மோ பரா­வும் ஓய்வு அறி­விப்பு வெளி­யிட்­டார்

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2017 11:07


லண்­டன் 

: சர்­வ­தேச தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­க­ளில் 5 ஆயி­ரம் மற்­றும் 10 ஆயி­ரம் மீட்­டர் நீண்ட தூர ஓட்­டங்­க­ளில் இங்­கி­லாந்து நாட்­டின் மோ பரா ஆதிக்­கம் செலுத்தி வரு­கி­றார். கடந்த 2011ம் ஆண்டு முதல் நீண்ட தூர ஓட்­டங்­க­ளில் அவரை மிஞ்­சு­வ­தற்கு எந்த ஒரு வீர­ரும் இல்லை என்று, ஆதிக்­கம் செலுத்­தி­வந்­தார். கடை­சி­யாக கடந்த வாரம் லண்­ட­னில் நடை­பெற்ற உலக தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் மோ பரா 10 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் தங்­கம் வென்­றார். 5 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் வெள்ளி வென்­றார்.

இந்­நி­லை­யில், இன்று பெர்­மிங்­ஹாம் நக­ரில் தொடங்­க­வுள்ள டைமண்ட் லீக் போட்­டித் தொட­ரில் 3 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் மோ பரா ஓடு­கி­றார். இதைத்  தொடர்ந்து, ஜூரிச் நக­ரில் ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்­க­வுள்ள சர்­வ­தேச தட­கள

கூட்­ட­மைப்­பின் டைமண்ட் லீக் தொட­ரில் 3 ஆயி­ரம் 5 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டங்­க­ளில் பங்­கேற்­கி­றார். இத்­து­டன்  தன் தட­கள வாழ்க்­கைக்கு விடை கொடுக்­கப்­போ­வ­தாக மோபரா அறி­வித்­துள்­ளார்.

சோமா­லி­யா­வில் நடை­பெற்ற உள்­நாட்டு போரில் தப்பி, தன் குடு ம்­பத்­து­டன் 8 வய­தில் இங்­கி­லாந்து வந்த மோ பரா தட­க­ளத்­தில் கவ­னம் செலுத்தி, பிர­ப­ல­மா­னார். இங்­கி­லாந்­துக்­காக ஓடத் தொடங்­கி­னார். வெற்­றி­க­ளைக் குவித்­தார். ஜூரிச் நக­ரில் நடை­பெ­ற­வுள்ள தன் கடைசி போட்டி குறித்து பேசிய அவர், ‘கடைசி போட்டி என் வாழ்க்­கை­யில் முக்­கி­ய­மான போட்­டி­யா­கும். இதில் வெற்றி பெற்று, ஒரு வெற்­றி­யா­ள­னா­கவே களத்­தில்

இரு ந்து விடை­பெற விரும்­பு­கி­றேன். பெர்­மிங்­ஹாம் நக­ரில் நான் 5 ஆயி­ரம் மற்­றும் 3 ஆயி­ரம் மீட்­டர் ஓட்­டத்­தில் பங்­கேற்­கி­றேன். இங்­கி­லாந்­தில் என் கடைசி ஓட்­டம் என்­ப­தால், ரசி­கர்­களை நான் ஏமாற்­ற­மாட்­டேன்.

வெற்­றி­ பெ­று­வேன்’ என்­றார்.