சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 309– எஸ்.கணேஷ்

22 ஆகஸ்ட் 2017, 10:22 PM

ஊமை படங்­க­ளுக்கு விஞ்­ஞா­னி­கள் பேசக் கற்­றுக் கொடுத்த பிறகு, உல­கி­லுள்ள அனைத்து மொழி­க­ளி­லும் சினிமா பேச ஆரம்­பித்­தது. ஆயி­னும் தொடர்ந்து பேசாப் படங்­க­ளையே உரு­வாக்கி சாதனை புரிந்­த­வர் சார்லி சாப்­ளின். ’காது­கள் மறந்து விடும். ஆனால், கண்­கள் நினை­வில் வைத்­தி­ருக்­கும்’ என்று சொன்ன சாப்­ளின், பாத்­தி­ரங்­கள் வச­னம் பேசு­வது நடிப்­பின் முக்­கி­யத்­து­வத்­தைக் குறைத்து விடும் என்று திட­மாக நம்­பி­ய­தால் ஊமைப் படங்­க­ளையே எடுத்­தார். அதன் பிறகு 1976ம் ஆண்டு ஹாலி­வுட் நடி­கர் மெல்­பு­ரூக்ஸ் ‘சைலண்ட் மூவி’ என்ற பெய­ரி­லேயே வச­னங்­கள் இல்­லாத (சில இடங்­கள் மட்­டும் ஒலி மற்­றும் இசை இருக்­கும்) படத்தை இயக்கி நடித்­தார்.

நீண்ட இடை­வெ­ளிக்கு பிறகு பேசாப் படம் ஒன்றை ‘பேசும் படம்’ என்ற பெய­ரில் உரு­வாக்கி படத்­தைப் பற்றி எல்­லோ­ரை­யும் பேச வைத்து விட்­டார் கமல்­ஹா­சன்.

வேலை இல்­லாத கார­ணத்­தால் அன்­றாட வாழ்க்­கை­யைப் போராட்­ட­மா­கக் கழிக்­கும் கமல்­ஹா­ச­னுக்கு, சந்­தர்ப்­ப­வ­சத்­தால் ஐந்து நட்­சத்­திர ஓட்­டல் ஒன்­றில் வேறொ­ரு­வ­ரு­டைய அறை­யில் தங்கி ஆடம்­பர வாழ்க்­கையை அனு­ப­விக்­கும் வாய்ப்பு கிடைக்­கி­றது.

அந்த ஆடம்­பர ஓட்­ட­லில் தங்­கி­யி­ருக்­கும் மேஜிக் நிபு­ண­ரின் மக­ளான அமலா, கமல் ஒரு பணக்­கா­ரர் என்று நினைத்து ஒரு சிநே­கப் புன்­னை­கையை வீசு­கி­றார். இதைத் தொடர்ந்து கம­லும் அம­லா­வின் கவ­னத்தை ஈர்த்து அவ­ரது அன்­பைப் பெற முயற்­சிக்­கி­றார்.

பணக்­கா­ர­ரைக் கொல்­வ­தற்­காக அவ­ரது தம்­பி­யால் அமர்த்­தப்­ப­டும் கொலை­யாளி டினு ஆனந்த், கமல்­ஹா­சன்­தான் கொலை செய்­யப்­பட வேண்­டிய நபர் என்று தவ­றாக நினைத்து அதற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­ப­டு­கி­றார். ஆனால், அந்த முயற்­சி­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடி­கின்­றன.

கொலை­யா­ளி­யின் இலக்கு தான் அல்ல பணக்­கா­ரர்­தான் என்­பதை புரிந்து கொள்­ளும் கமல்­ஹா­சன், உண்­மையை பணக்­கா­ர­ரி­டம் சொல்லி அவரை காப்­பாற்­று­வ­து­டன், அவ­ரது மனை­வி­யை­யும் காப்­பாற்ற உத­வு­கி­றார்.

சில நாட்­கள் ஆடம்­பர வாழ்க்­கையை அனு­ப­விக்­கும் கமல்­ஹா­சன், ஐந்து நட்­சத்­திர ஓட்­டல் உரி­மை­யா­ள­ரின் மர­ணம், சாலை­யோ­ரப் பிச்­சைக்­கா­ர­னின் மர­ணம் என்று பல­வற்­றை­யும் அப்­போது பார்க்­கி­றார். இது வாழ்க்கை பற்­றிய அவ­ரது பார்­வை­யையே மாற்­றி­வி­டு­கி­றது.

கமல்­ஹா­சன், பிர­தாப் போத்­தன், டினு ஆனந்த், லோகேஷ், பி.எல். நாரா­யணா, அமலா, பரிதா ஜலால்.

இசை: வைத்­தி­ய­நா­தன், ஒளிப்­ப­திவு: பி.சி. கவு­ரி­சங்­கர், கதை, தயா­ரிப்பு, இயக்­கம்: சிங்­கி­தம் சீனி­வா­ச­ராவ்,

*கன்­ன­டப் பட­வு­ல­கம் வளர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே, எந்த மொழிப் படத்­தை­யும் கன்­ன­டத்­தில் ‘டப்’ செய்து வெளி­யி­டக்­கூ­டாது என்ற கடு­மை­யான கட்­டுப்­பாடு நீண்ட கால­மா­கவே கர்­னா­ட­கா­வில் அமல்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. தமிழ்ப்­பட நாய­கன் கமல்­ஹா­ச­னும் தெலுங்­குப் பட இயக்­கு­நர் சிங்­கி­தம் சீனி­வா­ச­ரா­வும் இணைந்து உரு­வாக்­கிய இந்­தப் படத்­தைக் கர்­னா­ட­கா­வில் வெளி­யி­டும்­போது பிரச்னை ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே, பெங்­க­ளூ­ரு­வில் உள்ள ‘விண்ட்­ஸர் மேனர்’ ஓட்­ட­லில் பட­மாக்கி ‘புஷ்­பக் விமா­னம்’ என்ற பெய­ரில் கர்­னா­ட­கா­வில் வெளி­யிட்­ட­தாக, படம் வெளி­யான சம­யத்­தில் பேசப்­பட்­டது.

*'நாய­கன்' படத்­தில் வேலு நாயக்­கரை கொலை செய்­யும் இன்ஸ்­பெக்­ட­ரின் மக­னாக நடித்த டினு ஆனந்த், இந்த படத்­தில் பிர­தான வில்­லன் வேடத்­தில் திறம்­பட நடித்­தி­ருந்­தார்.

*வச­னம் இல்­லாத கார­ணத்­தால், சிற்­சில மாற்­றங்­க­ளு­டன் இந்­தி­யா­வின் முக்­கிய மாநி­லங்­கள் அனைத்­தி­லும் வெளி­யி­டப்­பட்டு வெற்­றி­க­ர­மாக ஓடி­யது ‘பேசும் படம்’.

*இயக்­கு­நர் சிங்­கி­தம் சீனி­வா­ச­ராவ் தன் நண்­பர் ஸ்ரீந­கர் நாக­ரா­ஜு­டன் இணைந்து இப்­ப­டத்­தைத் தயா­ரித்­தி­ருந்­தார். சென்­னை­யில் இந்த படத்­தின் விநி­யோக உரி­மை­யைப் பெற்று வெளி­யிட்­ட­வர் ‘ஜெயம்’ ரவி­யின் தந்தை எடிட்­டர் ஏ. மோகன்.