ராஜினாமா ஏன்?

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017
நிதி ஆயோக்­கின் துணைத் தலை­வ­ராக இருந்த அர­விந்த் பனா­கா­ரியா (64), துணைத் தலை­வர் பத­வியை ராஜி­னாமா செய்­துள்­ளார். இவ­ருக்கு பதி­லாக ராஜூவ் குமார் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இந்­தியா சுதந்­தி­ரம் அடைந்­த­தில் இருந்து இயங்கி வந்த திட்­டக்­க­மி­ஷன், பார­திய ஜன­தா­வின் சார்­பில் பிர­த­மர் நரேந்­திர மோடி ஆட்­சிக்கு வந்­த­தும் கலைக்­கப்­பட்­டது. அதற்கு பதி­லாக “நிதி ஆயோக்” [National Institution for Transforming India or the NITI Aayog]  அமைக்­கப்­பட்­டது. அப்­போது சந்தை பொரு­ளா­தார யுகத்­தில் சோவி­யத் யூனி­ய­னில் (ரஷியா) இருப்­பது போன்று ஐந்­தாண்டு திட்­ட­மி­ட­லுக்கு, திட்­டக் கமி­ஷன் பொருந்­தாது. மாறி வரும் சர்­வ­தேச பொரு­ளா­தார சூழ­லுக்­கேற்­ற­படி புதிய அமைப்பு உரு­வாக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டது. மத்­திய அர­சின் அமைச்­ச­ர­வைத் தீர்­மா­னத்­தின் படி, 2015, ஜன­வரி மாதம் நிதி ஆயோக் அமைக்­கப்­பட்­டது. இதன் தலை­வர் பிர­த­மர். நிதி ஆயோக் முதல் துணை தலை­வ­ராக, இந்­தி­ய–-­அ­மெ­ரிக்­க­ரான பிர­பல பொரு­ளா­தார நிபு­ணர் அர­விந்த் பனா­கா­ரியா நிய­மிக்­கப்­பட்­டார்.  

பிர­த­மர் மோடிக்கு, அர­விந்த் பானா­க­ரியா எழு­தி­யுள்ள கடி­தத்­தில், என்னை பணி­யில் இருந்து ஆகஸ்ட் 31-ம் தேதிக்­குள் விடு­வித்­து­வி­டுங்­கள் என கேட்­டுக் கொண்டு உள்­ளார். அமெ­ரிக்­கா­வில் உள்ள கொலம்­பிய பல்­கலை கழ­கத்­தில் பொரு­ளா­தார பேரா­சி­ரி­ய­ராக இருந்த அர­விந்த் பனா­கா­ரியா, சர்­வ­தேச மற்­றும் பொது விவ­கார துறை­யின் இந்­திய அர­சி­யல் பொரு­ளா­தா­ரத்­தின் பேரா­சி­ரி­ய­ராக இருந்­தார். கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இருந்து கூடு­த­லாக விடு­முறை கிடைக்­க­வில்லை. எனவே நிதி ஆயோக் துணைத் தலை­வர் பொறுப்­பில் இருந்து விடு­விக்­கு­மாறு அவர் கூறி­யுள்­ளார்.

இந்த ராஜி­னாமா முடிவு குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அர­விந்த் பனா­கா­ரியா, “கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கம் எனக்கு அதிக காலம் விடு­முறை அளிக்­க­வில்லை, நிதி ஆயோக்­கில் இருந்து ஆகஸ்ட் 31 வில­கு­கின்­றேன், நிதி ஆயோக்­கின் தலை­வ­ரான பிர­த­மர் மோடி­யி­டம், இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­ன­தா­கவே என்­னு­டைய விருப்­பத்தை தெரி­வித்­து­விட்­டேன் என கூறி­உள்­ளார்.  அவர் பேரா­சி­ய­ராக பணி­யாற்­றிய கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கம் அவ­ருக்கு 2 ஆண்­டு­கள் விடு­முறை அளித்­தது. வரும் செப்­டம்­பர் மாதம் 5-ம் தேதி கொலம்­பியா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பேரா­சி­ரி­யர் பணியை தொடங்க உள்­ள­தா­க­வும் தெரி­வித்து உள்­ளார்.

