பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய அமித் ஷா அழைப்பு

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 21:54

புதுடில்லி

பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

“ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமாரை நேற்று என் இல்லத்தில் சந்தித்துப் பேசினேன். அவரது கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைய அழைப்பு விடுத்துள்ளேன்” என்று அமித் ஷா டுவிட்டரில் இன்று பதிவு செய்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய நிர்வாகிகளின் கூட்டத்தின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அக்கடசியினர் இடம்பெற வாய்ப்புள்ளது.
“மோடியின் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது இயற்கையான ஒன்று” என ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்தார். இதன்மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதில் கட்சியினருக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.