2,271 லிட்­டர் தாய்ப்­பாலை தானம் செய்த பெண்

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017

அமெ­ரிக்­காவை சேர்ந்த ஒரு பெண் 2 ஆயி­ரத்து 271 லிட்­டர் தாய்­பாலை தான­மாக வழங்­கி­யுள்­ளார்.

அமெ­ரிக்­கா­வின் ஒரி­கான் பகு­தி­யில் வசித்து வரும் எலி­ச­பெத் ஆண்­டர்­சன் (29) என்­ப­வ­ருக்கு இரண்டு குழந்­தை­கள் உள்­ள­னர். இவர் ஹைபர்­சா­லி­கே­சன் என்ற நோயால் (Hyperlactation Syndrome) பாதிக்­கப்­பட்­டுள்­ளார். வழக்­க­மாக ஒரு தாய்க்கு சுரக்­கும் பாலை­விட, 10 மடங்கு அதி­க­மான பால் எலி­ச­பெத் ஆண்­டர்­ச­னுக்கு சுரக்­கி­றது.  ஒரு நாளைக்கு 6.4 லிட்­டர் பால் சுரக்­கி­றது. இவர் இது­வரை 2,271 லிட்­டர் பாலை, தான­மாக வழங்­கி­யி­ருக்­கி­றார். இவர் ஒரு நாளைக்கு 5 மணி நேரம் பால் எடுப்­ப­தற்­கும், மீதி 5 மணி நேரத்­தைப் பதப்­ப­டுத்­து­வ­தற்­கும் செல­வி­டு­கி­றார். தின­மும் 5 வேளை பாலைக் கறந்து, பதப்­ப­டுத்தி, பாக்­கெட்­க­ளில் அடைத்து, குளிர்­சா­த­னப் பெட்­டி­யில் வைத்­து­வி­டு­கி­றார்.

அந்­தப் பகு­தி­யில் இருக்­கும் இளம் தாய்­மார்­க­ளின் குழந்­தை­கள், ஓரி­னச் சேர்க்­கை­யா­ளர்­க­ளின் குழந்­தை­கள், மார்­ப­கப் புற்­று­நோ­யால் மார்­ப­கங்­களை இழந்­த­வர்­க­ளின் குழந்­தை­கள், ஹெச்.ஐ.வியால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குழந்­தை­கள், ஊட்­டச்­சத்­துக் குறை­பாடு உடைய குழந்­தை­கள் என்று தாய்ப்­பால் தேவைப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எலி­ச­பெத் இல­வ­ச­மா­கப் பாலை வழங்கி வரு­கி­றார்.