பிரின்ஸ்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் டாக்­டர் பட்­டம் பெற்­ற­வர். ஆசிய மேம்­பாட்டு வங்கி, உலக வங்கி, ஐ.எம்.எப், உலக வர்த்­தக அமைப்பு ஆகி­ய­வற்­றில் முக்­கிய பொறுப்­பில் இருந்­த­வர். இவர் பொரு­ளா­தா­ரம் சார்ந்த பல புத்­த­கங்­களை எழு­தி­யுள்­ளார். மத்­திய அரசு அர­விந்த் பனா­கா­ரி­யா­வுக்கு, கடந்த 2012-ம் ஆண்டு ‘பத்­ம­பூ­ஷன்’ விருது வழங்கி கௌர­வித்­தது.

அர­விந்த் பனா­கா­ரியா ராஜி­னமா செய்­வ­தற்கு கார­ணம், நிதி ஆயோக் தலை­மைச் செயல் அதி­காரி அமி­தாப் காந்­துக்­கும், இவ­ருக்­கும் இடையே உர­சல் என்ற செய்­தி­க­ளும் வெளி­யாகி உள்­ளன. நிதி ஆயோக்­கில் இரு அதி­கார மையங்­கள் இருப்­ப­தால் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு என்ற ஊக­மும் உலா வரு­கின்­றன.    

ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக இருந்த ரகு­ராம் ராஜன் வில­கி­யதை அடுத்து, அர­விந்த் பனா­கா­ரியா ரிசர்வ் வங்கி கவர்­ன­ராக நிய­மிக்­கப்­ப­டு­வார் என்ற செய்­தி­கள் வெளி­யா­னது. ஆனால் இவர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. இவர் எப்­போ­தும் அமை­தி­யா­ன­வர். விளம்­பர பிரி­யர் அல்ல. ஆனால் நிதி ஆயோக்­கின் தலைமை செயல் அதி­காரி அமி­தாப் காந்த், விளம்­பர பிரி­யர், ஊட­கங்­க­ளில் அடிக்­கடி தலை­காட்­டு­ப­வர்.

அமெ­ரிக்­கா­வில் வாழும் பிர­பல பொரு­ளா­தார நிபு­ணர் ஜெக­தீஷ் பக­வதி போல், அர­விந்த் பனா­கா­ரி­யா­வும், மோடி­யின் பொரு­ளா­தார கொள்­கை­க­ளுக்கு பல­மான ஆத­ர­வா­ளர். நிதி ஆயோக் பொதுத்­துறை நிறு­வ­னங்­க­ளில் அர­சுக்கு சொந்­த­மான பங்­கு­களை விற்­பனை செய்­வது, இரவு ஷிப்­டில் பெண்­கள் வேலை பார்க்க அனு­மதி, விவ­சா­யம், சுகா­தா­ரம் போன்ற துறை­க­ளில் அர­சுக்கு வழங்­கும் ஆலோ­ச­னை­களை சுவா­தேசி ஜார்­கன்ஞ் மஞ்ச், பா.ஜ.வின் தொழிற்­சங்­க­மான பார­திய மஸ்­தூர் சங்க் போன்ற, ஆர்.எஸ்.எஸ் தொடர்­பு­டைய அமைப்­பு­கள் விமர்­ச­னம் செய்­தன. அர­விந்த் பனா­கா­ரியா இந்­திய நிலை­மை­களை தெரி­யா­மல் முடி­வு­களை எடுக்­கின்­றார் என்­றும் விமர்­ச­னம் எழுந்­தது. பெண்­கள் இரவு ஷிப்­டி­லும் வேலை பார்க்க அனு­ம­திக்­க­லாம் என்ற முடிவு பற்றி கருத்து தெரி­வித்த பார­திய மஸ்­தூர் சங்க், “ அமெ­ரிக்கா போன்ற மேற்­கத்­திய நாடு­க­ளைப் போல் அல்­லா­மல், இந்­திய பெண்­கள் அதிக அளவு வீட்டு வேலை­களை செய்­ப­வர்­கள். இரவு ஷிப்ட் என்­பது பெண்­க­ளுக்கு மேலும் சுமையை ஏற்­ப­டுத்­தும். நிதி ஆயோக்­கில் இடம் பெற்­றுள்ள யதார்த்த நிலையை அறி­யாத அறிவு ஜீவி­கள், அரசை தவ­றாக வழி நடத்­து­கின்­ற­னர்” என்று விமர்­சித்து இருந்­தது.

