மருத்துவத்திற்காக கஞ்சா அனுமதி: மேனகா காந்தி

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017
மத்­திய பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் நல அமைச்­சர் மேனகா காந்தி, மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக கஞ்­சாவை பயன்­ப­டுத்­து­வ­தற்கு சட்­ட­பூர்வ அங்­கீ­கா­ரம் வழங்க வேண்­டும் என்று கூறி­யுள்­ளார்.

டில்­லி­யில் மத்­திய உள்­துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தலை­மை­யில் சமீ­பத்­தில் அமைச்­சர்­கள் கூட்­டம் நடை­பெற்­றது. இதில் மத்­தி­ய­பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் நல அமைச்­சர் மேனகா காந்தி, கஞ்­சாவை மருத்­துவ கார­ணங்­க­ளுக்கு பயன்­ப­டுத்த அனு­மதி கேட்டு  சட்ட முன்­வ­ரைவு ஒன்றை வெளி­யிட்­டார்.

இதை ஆய்வு செய்த அமைச்­சர்­கள் குழு,  சிறிய மாற்­றங்­களை செய்து மருத்­துவ சிகிச்­சைக்­காக கஞ்­சாவை மருந்து வடி­வில் பயன்­ப­டுத்த ஒப்­பு­தல் வழங்­கி­யது.

இது­கு­றித்து, மேனகா காந்தி கூறு­கை­யில், அமெ­ரிக்கா போன்ற வளர்ந்த நாடு­க­ளில் கஞ்சா பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதே வரி­சை­யில் இந்­தி­யா­வி­லும் கஞ்­சாவை மருத்­துவ சிகிச்­சைக்­காக பயன்­ப­டுத்த அனு­ம­திக்க வேண்­டும். குறிப்­பாக புற்­று­நோய் குணப்­ப­டுத்­து­வ­தில் கஞ்சா முக்­கிய பங்கு வகிக்­கி­றது என்று கூறி­னார்.

இந்­தி­யா­வில் தற்­போது கஞ்சா சட்­ட­பூர்­வ­மாக தடை செய்­யப்­பட்­டுள்­ளது. பொது­வாக கஞ்­சாவை போதைக்­காக புகைக்­கின்­ற­னர். அதே நேரத்­தில் முற்­கா­லத்­தில் கஞ்­சாவை மருத்­துவ கார­ணங்­க­ளுக்­கா­க­வும், வலி உண­ரா­மல் இருக்­க­வும் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர். மருத்­து­வர்­கள் நோயா­ளி­க­ளுக்கு எந்த அளவு பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் பரிந்­து­ரைத்­துள்­ள­னர்.

அர்­ஜன்­டைனா, ஆஸ்­தி­ரே­லியா, ஆஸ்­தி­ரியா,கனடா, சிலி, கொலம்­பியா, குடோ­ரியா, செக் குடி­ய­ரசு, பின்­லாந்து, ஜெர்­மனி, இஸ்­ரேல், இத்­தாலி, ஜமைக்கா, கம்­போ­டியா, மாசி­டோ­னியா, நெதர்­லாந்து, போர்ச்­சு­கல், ருமே­னியா,ஸ்பெயின் ஆகிய 19 நாடு­க­ளி­லும், அமெ­ரிக்­கா­வில் 28 மாநி­லங்­க­ளி­லும்,கொலம்­பியா மாவட்­டத்­தி­லும் மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக கஞ்சா பயன்­ப­டுத்­து­வது சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளது. அமெ­ரிக்­கா­வில் வரும் 2021ம் ஆண்­டிற்­குள் எல்லா மாநி­லங்­க­ளி­லும் கஞ்சா பயன்­ப­டுத்­து­வது சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­க­பட உள்­ளது.

