பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு பாதிப்பு?

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017வர்த்­த­கம், முத­லீடு ஆகி­ய­வை­க­ளில் இந்­தியா உட்­பட ஆசி­ய–­­ப­சி­பிக் நாடு­கள் உறுப்­பி­ன­ராக உள்ள  விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்­பின் [Regional Comprehensive Economic Partnership (RCEP)] கூட்­டம் ஹைத­ர­பாத்­தில் ஜூலை 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடை­பெற்­றது.

இந்த அமைப்­பில் சிங்­கப்­பூர், மலே­சியா உட்­பட ஆசி­யான் அமைப்­பில் உறுப்­பி­னர்­க­ளாக உள்ள பத்து நாடு­க­ளும், இவற்­று­டன் இந்­தியா, சீனா, ஜப்­பான், தென் கொரியா, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­ஜி­லாந்து ஆகிய 16 நாடு­கள் இடம் பெற்­றுள்­ளன. இந்த அமைப்­பில் உள்ள நாடு­கள் இடையே சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தம் நடை­பெ­று­வ­தற்­கான பேச்சு வார்த்தை நடை­பெற்று வரு­கி­றது.

இந்த அமைப்­பின் வர்த்­தக பேச்­சு­வார்த்தை கமிட்­டி­யின் 19 வது கூட்­டம், ஹைத­ரா­பாத்­தில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்­தில் மத்­திய, மாநில அர­சு­கள், அர­சுக்கு சொந்­த­மான நிறு­வ­னங்­கள் கொள்­மு­தல் செய்­யும் பொருட்­கள், சேவை­க­ளை­யும், விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்­பின் ஒப்­பந்­தத்­தில் சேர்க்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டது. ஆனால் இதில் உடன்­ப­டிக்கை ஏற்­ப­டா­மல், இது குறித்து விரி­வாக விவா­திக்க குழுவை அமைப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இது பற்றி தனி­யாக ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டு­வது என்­றும் முடிவு எடுக்­கப்­பட்­டது.  

இதற்கு இந்­தியா சம்­ம­திக்­காது என்று தெரி­கி­றது. ஏற்­க­னவே இந்­தி­யா­வுக்­கும், ஜப்­பான், தென் கொரியா, சிங்­கப்­பூர் ஆகிய நாடு­க­ளுக்கு இடையே சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தம் நடை­மு­றை­யில் உள்­ளது. இதில் அர­சின் பொருட்­கள், சேவை­கள் கொள்­மு­தல் செய்­வது சேர்க்­கப்­ப­ட­வில்லை. இத­னால் விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்பு நாடு­க­ளு­டான ஒப்­பந்­தம் ஏற்­ப­டும்­போது, இந்­தியா அர­சின் கொள்­மு­த­லில் வெளிப்­படை தன்­மையை கடை­பி­டிக்க சம்­ம­திக்­கும். இது பற்­றிய தக­வல்­களை பரி­மா­றிக் கொள்ள சம்­ம­திக்­கும் என்று கூறப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வின் அர­சுத் துறை நிறு­வ­னங்­கள் வரு­டத்­திற்கு ரூ.5 லட்­சம் கோடி மதிப்­புள்ள பொருட்­களை கொள்­மு­தல் செய்­வ­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

இந்த கூட்­ட­மைப்­பில் உறுப்­பி­னர்­க­ளாக உள்ள ஜப்­பான், தென் கொரியா, ஆஸ்­தி­ரே­லியா, சிங்­கப்­பூர், நியூ­ஜி­லாந்து ஆகிய நாடு­க­ளில், இந்­தி­யா­வில் இருப்­பதை போல் பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் இல்லை. அதே நேரத்­தில் ஜப்­பான். சீனா, தென் கொரியா ஆகிய நாடு­க­ளில் அர­சின் கொள்­மு­த­லில் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் அனு­ம­திக்­கப்­பட்­டா­லும்­கூட, இந்த நாடு­க­ளின் அர­சின் கொள்­மு­த­லில் வெளி­நாட்டு நிறு­வ­னங்­கள் பங்­கேற்­பது சாத்­தி­ய­மில்லை. ஏனெ­னில் மொழி ஒரு பிரச்­னை­யாக இருக்­கும்.

உலக வர்த்­தக ஒப்­பந்த்­தில் (WTO) அரசு கொள்­மு­தல் உடன்­ப­டிக்­கை­யில், இந்­தியா கையெ­ழுத்­தி­ட­வில்லை.ஏனெ­னில் இந்­தியா அரசு கொள்­மு­த­லில், நாட்­டின் வளர்ச்­சிக்கு முக்­கி­ய­து­த­வம் கொடுக்க வேண்­டும் என்­ப­தால் கையெ­ழுத்­தி­ட­வில்லை.

