ப்ரோ கபடி தொடர் பார்­சூன்­ஜெ­யின்ட்ஸ் வெற்றி

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:18


அக­ம­தா­பாத்

இந்­தி­யா­வில் கபடி விளை­யாட்டை பிர­ப­லப்ப­ டுத்து ­வதற்­காக ப்ரோ கபடி தொடர் தொடங்­கப்­பட்டு, நடை­பெற்று வரு­கி­றது. இந்­தக் கப­டித் தொட­ரில் இப்­போது லீக் சுற்­று­கள் முடி­வ­டை­யும் நிலை­யில் உள்­ளன. ஏ மற்­றும் பி பிரி­வு­க­ளில் தலா 6 அணி­கள் வீதம் மொத்­தம் 12 அணி­கள் மோது­கின்­றன. நேற்று முன்­தி­னம் இரவு ஏ பிரி­வில் உள்ள பார்­சூன் ஜெயின்ட்ஸ் மற்­றும் மும்பா அணி­க­ளுக்கு இடையே 23வது ஆட்­டம் நடை­பெற்­றது. இதில், பார்­சூன் ஜெயின்ட்ஸ் அணி 39-–21 என்ற புள்­ளி­கள் கணக்­கில் மும்பா அணி­யைத் தோற்­க­டித்­தது. இதன் மூலம் புள்­ளி­கள் பட்­டி­ய­லில் பார்­சூன் ஜெயின்ட்ஸ் அணி 2 வெற்றி ஒரு தோல்­வி­யு­டன் 1:3 புள்­ளி­கள் பெற்று முத­லி­டத்­தில் உள்­ளது. புனேரி பால்­டன் அணி 2 வெற்றி ஒரு தோல்­வி­யு­டன் 1:1 புள்­ளி­கள் பெற்று 2ம் இடத்­தில் உள்­ளது. மும்பா அணி 1:0 புள்­ளி­க­ளு­டன் 3ம் இடத்­தில் உள்­ளது. நேற்று இரவு பி பிரி­வில் உள்ள தெலுகு டைடன்ஸ், யு.பி. யோதா அணி­க­ளுக்கு இடையே 24வது லீக் போட்டி தொடங்­கி­யது.

ப்ரோ கப­டித் தொட­ரில் பி பிரி­வில் உள்ள டெண்­டுல்­க­ரின் தமிழ் தலை­வாஸ் அணி, ஒரு வெற்றி, 2 தோல்­வி­க­ளு­டன் 7 புள்­ளி­கள் பெற்று, புள்­ளிப் பட்­டி­ய­லில் கடைசி இடத்­தில் உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.