ஆக்சிஜன் குறைவான இடங்களில் இருந்தோம்! – -இயக்­கு­னர் சிவா

09 ஆகஸ்ட் 2017, 01:31 AM

'சிறுத்தை' சிவா என்­ற­ழைக்­க­பட்­ட­வர் இன்று அஜீத்­தின் சிவா­வாக மாறி­யுள்­ளார் இயக்­கு­னர் சிவா. 'வீரம்', 'வேதா­ளம்' படங்­களை தொடர்ந்து தற்­போது 'விவே­கம்' படத்தை இயக்­கி­யுள்­ளார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து...

* உங்­கள் படங்­க­ளின் டைட்­டில் கார்­டில், 'சிவா அண்ட் டீம்' என்று பெயர் போடு­கி­றீர்­களே, கார­ணம்?

என்­னோடு பணி­யாற்­றும் நாங்­கள் ஒரு அணி! நாங்­கள் கடு­மை­யான உழைப்­பை­யும் நேர்­மை­யான படத்­தை­யும் திரும்­பத்­தி­ரும்ப கொடுத்­துக் கொண்டே இருப்­போம்.

ஒவ்­வொரு படத்­துக்­கும் அணி­யி­னரை மாற்­று­வது என்­னால் முடி­யாது. எனது அணி­யி­னர் அனை­வ­ருமே நான் நன்­றாக இருக்க வேண்­டும், நல்ல படங்­கள் எடுக்க வேண்­டும் என நினைப்­பார்­கள். எனது அணி­யில் உள்ள உதய், வெற்றி, முத்து உள்­ளிட்ட அனை­வ­ருமே ஒன்­றாக படித்­தோம். அந்த கால­கட்­டத்­தி­லி­ருந்து இன்று வரை ஒன்­றாக பய­ணிக்­கி­றோம். இனி­யும் பய­ணிப்­போம்.

* 'விவே­கம்' படத்­தின் கதை?

ஒவ்­வொரு மனி­த­ரும் தன்­னு­டைய வாழ்க்­கை­யில் ஒரு சந்­தர்ப்­பத்­தி­லா­வது தோல்­வியை சந்­திப்­பார். ஆனால், ‘தோல்­வியை சந்­தித்­தா­லும் கடை­சி­வ­ரைக்­கும் தோல்­வியை ஒப்­புக்­கொள்­ளா­மல் போரா­டிக்­கொண்டே இருப்­பேன், வெற்றி என்னை வந்து சேரும்’ என்ற முனைப்­போடு இருக்­கும் மனி­தர்­களை ஜெயிக்­கவே முடி­யாது என்­ப­து­தான் 'விவே­கம்' படத்­தின் கதைக்­கரு.

* 'வீரம்', 'வேதா­ளம்', 'விவே­கம்' அடுத்­த­டுத்து அஜீத் படங்­கள் பண்­ணு­வ­தன் ரக­சி­யம் என்ன?

 முத­லில் அஜீத் சாரு­டன் பணி­பு­ரி­வது என்­பது ஒரு வரம். திற­மை­யான, நல்ல நடி­கர், கடின உழைப்­பாளி. ஒரு படத்தை ஒப்­புக்­கொண்­டார் என்­றால், அதற்கு என்ன தேவையோ அதை ரொம்ப நேர்­மை­யாக செய்­வார். ஒவ்­வொரு படத்­தை­யும் சிறப்­பா­க­வும், அவர் நம் மீது வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யைக் காப்­பாற்­றும் விதத்­தி­லும் செய்ய வேண்­டும் என்­று­தான் முத­லில் நினைப்­பேன். எப்­படி அவர் மீது எனக்கு இருக்­கும் மதிப்பு, மரி­யாதை அதி­க­ரித்­துக் கொண்டே இருக்­கி­றதோ, அதே மாதிரி ஒவ்­வொரு படத்­தி­லும் அவர் என் மீது வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கையை தக்க வைத்­துக்­கொள்ள வேண்­டும் என நினைப்­பேன்.இவ்­வ­ள­வு­தான் ரக­சி­யம்.

* 'விவே­கம்' வெளி­நாட்­டில் நடக்­கும் கதையா?

ஆமாம்! ‘விவே­கம்’ வெளி­நாட்­டில் நடை­பெ­றும் கதை­யாக இருந்­தா­லும், இந்­தி­யர்­கள் சம்­பந்­தப்­பட்ட கதை­தான். இந்­திய உணர்­வு­கள், குடும்ப உற­வு­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் ஆகி­ய­வற்றை சர்­வ­தேச கதைக்­க­ளத்­தில் கூறி­யுள்­ளேன். ‘ஸ்பை த்ரில்­லர்’ வகை­யில் இப்­ப­டம் இருக்­கும். இந்த வகை­யில் தமிழ் திரை­யு­ல­கில் அதிக படங்­கள் வந்­த­தில்லை.

* வெளி­நாட்டு படப்­பி­டிப்பு அனு­பவங்­கள்..?

மைனஸ் 16 டிகிரி குளி­ரில் படப்­பி­டிப்பு செய்­தோம். கடு­மை­யான குளிர், உய­ர­மான – ஆக்சி­ஜன் குறை­வான இடங்­கள், இது­வரை கேமரா வைக்­காத இடங்­கள், மனி­தர்­களே போகாத இடங்­கள் என ரொம்ப கஷ்­டப்­பட்­டுப் பட­மாக்­கி­யுள்­ளோம்.

ஒவ்­வொரு நாளுமே சவா­லா­க­வும், அந்த நாள் படப்­பி­டிப்பு முடிந்­த­வு­டன் பெரி­தாக சாதித்­து­விட்ட திருப்­தி­யு­டன்­தான் வரு­வோம். உறைய வைக்­கும் குளி­ரில் பட­மாக்­கிய பைக் துரத்­தல் காட்­சியை மறக்­கவே முடி­யாது. ஏனென்­றால், பட­மாக்­கிய சாலை­கள் பனி­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தன. அதற்கு மேல் பைக் துரத்­தல் என்­பது சாதா­ர­ண­மான விஷ­ய­மல்ல. அந்த அனு­ப­வத்தை படம் பார்க்­கும்­போது அனை­வ­ருமே உணர்­வார்­கள்.

‘தலை விடு­தலை’ என்ற பாட­லுக்­காக செர்­பி­யா­வின் பனிப்­பி­ர­தே­சத்­தில் மலை உச்­சி­யில் காட்­சி­கள் எடுக்­கப்­பட்­டன. அந்த இடத்­துக்கு போகும்­போதே இரவு 1 மணிக்கு எங்­க­ளது வண்டி பனி­யில் சிக்­கிக் கொண்­டது. கிட்­டத்­தட்ட 5 மணி நேரம், எந்­த­வித உத­வி­யு­மின்றி பனிப்­பொ­ழி­வுக்கு நடு­வில் பயத்­தோடு நின்று கொண்­டி­ருந்­தோம். கட­வுள் புண்­ணி­யத்­தில் எங்­களை மீட்டு விட்­டார்­கள். இப்­படி பல இடங்­க­ளில் படப்­பி­டிப்பு நடத்­தும் போது, அஜீத் சார் எங்­கே­யும் முகம் சுளிக்­கவே இல்லை! எனது அணி­யும் மனம் தள­ர­வில்லை.

* அடுத்­த­தும் அஜீத் படமா?

அவ­ரி­டம் இருந்து அழைப்பு வந்­தால்­தான் சொல்ல முடி­யும். அப்­படி அமைந்­தால் எனக்கு மிகப்­பெ­ரிய 'லக்.'