‘‘தேசிய தேர்வு வாரியம் அமைக்கப்படும்’’ – பிரகாஷ் ஜவடேகர்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017
மத்­திய அரசு புதிய தேசிய கல்வி கொள்­கையை வெளி­யிட உள்­ளது. இதை எப்­படி  அமல்­ப­டுத்­து­வது என்று கூற உயர் நிலை குழு அமைத்­துள்­ளது. இது பற்றி மத்­திய மனி­த­வள மேம்­பாட்­டுத்­துறை அமைச்­சர் பிர­காஷ் ஜவ­டே­கர், தற்­போ­தைய கல்வி முறை­யில் உள்ள பிரச்னை, இதற்கு தீர்வு காணும் வழி­கள் பற்றி அவுட்­லுக் நிரு­பர் புளா தேவி­யி­டம் அளித்த பேட்டி:

கே: கல்­வியை சீர­மைப்­ப­தற்கு அரசு திட்­டம் தீட்­டி­யுள்­ளதா?

ப: உயர் கல்வி சீர­மைப்­பிற்கு தர­மான கல்வி, சிறப்­பான ஆராய்ச்சி, புதி­யன கண்­டு­பி­டித்­தல் ஆகி­யவை முக்­கி­ய­மான விஷ­யங்­கள். அரசு புதி­தாக ஏழு ஐ.ஐ.எம்., ஆறு ஐ.ஐ.டி, ஒரு ஐ.ஐ.ஐ.டி, இரண்டு ஐ.ஐ.எஸ்.இ.ஆர், ஒரு என்.ஐ.டி, ஒரு மத்­திய பல்­க­லைக்­க­ழக்­கத்தை தொடங்­கி­யுள்­ளது. இவை எல்­லாம் நரேந்­திர மோடி­யின் மூன்­றாண்டு கால ஆட்­சி­யில் செய்­யப்­பட்­டுள்­ளது. இதற்கு முன் இல்­லாத வகை­யில் இவை தொடங்­கப்­பட்­டுள்­ளன. மத்­திய அர­சின் உத­வி­யு­டன் அமல்­ப­டுத்­தப்­ப­டும் ராஷ்ட்­ரிய உட்­சார் சிக்சா அபி­யான் திட்­டத்­தின் கீழ் மாநி­லங்­க­ளில் உயர் கல்­வி­யில் சீர்­தி­ருத்­தம் மேற்­கொள்­ள­வும், நிதி உத­வி­யும் வழங்­கப்­ப­டு­கி­றது.கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் தர­மான கல்வி வழங்க தேவை­யான வச­தி­களை ஏற்­ப­டுத்­த­வும், ஆராய்ச்சி கட்­ட­மைப்பு உரு­வாக்­க­வும் நிதி வழங்­கப்­ப­டு­கி­றது. கல்­லூ­ரி­க­ளுக்கு ரூ.2 கோடி­யும், பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு ரூ.20 கோடி­யும் வழங்­கப்­ப­டு­கி­றது. மொத்­தத்­தில் 1,366 கல்­லூரி,பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு ரூ.4,816 கோடி ஒதுக்­கி­யுள்­ளோம்.

இந்­தி­யா­வில் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் இடையே ஆரோக்­கி­ய­மான போட்­டியை உரு­வாக்க முதன் முறை­யாக  தேசிய தர நிர்­ண­யத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளோம். நாக் குழு பல்­க­லை­கங்­க­ளுக்கு அங்­கீ­கா­ரம் வழங்­க­வும், மதிப்­பீடு செய்­ய­வும், அதன் தரத்தை நிர்­ண­யம் செய்­யும் பணி­யில் உள்­ளது. இந்த பணி முடிந்­த­வு­டன் தரத்­திற்கு ஏற்­ற­வாறு பல்­க­லைக்­க­ழ­க­மும் தன்­னாட்சி அந்­தஸ்து பெறும்.

