திசையறியா பயணம்!

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017தமிழ்­நாட்டு அர­சி­யல் களம் மந்த கதி­யில் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. இருக்­கிற ஆட்சி எவ்­வ­ளவு நாள் நீடிக்­கும்? அடுத்து ஆட்சி அமைக்­கப் போவது யார்? இந்த  கேள்­வி­க­ளுக்கு விடை காண முடி­யா­மல்­தான் மக்­க­ளும், அர­சி­யல் கட்­சி­க­ளும் அல்­லா­டிக் கொண்­டுள்­ளன.

ஆட்­சிக் கட்­சி­யான அதி­முக, ஓபி­எஸ் அணி, ஈபி­எஸ் அணி, டிடிவி அணி என பிரிந்து கிடக்­கி­றது. இதிலே நான்­கா­வ­தாக ஜெ. தீபா தலை­மை­யி­லான கொசுறு அணி­யும் தன் பங்­குக்கு அதி­மு­கவை உரிமை கொண்­டா­டிக் கொண்­டுள்­ளது. கட்சி எத்­தனை அணி­க­ளாக பிரிந்து நின்­றா­லும், ஆட்­சியை நாங்­கள் கைவிட மாட்­டோம் என 134 எம்.எல்.ஏக்­க­ளும் உறு­தி­யோடு இருக்­கி­றார்­கள். அவர்­கள் எல்­லோ­ருக்­குமே தெரி­யும் இது­தான் கடைசி வாய்ப்பு.

எம்.ஜி.ஆர். இல்­லாத, ஜெய­ல­லிதா இல்­லாத, இரட்டை இலை இல்­லாத நிலை­யில் அடுத்து வரும் தேர்­தலை சந்­தித்­தால் ஒரு­வ­ருக்­கும் டெபா­சிட் கூட கிடைக்­காது. கடைசி காலத்­தில் ‘அம்மா’ உரு­வாக்­கிக் கொடுத்த இந்த அரிய வாய்ப்பை எவ­ரும் இழக்க தயா­ரில்லை. அத­னால் ‘நித்ய கண்­டம் பூரண ஆயுசு’ என்ற நிலைப்­பாட்­டோடு, மீதம் உள்ள காலத்­தை­யும் கழித்து விடு­வார்­கள். ஆனா­லும் எதிர்­கால அர­சி­யல் பய­ணம், ஆட்­சிக்­க­னவு என்­ப­தெல்­லாம் அதி­மு­கவை பொறுத்­த­வரை கானல் நீர்­தான்.

பிள­வு­பட்டு நின்­றுள்ள எல்லா அணி­க­ளும் இணைந்­தா­லும் கூட ஆளு­மை­மிக்க, தகு­தி­யும் – திற­மை­யும் – ஈர்ப்­பும் நிறைந்த தலைமை இல்­லா­த­தால் இனி அதி­மு­க­வின் வெற்றி என்­பது பெரும் கேள்­விக்­கு­றியே.

அதி­முக இல்­லை­யேல், அதற்கு மாற்று திமு­க­தான் என்­பது இது­வ­ரை­யி­லும் இருந்த தேர்­தல் நிலைப்­பாடு இப்­ப­டித்­தான் 1989, 91, 96, 2001, 2006, 2011, 2016  கால­கட்­டங்­க­ளில் நடை­பெற்ற பொதுத்­தேர்­தல்­க­ளில் 3 முறை திமு­க­வும், 4 முறை அதி­மு­க­வும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தன. அதன் அடிப்­ப­டை­யில் அடுத்து வரும் பொதுத்­தேர்­தல் வெற்றி திமு­க­வுக்­கா­னது என்ற எண்ண ஓட்­டம் அக்­கட்­சி­யின் நிர்­வா­கி­கள் மற்­றும் தொண்­டர்­க­ளி­டம் உள்­ளது. ஆனால், இப்­போ­துள்ள காலச்­சூ­ழ­லைப் பார்க்­கும் போது, முழு­மை­யான வெற்றி என்­பது அவ்­வ­ளவு எளி­தாக கிடைத்து விடாது என்றே தோன்­று­கி­றது.

2021–ம் ஆண்டு வரை­யி­லும் இந்த ஆட்சி முழு­மை­யாக நடை­பெற்று, சட்­ட­சபை பொதுத்­தேர்­தல் வருமா? அல்­லது 2019–ம் ஆண்­டில் நடை­பெ­ற­வுள்ள நாடா­ளு­மன்ற தேர்­த­லின் போதே தமிழ்­நாடு சட்­ட­ச­பைக்­கும் தேர்­தல் வருமா? அல்­லது அதற்­கும் முன்­ன­தா­கவே திமு­க­வின் கணிப்பு, மற்­றும் விருப்­பத்­தின்­படி தேர்­தல் வருமா என்­பது உறு­தி­யாக தெரி­ய­வில்லை.

