வெங்­காய ஏற்­று­ம­தியை கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:22


புது­டில்லி,:

உள்­ளூர் மார்க்­கெட்­டில் வெங்­கா­யம் விலை உயர்வை கட்­டுப்­ப­டுத்த, ஏற்­று­ம­தியை  கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்.  என்று உண­வுத்­துறை அமைச்­சர் ராம்­வி­லாஸ் பாஸ்­வான் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.  

 இது தொடர்­பாக அவர் நேற்று முன்­தி­னம் கூறி­ய­தா­வது:  

2016–17ம் ஆண்டு வெங்­காய விளைச்­சல் 209 லட்­சம் டன்­னாக இருந்­தது. ஆனால், இந்த ஆண்டு 215 லட்­சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது. நாட்­டின் தேவைக்கு போது­மான அளவு வெங்­காய விளைச்­சல் உள்­ளது.   வெங்­காய ஏற்­று­ம­தியை கட்­டுப்­ப­டுத்த வேண்­டும். வெங்­கா­யம் ஏற்­று­ம­திக்­கான குறைந்­த­பட்ச விலையை டன்­னுக்கு 450 டால­ராக (ரூ. 29 ஆயி­ரம்) குறைக்­க­வேண்­டும். ஏற்­று­ம­திக்­கான குறைந்­த­பட்ச விலை குறை­வாக இருந்­தால் ஏற்­று­மதி குறை­யும். 2015 டிசம்­ப­ரில் இது­போல் வெங்­காய ஏற்­று­ம­திக்­கான குறைந்­த­பட்ச விலை குறைக்­கப்­பட்­டது.  காரீப் பருவ வெங்­காய விளைச்­சல் அடுத்த மாதத்­தில் இருந்து சந்­தைக்கு வரத்­தொ­டங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.   இவ்­வாறு பாஸ்­வான் கூறி­னார்.