நாங்­கள் உலக தரம் வாய்ந்த 20 பல்­க­லைக்­க­ழ­கங்­களை அமைத்­துள்­ளோம். அதில் பாதி தனி­யார் பல்­க­லைக்­க­ழ­கங்­கள். இவை சமு­தாய மதிப்­பு­மிக்க உயர்­நிலை (Eminence) நிறு­வ­னங்­க­ளாக அழைக்­கப்­ப­டும். இவை பத்து வரு­டங்­க­ளில் சர்­வே­தச அள­வில் முதல் நிலை­யில் உள்ள 200 பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் இடம் பெற வேண்­டும் என்­பதே. ‘கியான்’ (கல்வி தக­வல் அமைப்பு–Global Initiative of Academic Networks-– GIAN) திட்­டத்­தின் கீழ், வெளி­நா­டு­க­ளைச் சேர்ந்த பேரா­சி­யர்­களை பாடம் நடத்த அழைக்­கின்­றோம். 2016–17ல் 58 நாடு­க­ளில் இருந்து 600 பேரா­சி­யர்­கள் தலா ஒரு பாடத்தை நடத்­தி­யுள்­ள­னர். இந்த வரு­டம் 800 பேரா­சி­ரி­யர்­கள் பாடம் நடத்த உள்­ள­னர்.

கே: உயர் கல்­விக்கு நிதி வழங்­கு­வது பற்றி…..

ப: நாங்­கள் உயர் கல்­விக்கு நிதி ஒதுக்­கு­வ­தற்­காக உயர் கல்வி நிதி நிறு­வ­னம் மூலம் பெரும் முயற்சி எடுத்­துள்­ளோம். இதற்­காக பட்­ஜெட்­டில் இருந்து ரூ.2 ஆயி­ரம் கோடி பெற்­றுள்­ளோம். கடன் பத்­திர சந்­தை­யில் இருந்து ரூ.18 ஆயி­ரம் கோடி திரட்ட உள்­ளோம். அடுத்த மூன்று வரு­டங்­க­ளில் ரூ.20 ஆயி­ரம் கோடி திரட்டி, உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளின் ஆராய்ச்சி

கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தி பயன்­ப­டுத்த உள்­ளோம். டிக்­யூப்பி (TEQUIP) திட்­டத்­தின் கீழ் தொழில்­நுட்ப கல்­வியை மேம்­ப­டுத்த உள்­ளோம். இதற்­காக மூன்­றா­வது கட்­டத்­தில் ரூ.2,600 கோடி ஒதுக்­கப்­ப­டும். இந்த நிதியை மாநி­லங்­க­ளில் மலைப்­ப­கு­தி­ளில் அமைந்­துள்ள பகு­தி­கள், வட­கி­ழக்கு மாநி­லங்­கள், அந்­த­மான், பீமரு மாநி­லங்­கள் என்று அழைக்­கப்­டும் உத்­த­ர­பி­ர­தே­சம், பீகார், ஜார்­கண்ட், ஒடிசா, மேற்கு வங்­கம், மத்­திய பிர­தே­சம், ராஜஸ்­தான் ஆகி­ய­வற்­றுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டும்.

இம்­பி­ரிண்ட் (Impacting Research Innovation & Technology) திட்­டத்­தின் கீழ் பத்து பிரி­வு­க­ளில் பேரா­சி­ரி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், மாண­வர்­கள், மற்­ற­வர்­க­ளி­டம் இருந்து ஆராய்ச்சி திட்­டங்­களை கேட்­டுள்­ளோம். இவற்­றில் 200 ஆராய்ச்சி திட்­டங்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும். இதற்­காக ரூ.600 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் மூன்று வரு­டத்­திற்­குள் ஆராய்ச்­சியை முடிக்க வேண்­டும்.

உச்­ச­தார் அவிஷ்­கார் யோஜனா (Uchchtar Avishkar Yojana) திட்­டம் தொழில் நிறு­வ­னங்­கள், கல்வி நிறு­வ­னங்­க­ளின் கூட்டு திட்­டம். இதன்­படி தொழில் நிறு­வ­னங்­கள் கொடுக்­கும் 100 திட்­டங்­களை ஐ.ஐ.டி பேரா­சி­ரி­யர்­க­ளும், மாண­வர்­க­ளும் இணைந்து செய்­வார்­கள். ஐ.ஐ.டி.,என்.ஐ.டி.,ஐ.ஐ.எம்.எஸ்., மத்­திய பல்­க­லைக்­க­ழங்­க­ளில் இன்­கு­பே­சன் தொடங்­கி­யுள்­ளோம். இதன்­படி புதிய தொழில்­நுட்­பத்தை கண்டு பிடிக்க, தொழில் முனை­வோரை ஊக்­கப்­ப­டுத்த மாண­வர்­கள் விடு­தி­யில் கூட ஸ்டார்ட்–­அப் தொடங்­க­லாம். ஏற்­க­னவே 600க்கும் மேற்­பட்ட ஸ்டார்ட்–­அப் செயல்­பட்டு வரு­கின்­றன.

