கண்டி டெஸ்ட்: இந்தியா ரன் குவிப்பு

பதிவு செய்த நாள் : 13 ஆகஸ்ட் 2017 07:26


கண்டி:

இலங்கை அணிக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்­டில், ஷிகர் தவான் சதம் அடித்து கைகொ­டுக்க இந்­தியா முதல் இன்­னிங்­சில் 6 விக்­கெட் இழப்­புக்கு 329 ரன்­கள் குவித்­தது.

இலங்கை சென்­றுள்ள இந்­திய அணி மூன்று போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொட­ரில் பங்­கேற்­கி­றது. முதல் இரு டெஸ்­டில் இமா­லய வெற்றி பெற்ற இந்­திய அணி, 2–0 என, முன்­னிலை பெற்­ற­தோடு தொடரை கைப்­பற்­றி­யது. இந்த நிலை­யில், இரு அணி­கள் மோதும் மூன்­றா­வது மற்­றும் கடைசி டெஸ்ட், கண்­டி­யில் உள்ள பல்­லே­கெலே மைதா­னத்­தில் நேற்று துவங்­கி­யது. முதல் இரு டெஸ்ட் போட்­டி­களை தொடர்ந்து, மூன்­றா­வ­தாக ‘டாஸ்’ வென்ற இந்­திய அணி கேப்­டன் விராத் கோஹ்லி, வழக்­கம் போல பேட்­டிங் தேர்வு செய்­தார். இந்­திய அணி­யில் தடை செய்­யப்­பட்ட ஜடே­ஜா­வுக்­குப் பதில் சைனா­மேன் பவு­லர் குல்­தீப் யாதவ் சேர்க்­கப்­பட்­டார். இலங்கை அணி­யில் காய­ம­டைந்த ஹெராத், பிர­தீப் மற்­றும் தனஞ்­செய டிசில்­வா­வுக்­குப் பதில் சைனா­மேன் பவு­லர் லக்­சன் சண்­ட­கன், லகிரு குமாரா, விஷ்வா பெர்­னாண்டோ சேர்க்­கப்­பட்­ட­னர்.

இந்­திய அணிக்கு ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஜோடி நல்ல துவக்­கம் கொடுத்­தது. வழக்­கம் போல் தவான் அதி­ர­டி­யில் இறங்கி அசத்­தி­னார். 10வது ஓவ­ரில் இந்­தியா 50 ரன் கடந்­தது. தொடர்ந்து விளா­சிய தவான் 45 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். மறு­மு­னை­யில் ராகுல் பொறுப்­பு­டன் விளை­யாடி வந்­தார். 18வது ஓவ­ரில் இந்­தியா 100 ரன் கடந்­தது. இரு­வ­ரும் தொடர்ந்து ரன் வேட்­டை­யில் இறங்­கி­னர். ராகுல் 67 பந்­தில் அரை­ச­தம் அடித்­தார். இது டெஸ்ட் கிரிக்­கெட்­டில் இவர் பதிவு செய்­யும் 9வது அரை­ச­த­மா­கும். முதல் விக்­கெட்­டுக்கு 188 ரன்­கள் சேர்த்த நிலை­யில், சிக்­ச­ருக்கு ஆசைப்­பட்ட ராகுல், புஷ்­ப­கு­மாரா ‘சுழ­லில்’ சிக்­கி­னார். சதம் அடிப்­பார் என எதிர்­பார்த்த நிலை­யில், இவர் 85 ரன் (135 பந்து, 8 பவுண்­டரி) எடுத்­தார்.

ராகுல் சதத்தை தவற விட்ட போதும் நேற்று புதிய இலக்கை அடைந்­தார். இவர் நேற்று அடித்த அரை­ச­தம் மூலம் டெஸ்ட் கிரிக்­கெட்­டில் தொடர்ச்­சி­யாக 7 அரை­ச­தங்­கள் (90, 51, 67, 60, 51, 57, 85) அடித்து, உலக சாத­னையை  சமன் செய்­தார். இதற்கு முன், எவர்­டன் வீக்ஸ் (வெ. இண்­டீஸ்), ஆன்டி பிள­வர் (ஜிம்­பாப்வே), சந்­தர்­பால் (வெ. இண்­டீஸ்), சங்­க­கரா (இலங்கை), கிறிஸ் ரோஜர்ஸ் (ஆஸி.,) என, 5 பேர் இது போல 7 அசை­ச­தம் அடித்­த­னர்.

தொடர்ந்து அசத்­திய ஷிகர் தவான் இத்­தொ­ட­ரில் இரண்­டா­வது சதம் அடித்­தார். 107 பந்­தில் சதம் அடித்­தார். இது டெஸ்ட் கிரிக்­கெட்­டில் இவ­ரது 5வது சத­மாக அமைந்­தது. 42வது ஓவ­ரில் இந்­தியா 200 ரன் கடந்­தது. தொடர்ந்து அசத்­திய புஷ்­ப­கு­மாரா, தவான் விக்­கெட்டை வீழ்த்­தி­னார். தவான் 119 ரன் (123 பந்து, 17 பவுண்­டரி) ஆட்­ட­மி­ழந்­தார். புஜாரா 8 ரன்­னில் ஆட்­ட­மி­ழந்து அதிர்ச்சி கொடுத்­தார். அடுத்­த­டுத்து இரண்டு விக்­கெட்­டு­கள் சரிய ஆட்­டம் பர­ப­ரப்­பா­னது.

இந்த நிலை­யில், கேப்­டன் விராத் கோஹ்­லி­யு­டன் ரகானே இணைந்­தார். இரு­வ­ரும் நிதா­ன­மாக வி¬ளாடி வந்­த­னர். ரகானே 17 ரன் எடுத்த நிலை­யில் புஷ்­ப­கு­மாரா பந்­தில் வெளி­யே­றி­னார். அரை­ச­தம் அடிப்­பார் என எதிர்­பார்த்த நிலை­யில், கோஹ்லி ஏமாற்­றி­னார். இவர் 42 (84 பந்து, 3 பவுண்­டரி) ரன் எடுத்து சண்­டி­கன் பந்­தில் பெவி­லி­யன் திரும்­பி­னார். பின் அஷ்­வி­னு­டன் விக்­கெட்­கீப்­பர் சகா ஜோடி சேர்ந்­தார். 84வது ஓவ­ரில் இலங்கை கேப்­டன் சண்­டி­மால் 2வது புதிய பந்தை எடுத்­தார். இதற்கு நல்ல பலன் கிடைத்­தது. பெர்­னாண்டோ வேகத்­தில் அஷ்­வின் (31) சரிந்­தார். அடுத்து பாண்ட்யா வந்­தார். இவர் ஒரு ரன் எடுத்த நிலை­யில் முதல் நாள் ஆட்­டம் முடி­வுக்கு வந்­தது. அப்­போது இந்­தியா தனது முதல் இன்­னிங்­சில் 6 விக்­கெட் இழப்­புக்கு 329 ரன்­கள் எடுத்­தது. சகா (13), பாண்ட்யா (1) ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்­த­னர். இலங்கை தரப்­பில் புஷ்­ப­கு­மாரா அதி­க­பட்­ச­மாக 3 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­னார். சண்­ட­கன் 2, பெர்­னாண்டோ 1 விக்­கெட் சாய்த்­த­னர். முதல் நாள் ஆட்­டம் இந்­தி­யா­வுக்கு சாத­க­மாக அமைந்­தது.