சென்ற மே மாதம் மத்­திய, மாநில அர­சு­க­ளின் பொருட்­கள் கொள்­மு­தல், சேவை பெறு­தல் ஆகி­ய­வை­க­ளுக்கு உள்­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும் என்று கொள்கை ரீதி­யாக முடிவு எடுத்­துள்­ளது. இத­னால் ‘மேக் இன் இந்­தியா’ திட்ட முயற்­சிக்கு தேவை­யான முத­லீடு, தொழில்­நுட்­பம் உற்த்தி துறை­யி­லும், சேவை துறை­யி­லும் அதி­க­ரிக்­கும்.

இத­னால் உள்­நாட்­டில் வேலை வாய்ப்பு அதி­க­ரிப்­ப­து­டன், சிறு, குறுந் தொழில்­க­ளும் அதி­க­ரிக்­கும். சென்ற ஜூன் மாதம் அர­சின் கொள்­மு­தல்­க­ளில் இந்­தி­யா­வைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி அளிக்­காத நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­களை, இந்­தி­யா­வின் கொள்­மு­த­லில் அனு­மதி அளிப்­ப­தில்லை என்­றும் முடிவு எடுத்­துள்­ளது.

விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்­பில் அங்­கத்­தி­ன­ராக உள்ள நாடு­க­ளுக்கு இடையே தேவை அடிப்­ப­டை­யில் தற்­கா­லி­க­மாக பல்­வேறு நாடு­க­ளுக்கு உயர் திறன்  உள்ள ஊழி­யர்­களை அனுப்­பு­வ­தற்கு உள்ள தடை­களை நீக்க வேண்­டும் என்று இந்­தியா வலி­யு­றுத்தி வரு­கி­றது. இதற்கு முன் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இந்த அமைப்­பின் 12வது கூட்­டம் நடை­பெற்ற போது, இது பற்றி விவா­திக்­கப்­பட்­டது. அப்­போது இந்­தி­யா­வுக்கு சீனா ஆத­ரவு தெரி­வித்­தது.  ஆஸ்­தி­ரே­லியா, நியூ­ஜி­லாந்து ஆகி­யவை எதிர்ப்பு தெரி­வித்­தன.  சேவை துறை­யில் இந்­தி­யர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­டால், உள்­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு பாதிக்­கப்­ப­டும் என்று, ஆஸ்­தி­ரே­லியா, நியூ­ஜி­லாந்து ஆகிய நாடு­கள் கரு­து­கின்­றன. தற்­போது ஹைத­ரா­பாத்­தில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­யி­லும், இது பற்றி விவா­திக்­கப்­பட்­டது. இந்­தி­யா­வுக்கு சில ஆசி­யன் அமைப்­பில் உள்ள நாடு­கள் ஆத­ரவு தெரி­வித்­தன.

இதன்­படி 16 நாடு­க­ளி­லும் திறன் பெற்ற ஊழி­யர்­கள், குறு­கிய காலத்­திற்கு சென்­று­வர விசா இல்­லா­மல் பல தடவை பிர­யா­ணம் செய்­யும் வகை­யில் சிறப்பு கார்டு வழங்க வேண்­டும் என்ற யோச­னைக்கு சில நாடு­கள் ஆத­ரவு தெரி­வித்­தன. இது நடை­மு­றைக்கு வரும் போது, இந்­தி­யா­வைச் சேர்ந்த தக­வல் தொழில்­நுட்ப துறை­யைச் சார்ந்­த­வர்­கள் கட்­டுப்­பா­டில்­லா­மல் மற்ற நாடு­க­ளுக்கு சென்று வர இய­லும்.

விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்பு உடன்­ப­டிக்கை ஏற்­ப­டும் போது பல்­வேறு பொருட்­க­ளுக்கு இறக்­கு­மதி வரியை நீக்­கு­வது, உள்­நாட்டு தொழில் துறையை பாதிக்­கும் என்று உள்­நாட்டு தொழில் துறை கரு­து­கி­றது. இது தொடர்­பாக மத்­திய அர­சுக்­கும் தங்­கள் கவ­லையை தெரி­வித்­துள்­ளன. இந்த ஒப்­பந்­தத்­தால் இறக்­கு­மதி வரி முழு­மை­யாக நீக்­கப்­ப­டும் போது, சீனா­வில் இருந்து பொருட்­கள் வந்து குவி­யும். இது உள்­நாட்டு தொழில்­களை கடு­மை­யாக பாதிக்­கும் என்று கவலை தெரி­வித்­துள்­ளன.

