லண்­டன் தட­கள சாம்­பி­யன்­ஷிப் துளி­கள்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 09:14

லண்­டன் தட­கள சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­யில் நேற்­றைய நாளில் 3 பிரி­வு­க­ளில் மட்­டுமே இறு­திப் போட்­டி­கள் நடந்­தது. பட்­டி­ய­லி­டப்­பட்ட 10 போட்­டி­க­ளில் மற்ற 7 போட்­டி­க­ளும் தகு­திப் போட்­டி­க­ளாக இருந்­தன.

ஆண்­க­ளுக்­கான டிரி­பிள் ஜம்ப் போட்­டி­யில் அமெ­ரிக்­கா­வின் கிறிஸ்­டி­யன் டெய்­லர் 17.68 புள்­ளி­கள் பெற்று தங்­க­மும், அதே நாட்­டைச் சேர்ந்த வில் கிலே 17.63 புள்­ளி­கள் பெற்று வெள்­ளி­யும், போர்ச்­சுக்­கல் நாட்­டின் நெல்­சன் எவேரா 17.19 புள்­ளி­கள் பெற்று வெண்­க­ல­மும் வென்­ற­னர்.

பெண்­கள் 400 மீட்­டர் தடை தாண்­டும் ஓட்­டப் போட்­டி­யில் அமெ­ரிக்­கா­வின் கொரி கார்­டர் பந்­தய தூரத்தை 53.07 நொடி­க­ளில் கடந்து தங்­கம் வென்­றார். அதே நாட்­டைச் சேர்ந்த தலிலா முக­மத் 53.50 நொடி­க­ளில் இலங்கை கடந்து வெள்­ளி­யும், ஜமைக்­கா­வைச் சேர்ந்த ரிஸ்­டான்னா டிரேசி 53.74 நொடி­க­ளில் இலக்கை கடந்து வெண்­க­ல­மும் வென்­ற­னர்.

ஆண்­கள் 200 மீட்­டர் ஓட்­டத்­தில் துருக்­கி­யின் ரமீல்­கு­லிவ் இலக்கை 20.09 நொடி­க­ளில் தொட்டு தங்­கம் வென்­றார். ரஷ்­யா­வின் வயாடெ வான் நெய்­கெர்க் 20.11 நொடி­க­ளில் இலங்கை தொட்டு வெள்­ளிப் பதக்­கம் வென்­றார். டிரி­னி­டாட் தீவின் ஜெரீன் ரிச்­சர்ட்­சும் 20.11 நொடி­க­ளில் இலக்­கைத் தொட்­டார். ஆனா­லும், அவ­ருக்கு 3ம் இடம் கிடைத்­தது.