கே: சென்ற வரு­டம் டில்லி ஐ.ஐ.டியில் பேரா­சி­ரி­யர் போன்ற 400 இடங்­கள் காலி­யி­ருந்­தன. இதே போல் மும்பை ஐ.ஐ.டி.,யிலும் காலி­யுள்­ளது. இந்த பேரா­சி­ரி­யர் பற்­றாக்­கு­றையை குறைக்க என்ன நட­வ­டிக்­கையை எடுத்­துள்­ளீர்­கள்?

ப: உயர் கல்வி நிறு­வ­னங்­க­ளில் 20 சத­வி­கித பத­வி­கள் காலி­யாக உள்­ளன. இதற்கு தீர்வு காணப்­ப­டும். வெளி­நா­டு­க­ளில் ஆராய்ச்சி செய்­யும் இந்­திய மாண­வர்­களை ஐ.ஐ.டி கவுன்­சில் அடை­யா­ளம் கண்­டுள்­ளது. இவர்­கள் தாய்­நாட்­டிற்கு திரும்ப அழைக்­கப்­ப­டு­வார்­கள்.

கே: இந்த முயற்சி எப்­போது தொடங்­கும்? இந்த ஆராய்ச்­சி­யா­ளர்­கள் எங்கு பேரா­சி­ரி­யர்­க­ளாக உள்­ள­னர்.

ப: சென்ற வரு­டம் தீவிர முயற்சி எடுக்­கப்­பட்­டது. அவர்­கள் பல்­வேறு கல்வி நிறு­வ­னங்­க­ளில் பேரா­சி­ரி­யர்­க­ளாக உள்­ள­னர். இதே போல் செய்­யும்­படி மத்­திய பல்­க­லைக்­க­ழ­கங்­கள், ஐ.ஐ.எம்.,களை­யும் கேட்­டுள்­ளோம். சீனா இது போன்று வெற்­றி­க­ர­மாக செய்­துள்­ளது.

கே: ‘சுயம்’ என்­றால் என்ன?

ப: சமீ­பத்­தில் சுயம் போர்ட்­டல் என்ற இணை­ய­தள சேவையை தொடங்­கி­யுள்­ளோம். இதில் பாடங்­கள் நடத்­தப்­ப­டு­கி­றது. பாடங்­கள் இல­வ­ச­மாக கிடைக்­கும். விளக்­கம் கேட்­டல், தேர்வு, இறு­தி­யில் சான்­றி­தழ் வழங்­கப் படும். இது இணை­யத்­தி­லும், 32 டிடி­ஹெச் சானல்­க­ளி­லும் கிடைக்­கி­றது.

கே: நூல­கங்­க­ளில் உள்ள புத்­தங்­கள் டிஜிட்­டல் மயாக்­கப்­ப­டுமா?

ப: ஆம்.இதற்­காக தேசிய டிஜிட்­டல் நூல­கம் (National Digital Library) தொடங்­கப்­ப­டும். நாடு முழு­வ­தும் நூல­கங்­க­ளில் உள்ள 66 லட்­சம் புத்­தங்­கள் டிஜிட்­டல் மய­மாக்­கப்­ப­டும். இவை ஆன்­லை­னி­லும் கிடைக்­கும். மாண­வர்­கள் புத்­தங்­களை தேடி ஒரு நூல­கத்­தில் இருந்து வேறு நூல­கத்­திற்கு செல்ல வேண்­டி­ய­தில்லை. நாங்­கள் நேஷ­னல் அகா­ட­மிக் டிபா­சிட்­ட­ரி­யை­யும் தொடங்க உள்­ளோம். இதில் எல்லா சான்­றி­தழ்­க­ளும் டிஜிட்­டல் வடி­வில் சேமிக்­கப்­ப­டும். இத­னால் போலி சான்­றி­தழ் இருக்­காது. சான்­றி­தழ்­க­ளும், டிகிரி சான்­றி­தழ்­க­ளும், போட்டோ, ஆதார் எண்­ணு­டன் இணைக்­கப்­ப­டும்.

கே: தேசிய தேர்வு வாரி­யம் (National Testing Agency) ஏற்­ப­டுத்த உள்­ளீர்­களா?

