தட­கள இறு­தி­யில் தேவிந்­தர்­சிங்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 09:16


லண்­டன் :

 இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­ட­னில் சர்­வ­தேச தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. உல­கம் முழு­வ­தும் இருந்து தட­கள வீரர்­கள் இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்று தங்­கள் திற­மையை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். இந்­தி­யா­வில் இருந்­தம் 24 பேர் கொண்ட குழு­வி­னர் லண்­டன் போட்­டி­க­ளில் பங்­கேற்­றுள்­ள­னர். இது­வரை நடை­பெற்ற 100, 200 மற்­றும் 5 ஆயி­ரம் மீட்­டர் உட்­பட அனைத்­துப் போட்­டி­க­ளி­லும் இந்­திய வீரர்­கள் தகு­திச் சுற்­றுப் போட்­டி­க­ளில் வெளி­யே­றி­னர். குட்­டித் குட்­டித் தீவு­க­ளைப் போன்ற நாடு­கள் எல்­லாம் பதக்­கத்தை குவிக்க, இந்­திய வீரர்­க­ளால் வேடிக்கை மட்­டுமே பார்க்க முடிந்­தது.

இந்­நி­லை­யில், நேற்று அதி­காலை ஆண்­கள் ஈட்டி எறி­யும் போட்­டிக்­கான பி பிரிவு தகு­திச் சுற்­றுப் போட்­டி­கள் தொடங்­கின. இந்­தப் போட்­டி­யில் இந்­திய வீரர் தேவிந்­தர் சிங் காங் கலந்து கொண்­டார். தோள் பட்­டை­யில் லேசான காயத்­தால் அவ­திப்­பட்­டுக் கொண்­டு­தான் அவர் களத்­தில் கால் வைத்­தார். மொத்­தம் 3 வாய்ப்­பு­கள் வழங்­கப்­ப­டும். இதில் ஈட்டி எறி­யும் இலக்­காக 83 மீட்­டர் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. தேவிந்­தர்­சிங் வீசிய முதல் ஈட்டி 82.22 மீட்­டர் தூரம் பாயந்­தது. கொஞ்­சம் உற்­சா­கம் ஆன அவர், இரண்­டா­வது சுற்­றில் எறிந்த ஈட்டி 82.14 மீட்­டர் தூரம் பாய்ந்­தது. முதல் முயற்­சி­யை­விட, இரண்­டா­வது முயற்­சி­யில் தூரம் குறைந்­த­தால் தேவிந்­தர் சிங் மன­வ­ருத்­தம் அடைந்­தார். ஆனா­லும் 3 வது முயற்­சி­யில் தன் முழு திற­னை­யும் வெளிப்­ப­டுத்தி அவர் ஈட்­டியை வீசி­னார். இந்த வீச்சு முத்­தாய்ப்­பான வீச்­சாக அமைந்­தது. முதல் மற்­றும் இரண்­டா­வது முயற்­சி­யை­விட, 3வது வீச்­சில் 84.22 மீட்­டர் தூரத்­துக்கு ஈட்­டிப் பாய்ந்­தது. இத­னால் உற்­சா­கத்­தில் ஸ்தம்­பித்து நின்­றார். தேவிந்­தர் சிங் இறு­திச் சுற்­றுக்கு செல்­கி­றார்.

இந்­தி­யா­வின் மற்­றொரு ஈட்டி எறி­யும் வீர­ரான நீரஜ் சோப்ரா தகு­திச் சுற்­றுப் போட்­டி­யில் 82.26 மீட்­டர் தூரம் மட்­டுமே எறிந்து, போட்­டி­யில் இருந்து வெளி­யே­றி­னார்.