நான் விளை­யா­டு­ற­துல உங்­க­ளுக்கு என்ன சிர­மம்

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:16


பல்­லெ­கெலெ : 

இந்­தியா - இலங்கை அணி­க­ளுக்கு இடை­யே­யான 3வது டெஸ்ட் போட்டி தொடங்­கும் முன்­னர், இந்­திய கேப்­டன் கோலி நிரு­பர்­களை சந்­தித்­தார். முன்­ன­தாக, டெஸ்ட் போட்­டிக்கு பின்­னர் தொடங்­க­வுள்ள 5 ஒரு நாள் போட்­டி­க­ளில் அஸ்­வின், ஜடே­ஜா­வுக்கு ஓய்வு கொடுக்­க­வுள்­ள­தாக செய்­தி­கள் வெளி­யா­னது. இதில் மன­தில் வைத்­துக் கொண்டு நிரு­பர்­கள் சிலர், ‘சார், நீங்­கள் ஒரு நாள் தொட­ரில் பங்­கேற்­கப் போவது இல்லை என்­கி­றார்­களே? இது உண்­மையா? என்­ற­னர்.

கேட்­ட­தும் கொதித்­துப் போனார் கோலி. ‘ நான் விளை­யா­வில்லை என்று உங்­க­ளுக்கு யார் சொன்­னது. இது­போன்ற பேச்­சு­கள் எங்­கி­ருந்து வரு­கின்­றன என்று எனக்­குத் தெரி­யாது. ஆனால், நான் விளை­யா­டு­வ­தில் உங்­க­ளுக்கு விருப்­பம் இல்­லா­விட்­டால், அதை என்­னி­டம் நீங்­கள் சொல்­லி­வி­ட­லாம். இதில் எந்த ஒரு பிரச்­னை­யும் இல்லை’ என்று கூறி­விட்டு கோபத்­து­டன் வெளி­யே­றி­னார். இதற்­கி­டையே, இந்­திய அணி­யின் வீரர்­க­ளில் ஒரு­வ­ரான சுரேஷ்­ரெய்னா, ஆம்ஸ்­டர்­டாம் நக­ரில் 2 மாத பயிற்­சிக்­குப் பின்­னர் நாடு திரும்­பி­யுள்­ளார். இப்­போது தேசிய கிரிக்­கெட் அகா­ட­மி­யில் உள்­ளார். தன் நெருங்­கிய நண்­பர் தோனிக்கு அவர் அனுப்­பிய டுவிட்­டர் செய்­தியில், இலங்­கைக்கு எதி­ரான ஒரு­நாள் தொட­ரில் பங்­கேற்­க­வுள்­ள­தாக தெரி­வித்­தார். ஞாயிற்­றுக் கிழமை தேர்­வுக் குழு­வி­னர் இது­கு­றித்து அறி­விப்பு செய்­வார்­கள் என்று தனக்கு தக­வல் கிடைத்­த­தாக ரெய்னா, தன் டுவிட்­டில் தெரி­வித்­துள்­ளார். ரெய்னா கடந்த 2015ம் ஆண்டு அக்­டோ­ப­ருக்­குப் பின்­னர் ஒரு­நாள் போட்­டி­க­ளில் பங்­கேற்­க­வில்லை.

இது­கு­றித்து பேசிய பிசி­சிஐ அதி­கா­ரி­கள், ‘ரெய்னா அபா­ர­மான ஆட்­டக்­கா­ரர். பல போட்­டி­க­ளில் அவ­ரது ஆட்­டம் அணிக்கு வெற்­றி­யைக் கொடுத்­துள்­ளது. டெஸ்ட் தொட­ருக்­குப் பின்­ன­ரான ஒரு­நாள் போட்­டி­க­ளில் அவர் விளை­யா­டு­வார். எதிர்­வ­ர­வுள்ள 2019ம் ஆண்டு உல­கக்­கோப்பை போட்­டி­யில், அவர் ஒரு பிர­தான ஆட்­டக்­கா­ர­ராக இருப்­பார்’ என்­ற­னர்.