ப:சிபி­எஸ்இ.,க்கு வேலை பளு அதி­க­மாக உள்­ளது. இது 27 தேர்­வு­களை நடத்­து­கின்­றது. இவற்­றில் 1 கோடியே 20 லட்­சம் மாண­வர்­கள் தேர்வு எழு­து­கின்­ற­னர். எனவே அடுத்த வரு­டம் தேர்­வு­களை நடத்த தனி­யாக தேசிய தேர்வு வாரி­யத்தை அமைக்க உள்­ளோம். இது அடுத்த வரு­டத்­தில் இருந்து தேர்­வு­களை நடத்­தும்.

கே:காஷ்­மீ­ரைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் கல்வி உத­வித் தொகை (ஸ்காலர்­சிப்) எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டுமா:

ப: முந்­தைய அரசு ஜம்­மு–­­காஷ்­மீர் மாண­வர்­க­ளுக்கு கல்வி உத­வித் தொகை கொடுக்க ஆரம்­பித்­தது. ஆனால் இதில் வெளிப்­ப­டை­தன்மை இல்லை. தற்­போது நாங்­கள் முறை­யான கவுன்­சி­லிங் மூலம் செயல்­ப­டுத்­து­கின்­றோம். இந்த வரு­டம் ‘பிர­த­மர் சிறப்பு கல்வி உத­வித் தொகை’ திட்­டத்­தின் கீழ், 2,830 தொழில் படிப்பு உட்­பட 3,430 இடங்­க­ளுக்கு, ஜம்­மு–­­காஷ்­மீர் மாநி­லத்­தில் இருந்து பிளஸ் டூ படித்து முடித்த 24,700 மாண­வர்­கள் விண்­ணப்­பித்­துள்­ள­னர். இதில் தேர்­வா­கும் மாண­வர்­க­ளுக்கு ரூ.1 லட்­சம் முதல் ரூ.4 லட்­சம் வரை கல்வி உத­வித் தொகை வழங்­கப்­ப­டும். சிறந்த கல்­லூ­ரி­க­ளில் காஷ்­மீர் மாநி­லத்­தைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்­காக கூடு­தல் இடங்­க­ளை­யும் உரு­வாக்­கு­கின்­றோம்.

கே: பள்ளி கல்­வி­யில் மாற்­றம் செய்ய உள்­ளீர்­களா?

ப: நாங்­கள் பள்ளி கல்­விக்கு பல்­வேறு மானி­யங்­களை கொடுக்­கின்­றோம். வட்டி இல்­லா­மல் கல்வி கடன் கொடுக்­கின்­றோம். ஒரு மாண­வன் ஐந்து வரு­டம் படிக்­கும் போது, வாங்­கிய கட­னுக்­கான வட்­டியை அரசு கொடுக்­கின்­றது. கடந்த மூன்று வரு­டங்­க­ளில் இவ்­வாறு ரூ.2,400 கோடி வட்­டிக்­காக கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

கே: தேசிய கல்வி கொள்­கை­யில் கஸ்­தூரி ரெங்­கன் குழு­வின் படிந்­து­ரை­கள் இடம் பெறுமா?

ப: புதிய தேசிய கல்வி கொள்கை எங்­க­ளது திட்­டம். எனவே இதை முன்­னெ­டுத்­துச் செல்­கின்­றோம். பிர­பல விஞ்­ஞானி கஸ்­தூரி ரெங்­கன் குழு விரி­வா­னது. நாங்­கள் அந்த குழு­வுக்கு இரண்டு அல்­லது மூன்று உறுப்­பி­னர்­களை சேர்த்­துக் கொள்­வ­தற்கு சுதந்­தி­ரம் வழங்­கி­யுள்­ளோம். இந்த குழு பரிந்­து­ரையை சமர்ப்­பிக்க ஆறு மாத கால அவ­கா­சம் கேட்­டுள்­ளது. இதற்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளோம். அந்த குழு­வின் முதல் கூட்­டம் நடந்து முடிந்து விட்­டது. அவர்­க­ளது பணி­யில் தலை­யி­டு­வ­தில்லை. கடந்த 30 மாதங்­க­ளில் பெறப்­பட்ட எல்­லா­வற்­றை­யும் கொடுத்­துள்­ளோம். கல்வி என்­பது மற்ற துறை­க­ளில் இருந்து மாறு­பட்­டது. உருக்கு அல்­லது கப்­பல் கட்­டும் தொழில் என்­றால் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் உள்­ள­வர்­கள் மட்­டும் இருப்­பார்­கள். ஆனால் கல்வி என்­பது ஒவ்­வொரு துறைக்­கும், குடும்­பத்­தை­யும் பாதிப்­பது. எனவே கல்வி கொள்­கை­யில் நாடு முழு­வ­தும் அக்­க­றை­யுள்­ளது.  

