தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 09:12


சென்னை:

தமிழகத்தில் தெற்கு மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக மழை தொடர்கிறது. நேற்றும் மழை நீடித்தது. அதிகபட்சமாக சிவகங்கையில் 85 மி.மீ., மழை பதிவானது. தஞ்சை, நாகை, திருவள்ளூர், சென்னை, தர்மபுரி, வேலுார், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, தேனி உட்பட மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘வங்கக்கடல்களில் நிலவும் சாதகமான சூழலால் தமிழகத்தில் 16ம் தேதி வரை மழை நீடிக்கும். தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தின் சில இடங்களிலும் மழை பெய்யும். தெற்கு மாவட்டங்களில் சில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரவு நேரத்தில் மழை பெய்யும். வெயில் தாக்கம் தணிந்து காணப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.