சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 308– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 16 ஆகஸ்ட் 2017

இயக்­கு­நர் சிக­ரம் கே. பால­சந்­த­ருக்கு சொந்­த­மான கவி­தா­லயா சார்­பில் தயா­ரிக்­கப்­பட்ட 'முத்து' திரைப்­ப­டம்­தான் ரஜி­னி­காந்த்­தை­யும் இயக்­கு­நர் கே.எஸ்.ரவி­கு­மா­ரை­யும் முதல் முறை­யாக இணைத்­தது. 'முத்து' படத்­தின் வெற்றி, இந்­தக் கூட்­டணி மேலும் பல படங்­க­ளில் இணைந்து பணி­யாற்ற வழி­வ­குத்­தது.

கருணை உள்­ளம் கொண்ட ஜமீன்­தார் ரஜி­னி­காந்த் ஏழை எளிய மக்­க­ளுக்கு உத­வும் ஈர இத­யம் கொண்­ட­வர். தன் சித்­தப்பா மகன் ரகு­வ­ரன், அவ­ரது மனைவி ஜெய­பா­ரதி ஆகி­யோ­ரு­டன் ஒன்­றாக வசித்து வரு­கி­றார். தனக்கு ஒரு வாரிசு இல்­லாத கார­ணத்­தால் ரகு­வ­ரன் – ஜெய­பா­ரதி தம்­ப­தி­யின் மகனை தத்­தெ­டுத்து வளர்க்­கி­றார் ஜமீன்­தார் ரஜி­னி­காந்த்.

இந்த சூழ­லில் ஜமீன்­தார் ரஜி­னி­யின் மனைவி ஒரு ஆண் குழந்­தையை ஈன்­றெ­டுத்து விட்டு மர­ண­ம­டை­கி­றார். சொத்து தன் கையை­விட்­டுப் போய்­வி­டுமோ என்ற பயத்­தில் ஜமீன்­தா­ரின் சொத்­துக்­களை தன் பெய­ருக்கு மாற்­றிக் கொள்­கி­றார் ரகு­வ­ரன். இந்த விஷ­யம் ஜமீன்­தார் ரஜி­னிக்கு தெரி­ய­வ­ரும்­போது, "எப்­போது என் மனை­விக்­குக் குழந்தை பிறந்­ததோ, அப்­போதே என் பெய­ரில் இருந்த சொத்தை எல்­லாம் உன் குழந்­தை­யின் பெய­ருக்கு மாற்­றி­விட்­டேன்'' என்று சொல்­கி­றார்.

தான் செய்த காரி­யத்­தால் அவ­மா­ன­ம­டை­யும் ரகு­வ­ரன் தற்­கொலை செய்து கொள்­கி­றார். கண­வன் செய்த தவற்­றுக்கு பிரா­யச்­சித்­த­மாக, தாயை இழந்து நிற்­கும் அவ­ரது குழந்­தையை வளர்க்க விரும்­பு­வ­தா­கக் கூறு­கி­றார் ஜெய­பா­ரதி. தன் குழந்­தையை மிகச் சாதா­ரண மனி­த­னாக வளர்க்க வேண்­டும் என்ற நிபந்­த­னை­யு­டன் ஜெய­பா­ர­தி­யி­டம் ஒப்­ப­டைத்­து­விட்டு, ஜமீ­னை­விட்டு வெளி­யே­று­கி­றார் ரஜி­னி­காந்த்.

அந்­தக் குழந்­தை­தான் வேலைக்­கா­ரன் முத்து என்ற ரஜி­னி­காந்த். ஜெய­பா­ர­தி­யின் மகன் சரத்­பா­பு­வுக்கு உண்­மை­யான உத­வி­யா­ள­னாக அவ­ருக்கு பணி­விடை செய்­வதே தன் கடமை என்று வாழ்­கி­றார் முத்து ரஜி­னி­காந்த். சரத்­பா­பு­வுக்கோ நாட­கம் பார்ப்­ப­தில் ஈடு­பாடு அதி­கம். ஒரு நாட­கத்­தில் நாய­கி­யாக நடித்த மீனா­வி­டம் மன­தைப் பறி கொடுக்­கி­றார் சரத்­பாபு. ஆனால் மீனாவோ, ரஜி­னி­காந்த்தை மன­தார விரும்­பு­கி­றார்.