இந்­திய தொழில் துறை­யைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள், பேச்­சு­வார்த்­தை­யில் இடம் பெற்­றுள்ள அதி­கா­ரி­கள் குழு­வு­டன் சுமார் 90 நிமி­டங்­கள் ஆலோ­சனை நடத்­தி­யுள்­ள­னர். உருக்கு, தக­வல் தொழில் நுட்­பம், மருந்து தயா­ரிப்பு, பால் பண்ணை, வாகன உற்­பத்தி, இர­சா­ய­ணம், ஜவுளி, பெட்ரோ கெமி­கல்ஸ் ஆகிய தொழில் துறை­யைச் சேர்ந்த பிர­தி­நி­தி­கள் அதி­கா­ரி­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யில் இடம் பெற்­ற­னர்.

இந்த ஆலோ­சனை கூட்­டத்­தில் டாடா குழு­மம், ஆதித்ய பிர்லா குழு­மம், ஜூபி­லன்ட், அமுல், மகேந்­திரா, ரிலை­யன்ஸ் இன்­டஸ்­டி­ரிஸ், மைலான் ஆகிய தொழில் நிறு­வ­னங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும், சி.ஐ.ஐ., ஆட்­டோ­மொ­பைல் உற்­பத்தி  அமைப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளும் இடம் பெற்­ற­தாக தெரி­கி­றது. தொழில் துறை, விவ­சா­யம், இர­சா­ய­ணம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­கள், உள்­நாட்டு தொழில் துறையை பாது­காக்க அதிக அளவு இறக்­கு­மதி வரி விதிக்க வேண்­டும் என்று எதிர்­பார்ப்­ப­தாக தெரி­கி­றது.    

இதற்கு முன் ஆசி­ய–­­ப­சி­பிக் நாடு­க­ளின் விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்­பின் கூட்­டம் வியட்­நாம் தலை­ந­கர் ஹனா­யில் நடை­பெற்ற போது, சீனா உட்­பட மற்ற நாடு­கள் 92 சத­வி­கித பொருட்­க­ளுக்கு இறக்­கு­ம­தியை முற்­றி­லு­மாக நீக்க வேண்­டும் என்று கூறின. இந்­தியா 80 சத­வி­கித பொருட்­க­ளுக்கு மேல் வரியை நீக்க இய­லாது என்று கூறி­ய­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருந்­த­னர்.  

இந்த அமைப்­பில் இடம் பெற்­றுள்ள நாடு­கள், இந்­தி­யா­வின் முக்­கிய விவ­சாய உற்­பத்தி பொரு­ளான கோது­மைக்கு இறக்­கு­மதி கட்­டுப்­பாட்டை நீக்க வேண்­டும் என்று நிர்ப்­பந்­திக்­கின்­றன. கோதுமை மீதான இறக்­கு­மதி வரியை முற்­றி­லு­மாக நீக்க வேண்­டும் என்­றும் கூறு­கின்­றன. (மத்­திய அரசு 2016 செப்­டம்­ப­ரில் கோதுமை இறக்­கு­மதி வரியை 25 சத­வி­கி­தத்­தில் இருந்து 10 சத­வி­கி­த­மாக குறைத்­தது. டிசம்­பர் மாதம் இறக்­கு­மதி வரியை முழு­வ­து­மாக ரத்து செய்­தது.)  இதே போல் வாக­னங்­க­ளுக்­கும் இறக்­கு­மதி வரி விதிக்க கூடாது என்று கூறு­கின்­றன.

பாக்ஸ்

ஆசி­ய–­ப­சி­பிக் விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய கூட்­ட­மைப்­பில் இடம் பெற்­றுள்ள நாடு­கள்.

ஆசி­யன் அமைப்பு உறுப்பு நாடு­கள்: இந்­தோ­னி­ஷியா, மலே­சியா, பிலிப்­பைன்ஸ், சிங்­கப்­பூர், தாய்­லாந்து, புருனே, வியட்­நாம், லாவோஸ், மியான்­மர், கம்­போ­டியா.

 மற்ற நாடு­கள்: ஆஸ்­தி­ரே­லியா, சீனா, இந்­தியா, ஜப்­பான், தென் கொரியா, நியூ­ஜி­லாந்து.