பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பிரதமர் மோடி சந்திப்பு

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017 01:58

புதுடில்லி

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்து பேசினார்.


சென்ற ஜூலை 26 ஆம் தேதி ராஷ்டிரய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸின் ஆதரவை நிராகரித்து பீகார் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகினார் நிதீஷ் குமார். மறுநாளே பாஜக-வின் ஆதரவோடு முதலமைச்சர் பதவியில் மீண்டும் நிதீஷ் பொறுப்பேற்றார். இதற்கிடையில் நிதீஷ் குமார் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்து பேசியுள்ளார்.

”மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை நான் சந்தித்துள்ளேன். இந்த மாதம் மற்றொரு நாள் நான் டில்லி வந்து சந்திக்கவுள்ளேன். பீகார் மாநில பிரச்சனைகள் குறித்தும், வளர்ச்சிக்கான வழி குறித்தும் பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளேன்” என்று நிதீஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

 பின்னர் பாஜக தலைவர் அமித் ஷாவை நிதீஷ் குமார் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் நடப்பு அரசியல் பின்னடைவு, மாநிலத்தின் வளர்ச்சிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.