பழங்கால எழுத்தை படித்தால் 15 ஆயிரம் டாலர் பரிசு

பதிவு செய்த நாள் : 12 ஆகஸ்ட் 2017

பழங்­கால சீனா மொழியை வாசிக்க தெரிந்­த­வர்­க­ளுக்கு அங்­குள்ள அருங்­காட்­சி­ய­கம் ஒன்று ஒவ்­வொரு எழுத்­துக்­கும் 15 ஆயி­ரம் டாலர் பரிசு அளிப்­ப­தாக அறி­வித்­துள்­ளது.

சீனா­வின் தேசிய அருங்­காட்­சி­ய­கம் விடுத்­துள்ள அறி­விப்­பில், அங்­குள்ள பழங்­கால சுவடி ஒன்றை வாசித்து பொருள் விளக்­கு­ப­வர்­க­ளுக்கு ஒவ்­வொரு எழுத்­துக்­கும் 15 ஆயி­ரம் டாலர் பரிசு வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­துள்­ளது. இந்த சுவடி 3000 ஆண்­டு­கள் பழ­மை­யா­னது என­வும், ஷாங் வம்ச காலத்­தில் எழு­தப்­பட்­டது என­வும் கூறப்­ப­டு­கி­றது. அது மட்­டு­மின்றி குறிப்­பிட்ட குறிப்­பு­கள் ஆமை­க­ளின் ஓடு­க­ளி­லும் மாட்டு தோல்­க­ளி­லும் எழு­தப்­பட்­டுள்­ளது.

இது­வரை குறிப்­பிட்ட சுவ­டி­யில் எழு­தப்­பட்­டுள்ள 5000 எழுத்­துக்­க­ளில் பாதி அள­வுக்கு மட்­டுமே வல்­லு­நர்­க­ளால் வாசித்து அதன் பொருளை விளக்க முடிந்­துள்­ளது. வாசிக்­கப்­ப­டா­மல் 3,000 க்கும் அதி­க­மான எழுத்­து­கள் உள்­ளன. பல குறிப்­பு­கள் சீனா­வில் உள்ள மக்­கள் மற்­றும் இடங்­க­ளின் பெயர்­கள் என­வும், ஆனால் காலப்­போக்­கில் அவை யாவும் மாற்­றம் கண்­டுள்­ள­தால் தற்­போது இந்த குறிப்­பு­களை வாசித்து பொருள் விளக்­கு­வது என்­பது கடி­ன­மா­ன­தாக இருப்­ப­தாக சீனா­வைச் சேர்ந்த நிபு­ணர் தெரி­வித்­துள்­ளார்.