ந்­தது இல்லை. ஒரு­வ­ரின் இடத்தை மற்­றொ­ரு­வர் நிரப்ப முடி­யாது. தட­க­ளம் பல்­வேறு சாத­னை­யா­ளர்­களை கண்­டுள்­ளது. ஜெஸ்ஸி ஓவன்ஸ், கார்ல் லுாயிஸ், மைக்­கேல் ஜான்­சன் இப்­போது உசேன்­போல்ட். அவ்­வ­ள­வு­தான் வித்­தி­யா­சம். ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் ஒரு­வர் பிர­ப­ல­மாக இருப்­பார். ஆனால், அந்த ஒரு நபர் மட்­டுமே விளை­யாட்­டுத்­துறை அல்ல. வீரர்­கள் வரு­வார்­கள் போவார்­கள், ஆனால், விளை­யாட்­டுத்­துறை அப்­ப­டியே இருக்கும்.

நாம் விளை­யாட்டை இன்­ன­மும் கட்­ட­மைக்க வேண்­டி­யுள்­ளது. கடந்த 8 ஆண்­டு­க­ளாக ஒரே நபரை (உசேன் போல்ட்) தொடர்ந்து இருந்த டிரெண்டை யாரும் பின்­பற்ற வேண்­டிய அவ­சி­யம் இல்லை. ஒரு வீர­ரால் ஏற்­பட்ட வெற்­றி­டத்தை நிரப்­பு­வதே விளை­யாட்டு வீரர்­க­ளின் வேலை. கடந்த 10 ஆண்­டு­க­ளாக ஒரே மனி­த­ரின் மீது கவ­னம் இருந்­த­தால், விளை­யாட்­டுத்­து ­றை­யில் எந்த வளர்ச்­சி­யும் இல்லை. விளை­யாட்­டுத்­து­றை­யில் கடும் போட்­டியை உரு­வாக்க வேண்­டும் என்­பதே லட்­சி­யம். இப்­போது நம் விளை­யாட்டை மறு கட்­ட­மைப்பு செய்து, வளர்க்­கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. விளை­யாட்­டில் வித்­தி­யா­சத்தை வெளிப்­ப­டுத்தி, வளர்த்­தெ­டுக்­கும் சூழல் வந்­துள்­ளது. ஒரு மனி­த­ரின் ஆதிக்­கத்­தில் இருந்த விளை­யாட்டை மீட்டு, உல­கம் முழு­வ­தும் பர­லான வளர்ச்­சியை கொண்டு செல்­லும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. நான் நீளம் தாண்­டு­த­லில் சாதித்­ததை, இப்­போது கேம­ரான் சாதிக்­கத் துடிக்­கி­றார். அதை நான் அன்­பு­டன் வர­வேற்­கி­றேன்.

வருங்­கா­லத்­தில் கேம­ரான் நீளம் தாண்­டு­த­லில் ஒலிம்­பிக் சாம்­பி­ய­னாக வரு­வார்’ என்­றார்.