‘பிக் 3’ஐ வென்றால்தான் நம்பிக்கை பிறக்கும்: சாய் பிர­னீத்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 09:17


புது­டில்லி : 

உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் வரும் 21ம் தேதி ஸ்காட்­லாந்­தில் உள்ள கிளாஸ்கோ நக­ரில் தொடங்­க­வுள்­ளது. டென்­னிஸ் உல­கின் ஆண், பெண் முன்­னணி வீரர்­கள் இதில் பங்­கேற்­கின்­ற­னர். இந்­தி­யா­வில் இருந்து சிந்து, சானியா, சாய்­பி­ர­னீத், ஜெய­ராம், பிர­னோய், காஷ்­யப், ஸ்ரீகாந்த் போன்ற வீரர்­கள் பங்­கேற்­கின்­ற­னர். இந்­நி­லை­யில், சாய் பிர­னீத் டில்­லி­யில் நிரு­பர்­க­ளி­டம் பேசும்­போது, ‘நடை­பெ­ற­வுள்ள உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­க­ளில் இந்த முறை களை­கட்­டப்­போ­கி­றது. பேட்­மின்­டன் உலகை ஆட்­டிப் படைக்­கும் லின் டான், லீ சோங் வெய் மற்­றும் சென் லாங் பேட்­மின்­டன் உல­கின் மும் மூர்த்­தி­கள் என­லாம். இதில் லீ சாங் வெய் உல­கத் தரப் பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் உள­ளார். லின் டான் 5 முறை சாம்­பி­யன் பட்­டம் வென்­றுள்­ளார். பொது­வாக லின்­டான், சென் லாங் மற­றும் லீ சோங் வெய் ஆகி­யோர் எப்­போ­துமே இது­போன்ற சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­களை குறி­வைத்தே தயா­ரா­கின்­ற­னர். நாம் அவர்­களை சூப்­பர் சீரிஸ் போட்­டி­க­ளல் வென்­றுள்­ளோம். இது இந்­திய வீரர்­க­ளுக்கு புது நம்­பிக்­கை­யைக் கொடுத்­துள்­ளது. ஆனால், இதெல்­லாம் அவர்­க­ளுக்கு ஒரு சப்­ஜெக்டே இல்லை. கார­ணம், இதை­விட சிறந்த வெற்­றி­களை அவர்­கள் பெற்­றுள்­ள­னர். சென்­லாங் சூப்­பர் சீரிஸ் தொடர்­க­ளில் வெல்­லா­விட்­டா­லும், ரியோ ஒலிம்­பிக்­கில் தங்­கம் வென்­றார். லீ சோங்­கும் கூட சூப்­பர் சீரிஸ் போட்­டி­க­ளில் வெற்­றி­பெ­றா­விட்­டா­லும், ஆல் இங்­கி­லாந்து பட்­டம் வென்­றார். சுருக்­க­மாக சொன்­னால் சூப்­பர் சீரிஸ் தொடர்­க­ளின் வெற்றி, ஒரு வீரரை மதிப்­பீடு செய்­வ­தற்­கான அள­வீ­டாக இருக்­காது. இது­போன்ற பெரிய போட்­டி­க­ளில் குறிப்­பிட்ட 3 பேரை வெற்றி கொண்­டால் மட்­டுமே, அவர்­க­ளும் வீழ்த்­தக் கூடி­ய­வர்­களே என்ற நம்­பிக்கை பிறக்­கும்’ என்­றார்.