அசா­மில் மீண்­டும் வெள்­ளம்: 15 மாவட்­டம் கடும் பாதிப்பு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:49


கவு­காத்தி:

அசா­மில் புதி­தாக ஏற்­பட்ட வெள்­ளத்­தால் 15 மாவட்­டங்­க­ளில் 3 லட்­சத்து 55 ஆயி­ரம் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.  

அசா­மில் கடந்த ஜூன் மாதம் தென் மேற்கு பரு­வ­மழை பெய்ய தொடங்­கிய பின்­னர் தொடர்ந்து வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. இத­னால் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அசா­முக்கு பிர­த­மர் மோடி கடந்த ஒன்­றாம் தேதி சென்­றார். நிவா­ரண உத­வி­கள் குறித்த அறி­விப்­பு­க­ளை­யும் வெளி­யிட்­டார்.  இந்­நி­லை­யில், மீண்­டும் அங்கு வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது. இத­னால், 15 மாவட்­டங்­க­ளில் 781கிரா­மங்­களை சேர்ந்த 3 லட்­சத்து 55 ஆயி­ரம் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.  

பிரம்­ம­புத்ரா, தன்ஸ்ரீ, ஜியா­ப­ராலி, சங்­கோஸ் நதி­க­ளில் வெள்­ளம் அபாய கட்­டத்தை தாண்டி ஓடிக் கொண்­டி­ருப்­ப­தாக அசாம் மாநில பேரி­டர் மேலாண்மை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது. 20 ஆயி­ரம் ஹெக்­டேர் நிலங்­க­ளில் பயிர்­கள் மூழ்கி உள்­ளன. வெள்­ளம் கார­ண­மாக இடம் பெயர்ந்த 14 ஆயி­ரம் பேர் 39 நிவா­ரண முகாம்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.     மீட்பு மற்­றும் நிவா­ர­ணப்­ப­ணி­களை முடுக்­கி­வி­டும் படி 15 மாவட்ட கலெக்­டர்­க­ளுக்­கும் டில்­லி­யில் இருக்­கும் அசாம் முதல்­வர் சர்­பா­னந்தா சோனோ­வல் வீடியோ கான்­ப­ரன்ஸ் மூலம் உத்­த­ர­விட்­டுள்­ளார். இது­வரை ஏற்­பட்ட 2 வெள்­ளப்­பெ­ருக்­கால், அசா­மில் 29 மாவட்­டங்­க­ளில் 29 லட்­சம் மக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இவர்­கள் ஆயி­ரத்து 98 நிவா­ரண முகாம்­க­ளில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­பது  குறிப்­பி­டத்­தக்­கது.