இந்த சூழ்­நி­லை­யில் ஜமீன்­தார் ரஜி­னி­காந்த் கிட்­டத்­தட்ட ஒரு சாமி­யா­ரைப்­போல் திரும்பி வரு­கி­றார். அவர் யார் என்­ப­தும், நடந்த உண்­மை­க­ளும் எல்­லோ­ருக்­கும் தெரி­ய­வ­ரு­கி­றது.

முத்து ரஜி­னி­காந்த்­தான் உண்­மை­யா­கவே ஜமீன்­தா­ரின் வாரிசு என்­ப­தால், சரத்­கு­மா­ரின் தாய்­மா­ம­னான ராதா­ரவி, தனது அடி­யாட்­கள் மூலம் அவ­ரைக் கொல்ல முயற்­சிக்­கி­றார். ஆனால் இந்த சதி­கள் அனைத்­தை­யும் முறி­ய­டித்து இறு­தி­யில் மீனா­வைக் கைப்­பி­டிக்­கி­றார் ரஜி­னி­காந்த்.

மலை­யா­ளத்­தில் வெளி­வந்த "தேன்­மா­வின் கொம்­பத்து' திரைப்­ப­டமே தமி­ழில் "முத்து''வாக உரு­வா­னது. 1998ம் ஆண்டு "டான்­ஸிங் மஹா­ராஜா'' என்ற பெய­ரில் ஜப்­பா­னிய மொழி­யில் டப் செய்­யப்­பட்டு வெளி­யி­டப்­பட்ட "முத்து,'' ஜப்­பா­னில் மிகப்­பெ­ரிய வர்த்­தக வெற்­றி­யைப் பெற்ற முதல் இந்­தி­யத் திரைப்­ப­டம் என்ற பெரு­மைக்­கு­ரி­யது.

இந்த படத்­தின் மூலம் ஏரா­ள­மான ஜப்­பா­னி­யர்­கள் ரஜி­னி­யின் தீவிர ரசி­கர்­க­ளா­கி­விட, தொடர்ந்து ரஜினி நடித்த பல படங்­க­ளும் ஜப்­பான் திரை­

ய­ரங்­கு­களை ஆக்­கி­ர­மிக்­கத் தொடங்­கின. முத­லில் இந்த படத்­துக்கு வைக்­கப்­பட்ட பெயர் "வேலன்''. பின்­னர்­தான் இந்­தப் படத்­துக்கு "முத்து'' என்று பெயர் மாற்­றப்­பட்­டது. இப்­ப­டத்­தில் இடம்­பெ­றும் ஜமீன்­தா­ரின் மாளி­கைக் காட்­சி­கள் விசேட அனு­மதி பெற்று மைசூரு லலித் மஹா­லில் பட­மாக்­கப்­பட்­டது. இந்த படத்­துக்­காக ரஜினி பேசிய பஞ்ச் வச­னம்: "நான் எப்போ வரு­வேன், எப்­படி வரு­வேன்னு யாருக்­கும் தெரி­யாது. ஆனா, வர­வேண்­டிய நேரத்­திலே வந்­து­டு­வேன்'' ரசி­கர்­க­ளி­டையே நன்கு பிர­ப­ல­ம­டைந்­தது.

நடிக – நடி­கை­யர் : ரஜி­னி­காந்த் (இரு வேடங்­க­ளில்), சரத்­பாபு, ரகு­வ­ரன், ராதா­ரவி, செந்­தில், வடி­வேலு, மீனா, சுபாஸ்ரீ, ஜெய­பா­ரதி, காந்­தி­மதி, விசித்ரா.

படத்­தொ­குப்பு : கே. தணி­கா­ச­லம், ஒளிப்­ப­திவு : அசோக்­ரா­ஜன், பாடல்­கள் : வைர­முத்து, இசை : ஏ.ஆர்.ரஹ்­மான், கதை : பிரி­ய­தர்­ஷன், தயா­ரிப்பு : ராஜம் பால­சந்­தர்- – புஷ்பா கந்­த­சாமி, திரைக்­கதை, வச­னம், இயக்­கம் : கே.எஸ். ரவி­கு­மார்.