அப்பா ரொம்ப ஹேப்பி! – சவுந்தர்யா ரஜினிகாந்த்

09 ஆகஸ்ட் 2017, 02:30 AM'வேலை­யில்லா பட்­ட­தாரி 2' படத்­தின் ரிலீஸ் பர­ப­ரப்­பில் நம்­மி­டம் பேசி­னார் படத்­தின் இயக்­கு­னர் சவுந்­தர்யா ரஜி­னி­காந்த்...

* முதல் பாகத்­தின் விறு­வி­றுப்பை இதில் எப்­படி தொடு­வீர்­கள்?

எனக்கு தனுஷ் சார் எழுத்து மேல் ரொம்ப நம்­பிக்கை. சாதா­ரண மக்­க­ளின் மன­நி­லை­களை அவ்­வ­ளவு அழகா பிர­தி­ப­லிப்­பார். 34 படங்­கள் நடிச்­ச­வர். இந்தி சினி­மா­விற்­கும் போயிட்­டார். இப்போ ஹாலி­வுட் படம் வேறே. அவர் எந்த படத்­தி­லும் சும்மா வந்­திட்­டுப்­போற நடி­கர் இல்லே. இதில் வரு­கிற மாதிரி மிடில் கிளாஸ் பைய­னா­க­வும் வாழ்ந்து காட்­டு­வார். அடுத்து ‘புதுப்­பேட்டை’ மாதி­ரி­யும் செய்­வார்.

சாத்­தி­யமே இல்­லாத பைன் டியூன் பண்­ணின நடிப்பு. எங்க யூனிட்­டிற்கே பார்க்க  பார்க்க ஆசையா இருந்த நடிப்பு. படு லோக்­கல் வாழ்க்­கை­யை­யும், ஒரு ஹைகி­ளாஸ் லைபை­யும் அவர் கடந்து போற விதம், சொல்­லிக் கொடுத்­தால் மட்­டும் வராது. நீங்­கள் கதை­யின் நுட்­பங்­களை மன­தில் கொண்டு வந்­தால் தவிர இதெல்­லாம் சாத்­தி­யமே இல்லை.

அவரே எழு­தின கதை வேறயா, இதன் நீளம், அக­லங்­கள், எந்த அள­வுக்கு எமோ­ஷன் கன்ட்­ரோல் பண்­ண­ணும் என்­பது வரைக்­கும் அவ­ருக்கு அத்­துப்­படி. போகிற போக்­கில் கிண்­ட­லாக சொல்­லி­விட்­டுப் போகிற வரி­யும், நடிப்­பின் பாவ­னை­யும் அச­ர­டிக்­கும். அவ­ருக்கே இது முக்­கி­ய­மான படம்­தான்.

* தனு­ஷின் தொடர்ச்சி என்ன?

ஒரு மிடில் கிளாஸ் பைய­னோட சாமர்த்­தி­யம், அவ­னோட ஆசை­கள், குடும்ப சூழ்­நிலை, வேலைன்னு வந்­திட்­டால் எதிர்­கொள்­கிற சூழ்­நி­லைன்னு முதல் பகுதி இருந்­தது. இதில் ரகு­வ­ரன் கேரக்­ட­ரின் அடுத்த கட்­டம். காதலி, மனைவி ஆகிய அவ­ரு­டைய அடுத்­த­டுத்த இடம்னு போயி­ருக்கு. இந்­தப் படம் சரி­யாக அமைய நல்ல கதை அம்­சங்­கள் கிடைத்­தன. சில இடங்­கள் மாறு­த­லா­கும். ஆனால், எந்­தக் கட்­ட­மும் சுவா­ரஸ்­யத்­திற்கு குறை வைக்­காது.

படம் நல்லா வர­ணும்னு நினைச்­ச­தில் எனக்­கி­ருந்த ஆசைக்கு, அவ­ரு­டைய நினைப்பு குறைஞ்­ச­தில்லே. அவ­ரும், கஜோ­லும் எதிர்­கொள்­கிற இடங்­கள் அன­லும், சூடும் பறக்­கும். அப்­படி பார்க்­கும்­போது பெண்­களை குறை­வாக மதிப்­பி­டும் காட்­சி­களோ, கேலி செய்­யும் இடமோ இருக்­காது. அதில் ஆரம்­பம் முதற்­கொண்டு தெளி­வாக இருந்­தி­ருக்­கேன்.

* கஜோல் ஏன்?

இந்த வசுந்­தரா கேரக்­டர் கஷ்­ட­மான ரோல். ஒரு பெரிய அனு­ப­வ­சாலி தவிர யாரும் செய்ய முடி­யாது. தனுஷ் சார் எழு­தும்­போேத நினை­வுக்கு வந்­தது கஜோல்­தான். சாத்­தி­ய­மான்னு தெரி­வ­தற்கு முன்­னா­டியே கண்­ணில் வந்து நின்­ன­தும் அவ­ரே­தான். அவர் எங்க மேலே வச்­சி­ருந்த அன்­பிற்­கும் மேலே, அவங்­க­ளுக்கு கதை பிடிச்­சி­ருந்­தது. அவர்­கள் படத்­தின் எமோ­ஷன், பீலிங்­கிற்­காக பாடு­பட்­டது அதி­கம்.

ஒவ்­வொரு தட­வை­யும் வச­னங்­க­ளுக்­கான அர்த்­தம் கேட்டு, புரிந்து செய்­ததை அவ்­வ­ளவு ரசிச்­சோம். ‘கட்’ சொல்ல மறந்து நின்ன இடங்­கள் அனே­கம். அவங்க ஸ்பாட்­டுக்கு வந்­திட்­டால்  முழு கவ­ன­மும் நடிப்­பில்­தான். அவர் மக்­கள் மன­தி­லும் நிற்­பார். தனுஷ், கஜோல் இரண்டு பேருக்­கும் கருத்து மோதல் வரு­கிற இடங்­கள் படத்­திற்­கான ைஹலைட்ஸ்.

* படப்­பி­டிப்­புக்கு ரஜினி வந்­தது பற்றி?

எனக்கு அவர் வரு­வார்ன்னு தெரி­யாது. முன்­னாடி ‘சும்மா ஒரு தடவை வந்­திட்­டுப் போங்­களே அப்­பா’ன்னு சொல்­லிட்டு இருப்­பேன். சிரிச்­சுக்­கிட்டு போயி­டு­வார். நானும் அவர் போக்­கில் விட்­டுட்­டேன். ஆனால், வந்­தார். நான் அவர் வந்­ததை முத­லில் கவ­னிக்­கலே. வேலை­யில் பிசியா இருந்­தேன். அதைப் பார்த்­துட்டு அப்பா ரொம்ப ஹேப்பி. என்­னால் ஒரு கமர்­ஷி­யல் படத்­தை­யும் டைரக்ட் செய்ய முடி­யும்னு அவ­ருக்கு நம்­பிக்கை இருந்­தது. தயா­ரிப்­பா­ள­ரின் சிர­மத்தை புரிஞ்­சுக்­க­ணும்னு அவர் எப்­ப­வும் சொல்­றதை நானும் புரிஞ்­சுக்­கிட்­டேன்.

* அடுத்து?

அஜீத்தை வச்சு இயக்­க­ணும்னு ஆசை ஓடிக்­கிட்டே இருக்கு. பார்க்­க­லாம். தொடர்ந்து படங்­கள் செய்­ய­ணும்னு கனவு இருக்கு. எல்­லாம் கூடி வரும்­போது சொல்­றேன். இப்ப கன­வு­கள் கன­வு­க­ளா­கவே இருக்­கட்­டுமே!