ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 9–8–17

09 ஆகஸ்ட் 2017, 01:32 AM

திறமைசாலிகளை  விடமாட்டார்!

(சென்ற வார தொடர்ச்சி...)

ஒரு சம­யம் இளை­ய­ராஜா தன் அண்­ணன் பாஸ்­க­ரோடு மனம்­விட்டு பேசிக்­கொண்­டி­ருந்த போது, “அண்ணா! நாம் கிரா­மத்தை விட்டு வரும்­போது அம்மா நம்­மி­டம் பட்­ட­ணத்­தில் வேலை கிடைக்­கா­விட்­டால் என்ன செய்­வீர்­கள்? என்று கேட்­டார்­கள். பதி­லுக்கு நாம் ‘அப்­படி ஒரு வேளை எதிர்­பார்த்­த­படி வேலை கிடைக்­க­வில்­லை­யென்­றால், பிளாட்­பா­ரத்­திலோ தெரு­விலோ ஜனங்­கள் முன்பு உட்­கார்ந்து வாசிப்­போம். எங்­க­ளுக்­கென்ன கவலை?’ என்று சொன்­னோ­மல்­லவா… அப்­படி வாசிக்­கும் நிலைமை ஏற்­ப­ட­வில்­லை­யென்­றா­லும் கடற்­க­ரை­யில் உட்­கார்ந்து வாசிப்­பது போல ஒரு போட்­டோ­வா­வது எடுத்­துக் கொள்­வோமா?” என்று இளை­ய­ராஜா கேட்­டி­ருக்­கி­றார். பாஸ்­க­ருக்­கும் சரி­யெ­னப்­பட, உடனே கடற்­க­ரைக்கு சென்­றி­ருக்­கி­றார்­கள்.

அவர்­கள் சென்ற நேரம் அங்கே 'சிகப்பு ரோஜாக்­கள்' படப்­பி­டிப்பு நடந்து கொண்­டி­ருக்­கி­றது. பார­தி­ரா­ஜா­வி­டம் சென்று இதைச் சொல்ல, அங்கே இவர்­கள் பிளாட்­பா­ரத்­தில் வாசிப்­பது போல­வும், பார­தி­ரா­ஜா­வும், கம­லும் இவர்­க­ளின் பாட்டை கேட்­டுக்­கொண்டே தரை­யில் விரித்­தி­ருந்த துண்­டில் காசு போடு­வது போல­வும் போட்டோ எடுத்­துக் கொண்­டார்­கள்.

இந்த கால­கட்­டத்­தில்­தான் இளை­ய­ராஜா தனக்கு தோதான இசைக்­க­லை­ஞர்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­துக் கொண்­டி­ருந்­தார். ஜி.கே. வெங்­க­டேஷ் குழு­வில் சிதார் வாசித்­துக் கொண்­டி­ருந்த ஒரு சின்­னப்­பை­ய­னின் நாதம் இளை­ய­ரா­ஜா­விற்கு பிடித்­தி­ருந்­தது. வாசிப்­பது யார் என்று கேட்­டார். பெயர் கணேஷ், இசை­ய­மைப்­பா­ளர் எம்.எம். முத்­து­வின் மகன் என்­றார்­கள். என் குழு­வில் உங்­கள் பையனை சேர்த்­துக் கொள்ள விரும்­பு­கி­றேன் என்று கேட்க, அவ­ரும் சம்­ம­தித்­தார். அப்­போது அந்த கணே­ஷிற்கு வயது 18.

ஜி.கே.வியின் குழு­விலே இளை­ய­ராஜா அறிந்த இன்­னொரு வாத்­தி­யக்­க­லை­ஞர், சுதா­கர் கைபா. இவர் விலங்­கி­யல் துறை­யில் முது­கலை பட்­டம் பெற்­ற­வர். அர­சின் விலங்­கி­யல் துறை­யில் வேலை பார்த்­துக் கொண்டே பகுதி நேர வாசிப்­பா­ள­ராக ஜி.கே.வியின் குழு­வில் வாசித்­துக் கொண்­டி­ருந்­தார். யாரி­ட­மும் சங்­கீ­தம் கற்­கா­ம­லேயே புல்­லாங்­கு­ழ­லுக்கு வாக்­கப்­பட்­ட­வர். இந்த சுதா­க­ரை­யும் தன் குழு­வில் இணைத்­துக் கொண்­டார் இளை­ய­ராஜா. குழு­வில் சேர்­வ­தற்கு முன் சுதா­கர் இளை­ய­ரா­ஜா­வி­டம் “எனக்கு நோட்­ஸைப் பார்த்து வாசிக்­கத் தெரி­யாது. கேட்டு வாசிப்­ப­வன் நான்” என்­றி­ருக்­கி­றார். “எப்­படி வாசிக்க வைப்­பது என்று எனக்­குத் தெரி­யும்” என்று சொல்லி தன் குழு­வில் இணைத்­துக் கொண்­டார்.

இந்த வாத்­தி­யக்­க­லை­ஞர்­களை பற்றி சொன்­ன­தற்­குக் கார­ணம் என்­ன­வென்­றால், ஒரு­வ­ரு­டைய வாசிப்பு நன்­றாக இருந்­தால் அவரை தன் இசைத்­தொ­குப்­பில் எப்­ப­டி­யும் அழ­காக பயன்­ப­டுத்த முடி­யும் என்ற அசாத்­திய தன்­னம்­பிக்கை இளை­ய­ரா­ஜா­விற்கு இருந்­தது என்­பதை சொல்­லத்­தான்.

– தொடரும்