பால் பண்­ணை­க­ளுக்கு அபா­யம்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017

இந்­திய பால் பண்ணை தொழில் 15 கோடி விவ­சா­யி­க­ளுக்கு வாழ்­வா­தா­ர­மாக உள்­ளது. ஆசி­ய–­­­ப­சி­பிக் பிராந்­திய நாடு­கள் உறுப்­பி­ன­ராக உள்ள “விரி­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பிராந்­திய உடன்­ப­டிக்கை ஆனா­லும் சரி, அல்­லது மற்ற எந்த சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை என்­றா­லும் சரி, இத­னால் பால் பண்ணை தொழில் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டும் அபா­யம் உள்­ளது. ஏனெ­னில் இந்த உடன்­ப­டிக்­கை­க­ளின் படி பால், பால் பவு­டர் உட்­பட பால்­பண்ணை சார்ந்த பொருட்­க­ளுக்கு இறக்­கு­மதி வரி முற்­றி­லு­மாக நீக்­கப்­ப­டும். இத­னால் பல்­வேறு நாடு­க­ளில் இருந்து பால், பால் சார்ந்த பொருட்­கள் பெரு­ம­ளவு இறக்­கு­ம­தி­யா­கும்.

இந்த உடன்­ப­டிக்கை குறித்து, சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளின் ஆலோ­சனை கூட்­டத்­தில் அமுல் (குஜ­ராத் கூட்­டு­றவு பால் விற்­பனை இணை­யம்) நிறு­வ­னத்­தைச் சேர்ந்த மூத்த பொது மேலா­ளர் ஜெயன் மேத்தா பங்­கேற்­றார். இவர் கூறும் போது, பால்,பால் சார்ந்த பொருட்­களை குறைக்­கவோ, முற்­றி­லு­மாக நீக்­கவோ கூடாது. வெளி­நா­டு­க­ளில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் விலை குறை­வான பால் பொருட்­க­ளால், பால் உற்­பத்­தி­யில் உள்ள விவ­சா­யி­கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வார்­கள். இந்­தி­யா­வில் 15 கோடி பேர் பால் உற்­பத்­தி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

நியூ­ஜி­லாந்­தில் 12 ஆயி­ரம் பால் பண்­ணை­க­ளும், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 6,300 பால் பண்­ணை­க­ளும் மட்­டுமே உள்­ளன. தற்­போது இறக்­கு­மதி செய்­யப்­ப­டும் பாலுக்கு 40 சத­வி­கி­தம் இறக்­கு­மதி வரி­யும், பால் பொருட்­க­ளுக்கு 60 சத­வி­கி­தம் இறக்­கு­மதி வரி­யும் விதிக்­கப்­ப­டு­கி­றது. இத­னால் உள்­நாட்டு பால் பண்ணை தொழில்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் உள்­ளது.

ஆனால் இந்த இறக்­கு­மதி வரி முற்­றி­லு­மாக நீக்­கப்­பட்­டாலோ அல்­லது குறைக்­கப்­பட்­டாலோ, வெளி­நா­டு­க­ளில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் பால், பால் பொருட்­க­ளு­டன் உள்­நாட்டு பால் பண்­ணை­கள் போட்­டி­யிட முடி­யாது. குறிப்­பாக ஆஸ்­தி­ரே­லியா, நியூ­ஜி­லாந்­து­க­ளு­டன் போட்­டி­யிட இய­லாது. இந்த நாடு­கள் சர்­வ­தேச பால் வர்த்­த­கத்­தில் 35 சத­வி­கி­தம் வர்த்­த­கம் செய்­கின்­றன. ஆசி­ய–­­­ப­சி­பிக் பிராந்தி நாடு­க­ளு­டன் இடையே 50 சத­வி­கி­தத்­திற்­கும் மேல் வர்த்­த­கம் செய்­கின்­றன என்று அவர் தெரி­வித்­தார். நியூ­ஜி­லாந்து வரு­டத்­திற்கு 220 லட்­சம் டன் பால் உற்­பத்தி செய்­கி­றது. இதில் 190 லட்­சம் டன் (86 சத­வி­கி­தம்) ஏற்­று­மதி செய்­கி­றது. இதே போல் ஆஸ்­தி­ரே­லியா 150 லட்­சம் டன் பால் உற்­பத்தி செய்­கி­றது. இதில் 4 லட்­சம் பால் (26 சத­வி­கி­தம்) ஏற்­று­மதி செய்­கி­றது. சர்­வ­தேச பால், பால் பொருட்­கள் வர்த்­த­கத்­தில் நியூ­ஜி­லாந்­தின் பங்கு 25 சத­வி­கி­தம். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பங்கு 5 சத­வி­கி­தம். அதே நேரத்­தில் இந்­தி­யா­வில் 1560 லட்­சம் டன் பால் உற்­பத்­தி­யா­கி­றது. உள்­நாட்­டில் பால் தேவை அதிக அளவு இருப்­ப­தால் ஏற்­று­மதி மிக குறைந்த அளவே உள்­ளது. 50 ஆயி­ரம் டன் மட்­டுமே ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கி­றது.

தமிழ்­நாடு போன்ற மாநி­லங்­கள் ஏழை­க­ளின் வரு­வாய் அதி­க­ரிக்க, குறிப்­பாக கிரா­மப்­புற மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்­காக விலை­யில்லா கறவை மாடு­களை வழங்கி வரு­கி­றது. இதன் மூலம் பால் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­து­டன், விழிம்பு நிலை­யில் உள்ள மக்­க­ளின் வரு­வாய் அதி­க­ரிக்­கும் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது. சுவ­ராஜ் அபி­யான் கட்­சி­யின் தலை­வ­ரும், அகில இந்­திய கிசான் சங்­க­ராஸ் ஒருங்­கி­ணைப்பு குழு­வைச் சேர்ந்­த­வ­ரு­மான யோகேந்­திர யாதவ் கூறு­கை­யில், சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கை­யின் கீழ், உள்­நாட்டு பால் வர்த்­த­கத்­தில் அயல் நாடு­கள் அனு­ம­திக்­கப்­பட்­டால் எல்லா விவ­சாய சங்­கங்­க­ளும் கடு­மை­யாக எதிர்ப்பு தெரி­விக்­கும். இதை எதிர்த்து நாடு தழு­விய போராட்­டம் நடத்­தப்­ப­டும் என்று தெரி­வித்­தார்.

பெரும்­பா­லான ஆசிய, பசி­பிக் பிராந்­திய நாடு­கள் பால், பால் பொருட்­க­ளின் இறக்­கு­ம­திக்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன. இந்த நாடு­கள் அதிக அளவு இறக்­கு­மதி வரி விதித்­தல், கடு­மை­யான தர சோத­னை­களை செய்­கின்­றன. அதிக அளவு பால் இறக்­கு­மதி செய்­யும் சீனா, இந்­தி­யா­வில் இருந்து இறக்­கு­மதி செய்ய அனு­ம­திப்­ப­தில்லை. இதே போல் இந்­தோ­னி­ஷி­யா­வும் அனு­ம­திப்­ப­தில்லை. இதே போல் ஆஸ்­தி­ரே­லி­யா­வும், நியூ­ஜி­லாந்­தும் இந்­தி­யா­வில் இருந்து பால், பால் சார்ந்த பொருட்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு கடும் கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளன.