நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் இரட்டை வேடம்: மு.க. ஸ்டாலின் கண்டனம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 22:34

சென்னை

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வுத் திணிப்பை செய்தது .இந்தப் பிரச்சினையில் மத்திய அரசைக் கண்டித்து நீட் தேர்வில் இருந்து விதிவிலக்குப பெற  மாநில அரசு அரசு தவறிவிட்டது. அதன் மூலம் மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது என்றும் ஸ்டாலின் கடுமையாக குறை கூறினார்.
பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களையும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அரசு அனுப்பவில்லை என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.

மத்திய அரசு நீட் தேர்வை திணித்து சமூக நீதியை சாகடித்துள்ளது என்றார் ஸ்டாலின்.

கமல் டுவிட்

நீட் தேர்வு விவகாரம் மாணவர்கள் எதிர்காலம் தொடர்பானது அதற்கு உடனே மத்திய அரசுடன் தமிழக அரசு பேசட்டும். மற்ற குதிரை பேர பேச்சுக்களை பின்னர் வைத்துக்கொள்ளலாம் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில்  செய்தி வெளியிட்டுள்ளார்.