10 ஆயிரம் பள்ளிகளில் கழிவறை

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 08:14


ஊட்டி:

‘தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10 ஆயிரம் பள்ளிகளில் கழிவறை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,’என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

எம்ஜிஆர் நுõற்றாண்டு விழா நடத்துவது தொடர்பாக ஊட்டி தமிழக மாளிகையில் அமைச்சர்கள் செங்கோட்டையன்,  சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது:

பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து 3 குழுக்கள் அமைக்கப்படும்.  இதில் 8 முன்னாள் துணைவேந்தர்கள், மயில்சாமி அண்ணாதுரை போன்ற விஞ்ஞானிகள் மற்றம் வல்லுநர்கள் அடங்குவர்.  இவர்கள் 2 மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள், அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.  தமிழகத்தில் 10 ஆயிரம் பள்ளிகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்படும்.  3 ஆயிரம் பள்ளிகளில் தலா 2 லடசம் செல்வில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 320 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டும்.  இந்தாண்டுடன் சேர்த்து 640 கோடி ரூபாயாக கிடைக்கும். நீட் தேர்வில் 3 ஆண்டுகள் விலக்கு அளிக்க கேட்டுள்ளோம். தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் போட்டியிட் 54 ஆயிரம் கேள்வி பதில்கள் அடங்கிய ‘சிடி’ வழங்கப்படும். அதே போல் 405 மையங்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் ரத்து செய்யப்படும். தற்போது 2 ஆயிரத்து 505 பள்ளிகளுக்கு தகுதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. என்றார்.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: பாஜ அரசுடன் இணக்கமாக இருந்தால்தான்,  நிதி கிடைக்கும் அதற்காகத்தான் இணக்கமாக இருக்கிறோம்.  நான் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பக்கம்தான். 60 ஆண்டுகளாக சில்வர்ஓக் மரங்கள் வெட்டப்படாமல் உள்ளது. அவைகளை வெட்டினால் தான் தேயிலை சிறப்பாக வளரும். என்றார்.