சென்ற வரு­டம் செப்­டம்­ப­ரில் சீனா­வில் உள்ள ஹாங்­ஜி­கோயு நக­ரில் ஜி20 மாநாட்­டின் போது, பூமி உஷ்­ண­மா­வதை கட்­டுப்­ப­டுத்­தும் பாரிஸ் மாநாட்­டின் முடி­வு­களை இந்­தியா 2016ம் ஆண்­டிற்­குள் அங்­கீ­ க­ரிக்க வாய்ப்­பில்லை என்று கூறி­யி­ருந்­தார். ஆனால் அதே மாதத்­தில் கேர­ளா­வில் உள்ள கோழிக்­கோடு நக­ரில் நடை­பெற்ற பா.ஜ.,வின் தேசிய குழு கூட்­டத்­தில், பாரிஸ் மாநாட்­டின் முடி­வு­க­ளுக்கு அக்­டோ­பர் மாதம் அங்­கீ­கா­ரம் வழங்­கப்­ப­டும் என்று கூறி­னார்.

நிதி ஆயோக்­கிற்­கும், மத்­திய அர­சின் மற்று துறை­க­ளுக்­கும் இடையே எழுந்த கருத்து வேறு­பாடு. பழைய திட்­டக்­க­மி­ஷ­னில் துணைத் தலை­வரே எல்லா முடி­வும் எடுப்­பார். ஆனால் நிதி ஆயோக்­கில் பல முக்­கி­ய­மான முடி­வு­களை, இதில் பொறுப்­பில் இருந்த உயர் அதி­கா­ரி­கள் எடுத்­த­னர். இத­னால் நிதி ஆயோக்­கில் பல அதி­கார மையங்­கள் உரு­வா­கி­யது. இது­வும் அர­விந்த் பனா­கா­ரியா ராஜி­னமா செய்­வ­தற்கு கார­ணம் என்று கூறப்­ப­டு­கி­றது.

பிர­த­மர் மோடி ஆயி­ரம் ரூபாய், 500 ரூபாய் நோட்­டுக்­கள் செல்­லாது என்று திடீ­ரென அறி­வித்­தார். அப்­போது அர­விந்த் பனா­கா­ரியா, பிர­த­மர் மோடிக்கு எழு­திய கடி­தத்­தில், இத­னால் பொது மக்­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். ரூ.2 லட்­சத்து 50 ஆயி­ரம் வரை வங்­கி­யில் பழைய ரூபாய் நோட்­டுக்­களை டிபா­சிட் செய்­ப­வர்­க­ளி­டம் எவ்­வித கேள்­வி­யும் கேட்­கக்­கூ­டாது என்று கூறி­யி­ருந்­தார். அத்­து­டன் மோடி அர­சின் இரண்டு வருட ஆட்­சி­யில், பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தம் சரி­யா­ன­படி மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்­தி­யி­லும் இருந்­தார்.  