வர­லாற்று ரீதி­யாக பார்த்­தால் கி.மு 2000ம் ஆண்­டு­க­ளி­லேயே மருத்­துவ ரீதி­யாக கஞ்சா பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது தெரிய வரு­கி­றது.  சீன சக்­க­ர­வர்த்தி சென் நெங், கீழ் வாதம், வாதம், மலே­ரியா, குறை­வான நினை­வாற்­றல் ஆகிய நோய்­க­ளுக்கு கஞ்­சாவை எப்­படி தேநீர் போல் மருத்­து­வ­ரீ­தி­யாக  பயன்­ப­டுத்­து­வது என்­பதை விளக்­கி­யுள்­ளார். இதன் பயன்­பாடு பற்றி ஆசிய நாடு­கள், மத்­திய கிழக்கு, ஆப்­பி­ரிக்கா பிர­தே­சங்­க­ளி­லும் பர­வி­யுள்­ளது. இந்­தி­யா­வில் குறிப்­பிட்ட பிரி­வி­னர் வலி நிவா­ர­ணி­யா­க­வும், மன உளைச்­ச­லுக்­கா­க­வும் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

இந்­தி­யா­வில் 2015ல் பெங்­க­ளூரு நக­ரத்­தில் மருத்­துவ ரீதி­யாக கஞ்சா பயன்­ப­டுத்­து­வது பற்­றிய மாநாடு அதி­கா­ர­பூர்­வ­மாக நடை­பெற்­றது. இதில் பங்­கேற்று பேசிய கன­டா­வைச் சேர்ந்த மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக கஞ்­சாவை பயன்­ப­டுத்­து­வது பற்றி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி வரும் ரிக் சிம்­சன் பேசு­கை­யில், “இந்­தி­யா­வில் கஞ்சா பயன்­ப­டுத்­து­வது சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தது. ஹோலி பண்­டி­கை­யின் போது அருந்­தும் ‘பங்க்’ என்ற பானம் கஞ்சா இலை, பூக்­கள் பயன்­ப­டுத்தி செய்­யப்­ப­டு­கி­றது என்று கூறி­னார். வட இந்­திய மாநி­லங்­க­ளில் ஹோலி பண்­டி­கை­யின் போது பங்க் பானம் அருந்­து­வார்­கள்.

அதே நேரத்­தில் மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக என்று கூறி, கஞ்­சாவை தவ­றாக பயன்­ப­டுத்­தும் போக்கு ஏற்­ப­டும் என்ற கருத்­தும் நில­வு­கி­றது. இந்­தி­யா­வில் கஞ்சா போன்­ற­வை­களை மருத்­துவ கார­ணங்­க­ளுக்­காக சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­திப்­ப­தில் மருத்­து­வர்­கள் இடையே இரு வேறு கருத்­துக்­கள் நில­வு­கின்­றன. டாக்­டர். ஜபா சௌகான், “ இது தீராத வலி­யால் அவ­திப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயன் படுத்­தி­னால் பலன் அளிக்­கும் என்ற எண்­ணும் போது, நமது நாட்­டில் உள்ள மருத்­துவ நிர்­வாக முறை, மருந்து என்ற பெய­ரில் போதை பொருட்­களை விற்­பனை செய்­வது போன்ற தவ­று­கள் நடை­பெற நிறைய வாய்ப்பு உள்­ளது. மக்­கள் இதை எளி­தாக பெற்று, தவ­றான காரி­யங்­க­ளுக்கு பயன்­ப­டுத்த நிரம்ப வாய்ப்பு உள்­ளது. கறா­ரான பரிந்­து­ரை­யின் கீழ் மட்­டுமே கிடைக்­கு­மாறு செய்­யா­விட்­டால், இதை போதை பொரு­ளாக பயன்­ப­டுத்­தும் அபா­யம் ஆபத்து உண்டு” என்று கூறு­கின்­றார்.

