உளுந்து, பாசிப்பயறு இறக்குமதிக்கு தடை: வர்த்தகர்கள் கோரிக்கை

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017

விவ­சா­யி­க­ளுக்கு நியா­ய­மான விலை கிடைக்க உளுந்து,பாசிப் பயறு ஆகி­ய­வற்­றின் இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பா­டு­களை விதிக்க வேண்­டும் என்று வர்த்­த­கர்­கள் கூறி­யுள்­ள­னர்.

இந்த வரு­டம் இந்­தி­யா­வில் துவரை, உளுந்து, பாசிப்­ப­யறு ஆகி­ய­வற்­றின் விளைச்­சல் அப­ரி­த­மாக இருக்­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. துவரை விலை சரிந்­ததை அடுத்து, மத்­திய அரசு இதன் இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பா­டு­களை விதித்­தது. மத்­திய வர்த்­தக அமைச்­ச­கம் சென்ற 5ம் தேதி, இந்த நிதி ஆண்­டில் அதிக பட்­சம் 2 லட்­சம் டன் வரை மட்­டுமே இறக்­கு­மதி செய்­ய­லாம் என்று கட்­டுப்­பாடு விதித்து அறி­விக்கை வெளி­யிட்­டது.

இதே போல் உளுந்து, பாசிப்­ப­ய­றுக்­கும் இறக்­கு­மதி கட்­டுப்­பாடு விதிக்க வேண்­டும் என்று வர்த்­த­கர்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர். இது தொடர்­பாக இந்­தி­யன் பல்­சஸ் அண்ட் கிரைன் அசோ­சி­சன் (Indian Pulses and Grain Association--–IPGA) துணைத் தலை­வர் பிமல் கோத்­தாரி, “மத்­திய அரசு துவரை இறக்­கு­ம­திக்கு கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளதை வர­வேற்­கி­றோம். இத­னால் விவ­சா­யி­க­ளுக்கு நியா­ய­மான விலை கிடைக்க உத­வி­யாக இருக்­கும். இதே மாதிரி அரசு உட­ன­டி­யாக உளுந்து, பாசிப்­ப­ய­றுக்­கும் இறக்­கு­மதி கட்­டுப்­பாடு விதிக்க வேண்­டும். இவற்­றின் அறு­வடை தொடங்க உள்­ளது. அதி­கா­ர­பூர்வ தக­வல்­படி இந்த வரு­டம் உளுந்து, பாசிப்­ப­யறு அமோக விளைச்­சல் இருக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது” என்று அவர் தெரி­வித்­துள்­ளார்.

உலக அள­வில் மற்ற நாடு­க­ளில் உற்­பத்­தி­யா­கும் துவ­ரை­யில் பெரும்­பா­லனை இந்­தி­யா­வுக்கு ஏற்­று­மதி செய்ய முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இந்­தி­யா­வில் துவ­ரம் பருப்பு அதிக அள­வில் பயன் படுத்­தப்­ப­டு­வதே, இதற்கு கார­ணம். இந்த வரு­டம் ஆப்­பி­ரிக்க நாடு­க­ளில் 6 லட்­சம் டன் துவரை உற்­பத்­தி­யா­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இதே போல் மியான்­ம­ரி­லும் இரண்­டரை லட்­சத்­தில் இருந்து மூன்று லட்­சம் வரை உற்­பத்­தி­யா­கும் என்று மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. துவரை விளைச்­சல் அதிக அள­வில் இருப்­ப­தால் சென்ற வரு­டம் ஆப்­பி­ரிக்க சந்­தை­க­ளில் டன் 1,100 டால­ராக விற்­றது. இந்த வரு­டம் 350 டால­ராக சரிந்­துள்­ளது. இத­னால் வர்த்­த­கர்­கள் தற்­போது பருப்பு வகை­க­ளின் இறக்­கு­ம­திக்கு தடை விதிக்க வேண்­டும் என்­றும், இதன் ஏற்­று­ம­திக்கு அனு­ம­திக்க வேண்­டும் என்­றும் கூறு­கின்­ற­னர்.

உளுந்­துக்கு அர­சின் குறைந்­த­பட்ட ஆதார விலை கிலோ ரூ.54. ஆனால் தற்­போது விலை சரிந்து கிலோ ரூ.40 என்ற அள­வில் உள்­ளது. இதே போல் பாசிப்­ப­ய­றுக்கு அர­சின் குறைந்­த­பட்ட ஆதார விலை கிலோ ரூ.55.75 ஆனால் தற்­போது விலை சரிந்து கிலோ ரூ.45 முதல் ஐம்­பது என்ற அள­வில் உள்­ளது. துவ­ரைக்கு அர­சின் குறைந்­த­ பட்ட ஆதார விலை கிலோ ரூ.54.50. ஆனால் தற்­போது விலை சரிந்து கிலோ ரூ.43 என்ற அள­வில் உள்­ளது.

இந்த விலை சரி­வால் விவ­சா­யி­க­ளுக்கு கடு­மை­யாக நஷ்­டம் ஏற்­ப­டு­கி­றது. வாங்­கிய கடனை திருப்பி செலுத்த முடி­யா­மல் மானத்­திற்கு பயந்து தற்­கொலை செய்து கொள்­ளும் அவல நிலை தொடர்­கி­றது. குறைந்­த­பட்ச ஆதார விலைக்கு கொள்­மு­தல் செய்­வ­தில் மத்­திய, மாநில அர­சு­க­ளின் பாரா­மு­கத்­தால், விவ­சா­யி­கள் கடும் நஷ்­டத்­திற்கு விற்­பனை செய்­யும் துர்ப்­பாக்­கிய நிலையே தொடர்­கி­றது.

***