உலக அள­வில் ஏற்­ப­டும் மாற்­றங்­க­ளுக்கு ஈடாக, அதன் அடிப்­ப­டை­யில் பரிந்­து­ரை­கள் அமைய வேண்­டும் என்று கூறி­யுள்­ளோம். அடுத்த 20 வரு­டங்­க­ளில் என்ன நடக்­கும் என்­பதை மன­தில் கொண்டு கொள்­கையை வடி­வ­மைக்­கின்­றோம். முக்­கி­ய­மாக 25 வரு­டங்­க­ளுக்கு பிறகு, புதிய கல்வி கொள்கை நாட்­டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி இருக்க வேண்­டும்.

கே. அப்­ப­டி­யெ­னில் உங்­கள் எதிர்­கால பார்வை 20 வரு­டங்­க­ளுக்­கா­னதா?

ப: ஒவ்­வொரு தலை­மு­றை­யும் அவர்­க­ளுக்கு ஏற்­றார்­போல் கொள்­கை­களை வகுத்­துக் கொள்ள உரிமை உள்­ளது. பத்து வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை மாற்­றங்­களை கொண்டு வர வேண்­டும் என்று தனிப்­பட்ட முறை­யில் கரு­து­கின்­றேன். தற்­போது 20 வரு­டங்­க­ளுக்கு பிறகு புதிய கொள்கை உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. இது போல் முன்­னேற்­றம் உண்­டா­கி­றது.

கே: ஒரே மாதி­ரி­யான பாட திட்­டம் இருக்க வேண்­டும் என்ற கோரிக்கை உள்­ளதா?

ப: இல்லை. இது போன்ற கோரிக்கை இல்லை. உயர் கல்­வியை பொருத்­த­மட்­டில் பாடத்­திட்­டத்தை நிர்­ண­யிப்­ப­தற்கு ஒவ்­வொரு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­கும் சுதந்­தி­ரம் வழங்­கப்­பட வேண்­டும். ஒவ்­வொரு பல்­க­லைக்­க­ழ­க­மும் தொடர்ந்து சிறந்த பாடத்­திட்­டத்­திற்கு மாற வேண்­டும். துர­திஷ்­ட­வ­ச­மாக இவ்­வாறு செய்­வ­தில்லை. எனவே இந்த முயற்­சியை அகில இந்­திய தொழில்­நுட்ப கல்வி கவுன்­சில் (AICTE ) எடுத்­துள்­ளது. நாங்­கள் மாதிரி பாடத்­திட்­டத்தை உரு­வாக்கி, ஒவ்­வொரு வரு­ட­மும் இதில் தேவை­யான மாற்­றங்­களை செய்­வோம். நாங்­கள் புதிய பாடத்­திட்­டத்தை விரை­வில் அறி­விப்­போம். இதில் பல்­க­லைக்­க­ழ­கங்­கள், அவர்­க­ளுக்கு ஏற்­றார்­போல் தேவை­யான மாற்­றங்­க­ளைச் செய்து கொள்­ள­லாம்.  

பள்ளி பாட­திட்­டத்தை பொருத்­த­வரை, இது 2006ம் வரு­டத்­திய தேசிய பாடத்­திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் உள்­ளது. இந்­தியா போன்ற நாட்­டில் கலாச்­சார, பிராந்­திய, மொழி, பூகோள அமைப்பு மாறு­ப­டு­கின்­றது. பள்ளி பாட புத்­தங்­க­ளில் 70 சத­வி­கி­தம் என்.சி.இ.ஆர்.டி பாட திட்­டத்­தில் இருந்­தும், 30 சத­வி­கி­தம் எஸ்.சி.இ.ஆர்.டி (மாநில) முடிவு செய்­கி­றது.

கே: தர­மில்­லாத இன்­ஜி­னி­ய­ரிங் கல்­லூ­ரி­க­ளில் படித்து முடித்து விட்டு வெளி­யே­றும் மாண­வர்­க­ளுக்கு வேலை கிடைப்­ப­தில்லை. இதில் அர­சின் திட்­டம் என்ன?