இந்­தி­யா­வில் 1838ம் ஆண்­டு­க­ளில் பிரிட்­டிஷ் ஆட்­சி­யின் போது, கஞ்சா பயன்­ப­டுத்­து­வது குற்­றச் செயல் என அறி­விக்­கும் முயற்சி தொடங்­கி­யது. 1961ல் நடை­பெற்ற சர்­வ­தேச போதை மருந்­து­கள் பற்­றிய மாநாட்­டில் (International treaty Single Convention on Narcotic Drugs), கஞ்சா போதை பொரு­ளாக சேர்­கப்­பட்­டது. இதில் இருந்து ‘பங்க்’ பானத்­திற்கு விதி விலக்கு அளிக்­கப்­பட்­டது. 1985ல் போதை பொருட்­கள் மற்­றும் உள­வு­நிலை மாற்றி போதை பொருட்­கள் சட்­டத்­தில் [the Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Act] கஞ்சா தடை செய்­யப்­பட்ட போதை பொருள் என்று சேர்க்­கப்­பட்­டது. இந்த சட்­டப்­படி கஞ்­சா­வில் இருந்து தயா­ரிக்­கப்­ப­டும் பிசின் (resin),பூ ஆகி­யவை தடை செய்­யப்­பட்­டவை. ஆனால் இலை, விதை­களை பயன்­ப­டுத்­து­வது பற்றி மாநி­லங்­கள் முடிவு செய்து கொள்­ள­லாம் என்­றும் கூறப்­பட்­டது.

2015ம் ஆண்டு லோக்­ச­பா­வில் ஒரி­சா­வைச் சேர்ந்த உறுப்­பி­னர் தடா­கடா சத்­பதி, கஞ்­சாவை சட்­ட­பூர்­வ­மாக அனு­ம­தித்­தால், மக்­கள் மது­பா­னங்­க­ளுக்கு அடி­மை­யா­வதை தடுக்க உத­வி­யாக இருக்­கும் என்று கூறி­னார்.

ஹெரா­யின்,சுமாக், கொக்­கைன், கிராக் போன்ற கடு­மை­யான போதை பொருட்­கள் போன்­றவை உடல் நலத்­திற்கு தீங்கி விளை­விப்­பவை என்று போதை பொருட்­கள் மற்­றும் உள­வு­நிலை மாற்றி போதை பொருட்­கள் சட்­டத்­தில் கூறப்­பட்­டுள்­ளது. இந்த பட்­டி­ய­லில் கஞ்­சா­வும் சேர்க்­கப்­பட்­டதே பிரச்­னை­யா­னது. எல்லா போதை பொருட்­க­ளை­யும் ஒரே மாதி­ரி­யாக கரு­தக்­கூ­டாது என்று ஒரு கஞ்சா பிரி­யர் கருத்து தெரி­வித்­துள்­ளார்.

புற்று நோயை உண்­டாக்­கும் புகை­யிலை பொருட்­கள் தார­ள­மாக கிடைக்­கின்­றன. ஆனால் வலி நிவா­ர­ணி­யான கஞ்­சா­வுக்கு தடை செய்­யப்­பட்­டுள்­ளது. கஞ்­சாவை சட்­ட­ பூர்­வ­மாக அனு­ம­திக்க வேண்­டும் என்று பொறுப்­பான பத­வி­யில் உள்ள அர­சி­யல்­வாதி ஒரு­வர் கூறு­வது முதன் முறை­யல்ல. இதற்கு முன்­னும் பத­வி­யில் உள்­ள­வர்­கள், இது போன்ற கருத்தை கூறி­யுள்­ள­னர். ஆனால் இது பெரும்­பா­லோ­ரின் கவ­னத்தை ஈர்க்­க­வில்லை.

தற்­போது மத்­திய பெண்­கள் மற்­றும் குழந்­தை­கள் நலத்­துறை அமைச்­சர் மேனகா காந்தி, கஞ்­சாவை மருத்­துவ ரீதி­யாக பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­திக்க வேண்­டும் என்று கூறி­யி­ருப்­ப­தால், இதற்கு உரிய பலன் இருக்­கும் என்று தெரி­கி­றது.

நன்றி: பெட்­டர் இந்­தியா இணை­ய­த­ளத்­தில் வித்யா ராஜா­வின் கட்­டு­ரை­யின் உத­வி­யு­டன்.