எப்­போது தேர்­தல் வந்­தா­லும் அந்த தேர்­தலை இங்­குள்ள அர­சி­யல் கட்­சி­கள் எப்­படி எதிர்­கொள்­ளப் போகின்­றன என்­ப­தும் பெரும் கேள்வி குறி­யா­கவே உள்­ளன.

தமிழ்­நாட்­டில் தாம­ரையை மலர செய்ய களத்­தில் குதித்­தி­ருக்­கும் பா.ஜ. மிக தீவி­ர­மான காய் நகர்த்­த­லில் ஈடு­பட்டு வரு­வதை நம்­மால் காண முடி­கி­றது.  அதி­மு­க­வின் ஒட்­டு­மொத்த வாக்கு வங்­கி­யை­யும் கப­ளீ­க­ரம் செய்து, அடுத்து வரும் தேர்­த­லி­லேயே ஆட்­சிக் கனவை நிறை­வேற்­றி­வி­ட­லாம் என கரு­து­கி­றது. அதற்­கான பூர்­வாங்க பணி­களை இப்­போதே தொடங்கி விட்­டது.

கருத்து வேறு­பா­டு­க­ளால் பிரிந்து செயல்­ப­டும் ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ். அணி இரு­வ­ருமே பா.ஜ.வின் செல்­லப் பிள்­ளை­க­ளாக மாறி­விட்­ட­னர். ஒன்­று­பட்ட அதி­மு­க­வி­டனோ, அல்­லது இதில் ஏதா­வது ஒரு பிரி­வி­ன­ரு­டனோ பா.ஜ.க. கூட்­டணி வைப்­பது உறுதி. இந்த கூட்­ட­ணிக்கு தமி­ழக மக்­க­ளி­டம் எத்­த­கைய வர­வேற்பு இருக்க போகி­றது எனத் தெரி­ய­வில்லை. அப்­படி அதி­முக, பா.ஜ.க மேலும் சில கட்­சி­களை இணைத்து போட்­டி­யி­டு­மே­யென்­றால், அதை எதிர்­கொள்ள திமு­க­வும் வலு­வான கூட்­ட­ணியை நிச்­ச­யம் உரு­வாக்­கும். அந்த வகை­யில் இந்த கூட்­ட­ணி­யில், காங்­கி­ரஸ், இ.கம்யூ, மா.கம்யூ, விடு­த­லைச் சிறுத்­தை­கள், மனித நேய மக்­கள் கட்சி உள்­ளிட்ட ஒரு சில கட்­சி­கள் இடம்­பெ­ற­லாம். இப்­படி இரண்டு தரப்­பும் தங்­களை பலப்­ப­டுத்­திக் கொண்டு தேர்­தல் களத்­திற்கு வந்­தால், இதன் வெற்றி தோல்­வியை மக்­கள் எப்­ப­டித் தீர்­மா­னிப்­பார்­கள் என்று தெரி­யாது.

மாநில ஆட்­சிக் கட்­சி­யான அதி­மு­க­வில் தலை­மை­யில்லா பல­வீ­னம், ஆட்சி மீது மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள வெறுப்பு, மத்­திய ஆட்­சிக் கட்­சி­யான பா.ஜ.வின் பல­வீ­னம். இவை எல்­லாம் அதி­முக கூட்­ட­ணி­யின் வெற்­றியை நிச்­ச­யம் கேள்­விக்­கு­றி­யாக்­கும்.

இது­வும் தவிர, தமிழ்­நாட்­டி­லுள்ள பா.ம.க., ம.திமு.க, த.மா.க, தே.மு.தி.க உள்­ளிட்ட ஒரு சில கட்­சி­கள் என்ன முடி­வெ­டுக்­கப் போகின்­றன என்­பது தெரிய வில்லை. இவர்­கள் எல்­லாம் தனித்­தனி அணி­களை அமைத்து மும்­மு­னைப்­போட்டி, நான்கு முனைப்­போட்டி என்று வரு­மே­யென்­றால், நிச்­ச­ய­மாக அது திமுக அணி­யின் வெற்றி வாய்ப்­புக்கு துணை­யாக இருக்­கும் என்­பது உறுதி.

பார்­லி­மெண்ட் தேர்­தல், சட்­ட­ச­பைத் தேர்­த­லுக்கு முன்­பாக வர இருக்­கிற உள்­ளாட்­சித் தேர்­த­லின் போதே ‘மாடல்’ கூட்­டணி ஒன்று உரு­வாக வாய்ப்­புள்­ளது.

அந்த கூட்­ட­ணி­யின் தொடர்ச்சி பார்­லி­மெண்ட், சட்­ட­சபை தேர்­தல் வரை நீடித்­தால், அது வலு­வான கூட்­ட­ணி­யாக இருக்­கும் பட்­சத்­தில் அந்த அணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்­ளது. அது­வ­ரை­யி­லும் தமி­ழக அர­சி­யல் கட்­சி­க­ளின் பயணம் திசை அறியா பய­ண­மா­கவே தொட­ரும்.

***