கோரக்பூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் முதலமைச்சர் ஆதித்யாநாத் பார்வையிட்டார்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 22:05

லக்னோ

கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையின்போது குழந்தைகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத காரணத்தால் 70 குழந்தைகள் உயிரிழந்தன. அம்மருத்துவமனைக்கு உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவும் விரைந்து சென்று பார்வையிட்டனர். மருத்துவமனையில் குழந்தைகள் வார்டு பகுதிக்கு மத்திய அமைச்சரும், யோகியும் நேரில் சென்று விசாரித்தனர்.

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா படேல், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் டெல்லியிலிருந்து விரைந்து வந்தனர். அவர்களை கோரக்பூர் செல்லும்படி பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
அனுப்பிரியா படேல் மற்றும் மாநில சுகாதார அமைச்சர் சிங், உத்தரபிரதேச மருத்துவக் கல்வி அமைச்சர் அஷுதோஷ் தான்டனும் சென்று யோகி ஆதித்ய நாத் உடன் ஆலோசனை நடத்தினர்.
அக்கூட்டத்தைத் தொடர்ந்து மாநில சுகாதார அமைச்சர் சிங்கும் தான்டனும் கோரக்பூருக்கு புறப்பட்டனர். கோரக்பூர் மருத்துவமனையில் அவர்கள் இருவரும் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் அறிக்கை ஒன்றை மாநில முதல்வர் யோகிக்கு தாக்கல் செய்தனர்.