மீண்­டும் களம் இறங்­கும் ஸ்ரீசாந்த் தடையை நீக்க பிசி­சி­ஐக்கு உத்­த­ரவு

பதிவு செய்த நாள் : 08 ஆகஸ்ட் 2017 10:14


கொச்சி:

 இந்­திய கிரிக்­கெட் அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க ­ளில் ஒரு­வ­ராக இருந்த கேர­ளா­வைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், கடந்த 2013ம் ஆண்டு நடை­பெற்ற ஐபி­எல் போட்­டி­க­ளின் போது, ‘மேட்ச் பிக்­சிங்’ ஊழ­லில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்­டில் சிக்­கி­னார். அவரை டில்லி போலீ­சார் கைது செய்­த­னர். அவ­ரி­டம் விளக்­கம் கேட்­கா­ம­லேயே முதல் தக­வல் அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட்­டது. இதைத் தொடர்ந்து கிரிக்­கெட் போட்­டி­க­ளில் பங்­கேற்க ஸ்ரீசாந்த்­துக்கு வாழ்­நாள் தடை விதித்து பிசி­சிஐ உத்­த­ர­விட்­டது.

எனி­னும்,  2015ம் ஆண்டு இது­கு­றித்து விசா­ரித்த டில்லி கோர்ட், ஸ்ரீசாந்த் உட்­பட குற்­றச்­சாட்­டில் சிக்­கிய நபர்­களை விடு­வித்­தது. ஆனா­லும், டில்லி கோர்ட் உத்­த­ரவு மட்­டும் அவர் மீதான தடையை நீக்க போது­மா­ன­தல்ல என்று பிசி­சிஐ கூறி­யி­ருந்­தது. இது­கு­றித்து கொச்சி ஐகோர்ட்­டில் ஸ்ரீசாந்த் கடந்த மார்ச் மாதம் மனு தாக்­கல் செய்­தார். ‘குற்­றச்­சாட்­டில் இருந்து கோர்ட் என்னை விடு­வித்த பின்­ன­ரும், என் மீதான வாழ்­நாள் தடையை நீக்க பிசி­சிஐ மறுக்­கி­றது. இது அர­சி­யல் சாச­னம் எனக்கு வழங்­கிய உரி­மையை மீறும் செய­லாக உள்­ளது’ என்று கூறி­யி­ருந்­தார்.

இந்த மனு­வுக்கு பதில்­மனு தாக்­கல் செய்த பிசி­சிஐ,‘கோர்ட் உத்­த­ரவு மட்­டுமே ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க போது­மா­ன­தல்ல’ என்று மீண்­டும் கூறி­யது. ஆனால், பிசி­சிஐ மனுவை கொச்சி கோர்ட் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. ஸ்ரீசாந்த் மீதான வாழ்­நாள் தடையை நீக்க உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பிசி­சி­ஐக்கு கொச்சி ஐகோர்ட் உத்­த­ர­விட்­டுள்­ளது. இதை­ய­டுத்து, ஸ்ரீசாந்த் மீண்­டும் கிரிக்­கெட்­டில் களம் இறங்­கு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.