பெட­ரர் முன்­னே­றி­னார் நடால் வெளி­யே­றி­னார்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 09:15


மாண்ட்­ரீல் :

 கனடா நாட்­டின் மாண்ட்­ரீல் நக­ரில் நடை­பெற்று வரும் கனடா ஓபன் டென்­னிஸ் போட்­டி­க­ளில் டென்­னிஸ் உல­கின் பிர­பல நட்­சத்­தி­ரங்­கள் பங்­கேற்று விளை­யாடி வரு­கின்­ற­னர். நேற்று ஆண்­கள் ஒற்­றை­யர் பிரி­ரிவு தகு­திச் சுற்று ஆட்­டங்­கள் நடை­பெற்­றன. இதில் ஸ்பெயின் நாட்­டின் ராபெல் நடால், கன­டா­வின் டெனிஸ் ஷபோ­வா­லோவை எதிர்த்து விளை­யா­டி­னார். டெனிஸ் டென்­னிஸ் களத்­தில் இளை­ய­வர் என்­றா­லும், நாடுக்கு சரி­யான நெருக்­க­டி­யைக் கொடுத்­தார். நடால் 6-3 என்ற புள்­ளி­கள் கணக்­கில் முதல் செட்டை கைப்­பற்­றி­னார். ஆனால், அவ­ருக்கு அதிர்ச்சி வைத்­தி­யம் கொடுத்த டெனிஸ் இரண்­டாம் சுற்றை 4-6 என்ற புள்­ளி­கள் கணக்­கி­லும், 3ம் சுற்றை 6-7 என்ற புள்­ளி­கள் கணக்­கி­லும் கைப்­பற்­றி­னார். டெனிஸ் 6-3, 4-6, 6-7 என்ற புள்­ளி­கள் கணக்­கில் நடாலை வெளி­யேற்­றி­னார். எதிர்­பா­ராத இந்­தத் தோல்­வி­யால் நடால் அதிர்ச்­சி­ய­டைந்­தார். டெனிஸ் காலி­று­திக்­குத் தகுதி பெற்­றுள்­ளார்.

மற்­றொரு ஒற்­றை­யர் பிரிவு ஆட்­டத்­தில் சுவிட்­சர்­லாந்­தின் ரோஜர் பெட­ரர், ஸ்பெயின் நாட்­டின் டேவிப் பெரரை எதிர்த்த விளை­யா­டி­னார். இதில், முதல் செட்டை பெரர் 6-4 என்ற புள்­ளி­கள் கணக்­கில் கைப்­பற்­றி­னார். பெர­ரின் ஆட்­டம் அபா­ர­மாக இருந்­தது. எனி­னும், ரோஜர் பெட­ர­ரின் நீண்ட அனு­ப­வத்­துக்கு முன்­னால், பெரர் தாக்­குப் பிடிக்க முடி­ய­வில்லை. 2வது செட் ஆட்­டத்தை 4-6 என்ற புள்­ளி­கள் கணக்­கி­லும், 3வ சுற்று ஆட்­டத்தை 4-6 என்ற புள்­ளி­கள் கணக்­கி­லும் பெட­ரர் கைப்­பற்­றி­னார். இத­னால் பெட­ரர் 6-4, 4-6, 4-6 என்ற செட் கணக்­கில் வெற்­றி­பெ­றறு காலி­று­தி­யில் நுழைந்­தார். பெட­ரர் தன் காலி­று­திப் போட்­டி­யில் ஸ்பெயின் நாட்­டின் பவு­திஸ்­டாவை எதிர் கொள்­கி­றார்.