ப: ஏ.ஐ.சி.டி.இ ஒவ்­வொரு வரு­ட­மும் பாடத்­திட்­டத்தை புதுப்­பித்து மாதிரி பாடத்­திட்­டத்தை வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டை­யில் கல்­லூ­ரி­க­ளும், பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளும் பாடத்­திட்­டத்தை புதுப்­பித்­துக் கொள்­ளும்­போது தரம் உய­ரும். மாண­வர்­கள் தற்­போது சுய அதி­கா­ரம் கொண்­ட­வர்­க­ளாக உள்­ள­னர். அவர்­கள் கல்­லூ­ரி­யில் சேர்­வ­தற்கு முன் கல்­லூ­ரி­யைப் பற்­றி­யும், வேலை வாய்ப்பு பற்­றி­யும் ஆராய்­கின்­ற­னர். கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் 500 இன்­ஜி­னி­ய­ரிங் கல்­லூ­ரி­கள் மூடப்­பட்­டுள்­ளன.

கார­ணம் இவற்­றில் தரம் இல்­லாத கார­ணத்­தால் மாண­வர்­கள் சேர­வில்லை. நாங்­கள் அவற்றை மூட­வில்லை. கல்­லூரி நிர்­வா­கங்­கள் மூடு­வ­தற்கு அனு­மதி மட்­டுமே வழங்­கி­யுள்­ளோம்.

இது மாண­வர்­கள் கல்­லூரி நிர்­வா­கங்­க­ளுக்கு விடும் எச்­ச­ரிக்கை. கல்வி தரம் இல்­லா­விட்­டால், நாங்­கள் சேர மாட்­டோம் என்ற எச்­ச­ரிக்கை.

கே: தனி­யார் கல்­லூ­ரி­கள் அதிக அளவு கட்­ட­ணங்­களை வசூ­லிக்­கின்­றன. அவர்­க­ளின் நோக்­கம் லாபம் ஈட்­டு­வது மட்­டும் தானா?

ப: தனி­யார் கல்­லூ­ரி­க­ளில் கட்­ட­ணம் அதி­க­மாக இருக்­கின்­றது. நாம் மூன்று விஷ­யங்­களை முடிவு செய்ய வேண்­டும். முத­லில் கட்­ட­ணம் வெளிப்­ப­டை­தன்­மை­யாக இருக்க வேண்­டும். இரண்­டா­வது மறை­முக கட்­ட­ணம் இருக்க கூடாது. மூன்­றா­வ­தாக பெற்­றோர்­க­ளுக்கு கட்­ட­ணம் பற்­றி­யும், ஒவ்­வொரு வரு­ட­மும் கட்­டண உயர்வு பற்­றி­யும், மொத்த செலவு பற்­றி­யும் தெரி­விக்க வேண்­டும்.

கே. இதை கல்­லூ­ரி­கள் பின்­பற்­றா­விட்­டால் என்ன ஆகும்?

ப: இது மாண­வர்­கள்,பெற்­றோர்­க­ளுக்­கும்–­­கல்­லூ­ரிக்­கும் இடையே ஏற்­ப­டும் தனிப்­பட்ட ஒப்­பந்­தம். மாண­வர்­க­ளும், அவர்­க­ளது பெற்­றோர்­க­ளும் எந்த கல்­லூ­ரி­யில் சேர்­வது என்று முடிவு செய்து கொள்ள வேண்­டும்.

கே: கட்­ட­ணத்தை வரன்­முறை படுத்த அரசு சட்­டம் கொண்டு வருமா?

ப: ஒவ்­வொரு மாநி­ல­மும் விதி­மு­றை­களை வைத்­துள்­ளன. மருத்­துவ கல்­வியை பொருத்த மட்­டில், டீம்டு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் கட்­ட­ணம் எவ்­வ­ளவு வசூ­லிக்­க­லாம் என்று கமிட்­டியை அமைத்து முடிவு செய்­யும்­படி நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது. நாங்­கள் கமிட்­டியை அமைக்க உள்­ளோம்.

 இவ்­வாறு பேட்­டி­யின் போது அமைச்­சர் பிர­காஷ் ஜவ­டே­கர் கூறி­யுள்­ளார்.

நன்றி: அவுட்­லுக் வார இதழ்