அமைச்­சர் அந்­தஸ்­து­டன் இருந்த நிதி ஆயோக் துணைத் தலை­வர் அர­விந்த் பனா­கா­ரியா, மூன்று வருட செயல் திட்­டத்தை தயா­ரித்து வெளி­யிட்­டுள்­ளார். (இது நிதி ஆயோக் இணைய தளத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.) ஏழு வருட திட்­டம், பதி­னந்து வருட நீண்ட கால திட்­டம் ஆகி­யவை ஏறக்­கு­றைய தயா­ரிக்­கப்­பட்டு விட்­ட­தாக கூறி­யி­ருந்­தார். திட்­டக்­க­மி­ஷன் இருந்த போது, திட்­டங்­க­ளுக்­காக மாநி­லங்­க­ளுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­தது.

ஆனால் நிதி ஆயோக் மாநி­லங்­களே நிதி திரட்­டிக் கொள்ள அனு­மதி வழங்­கி­யது. மாநி­லங்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கும் பணியை மேற்­கொண்­டது. மாநி­லங்­க­ளுக்கு அர­விந்த் பனா­கா­ரியா ஆலோ­சனை வழங்­கி­னார். அதே நேரத்­தில் திட்­டக்­க­மி­ஷ­னுக்கு அதி­கா­ரம் இருந்­தது போல், நிதி ஆயோக்­கிற்கு அதி­கா­ரம் இல்லை.

***

நிதி ஆயோக் புதிய துணைத் தலை­வ­ராக பிர­பல பொரு­ளா­தார நிபு­ணர் ராஜூவ் குமார் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவர் சென்­டர் பார் பாலிசி ரிசர்ச் என்ற ஆய்வு நிறு­வ­னத்­தின் மூத்த ஆய்­வா­ளர். ரிசர்வ் வங்கி கவர்­னர், செபி தலை­வர் ஆகி­யோரை தேர்ந்­தெ­டுப்­ப­தில் பங்கு பெற்­ற­வர். பா.ஜ.,வின் பொரு­ளா­தார கொள்­கை­களை ஆத­ரிப்­ப­வர். உயர் மதிப்பு ரூபாய் நோட்டு செல்­லாது என்று மோடி அறி­வித்த போது, அதை பல பொரு­ளா­தார நிபு­ணர்­கள் விமர்­ச­னம் செய்­த­னர். அந்த நேரத்­தில் இந்த முடிவை பகி­ரங்­க­மாக ஆத­ரித்­த­வர்.

புனா­வில் உள்ள கோகலே இன்ஷ்­டி­யூட் ஆப் எக­னா­மிக்ஸ் அண்ட் பாலி­டிக்ஸ் என்ற நிறு­வ­னத்­தின் தலை­வ­ராக இருந்­த­வர். அர­சின் கொள்கை முடி­வு­களை பற்றி ஆய்வு செய்­யும் பகலே இந்­தியா பவுண்­டே­ச­னின் நிறு­வ­னர். இந்­தி­யா­வின் பெரும் பணக்­கா­ரர்­க­ளின் தொழில், வர்த்­தக நிறு­வ­னங்­க­ளின் அமைப்­பான பிக்கி, சி.ஐ.ஐ., ஆகி­ய­வற்­றி­லும் முக்­கிய பொறுப்பு வகித்­துள்­ளார். லக்­னோ­வில் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொரு­ளா­தா­ரத்­தில் பி.எச்டி., ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொரு­ளா­தா­ரத்­தில் டி.பிலா­சபி பட்­டம் பெற்­ற­வர். இந்­தி­யன் கவுன்­சில் பார் ரிசர்ச் ஆன் இன்­டர்­நே­ஷ­னல் எக­னா­மிக் ரிலே­சன் என்ற அமைப்­பின் இயக்­கு­ந­ரா­க­வும், தலைமை நிர்­வா­கி­யா­க­வும் இருந்­துள்­ளார்.