பாட்டிமார் சொன்ன கதைகள் – 125– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 04 ஆகஸ்ட் 2017

கர்ம வினைக்கு தெய்வங்களும் தப்பாது!

கண்­ணன் சொன்­னார், `அவ­ரப்­ப­டாதே, கர்­ணன் இன்­னும் தள­ர­வில்லை. முழு வலி­வு­டன் இருக்­கி­றான். அவ­னது ஆன்­ம­ப­லம் குன்­றும் நேரம் எனக்கு தெரி­யும். அப்­போது அவன் மீது போர் தொடுக்­க­லாம் சற்­றுப் பொறு’ என்­கி­றார்.

 பொய் சொல்லி கற்ற அஸ்­தி­ரங்­கள் ஆபத்து சம­யத்­தில் மறந்து போகும் என்று பர­சு­ரா­மர் அளித்த சாபம் நிறை­வே­றும் சம­யம் நெருங்­கு­வதை உள்­ளு­ணர்­வால் உணர்ந்த கிருஷ்­ணர், உடனே ரதத்தை கர்­ணனை நோக்கி செலுத்­தி­னார். தேர்ச்­சக்­க­ரம் மண்­ணில் புதை­யவே அதை தூக்கி நிறுத்த கர்­ணன் முயன்­ற­போது அர்­ஜூ­னன் பாசு­ப­தத்­தால் கர்­ண­னின் தலையை துண்­டித்­தான்.

 கர்­ண­னின் வீர­ம­ர­ணம் முழுக்க அதர்­மமே என்­பது பல­ரின் கருத்து. சஞ்­ச­யன் கூட திரு­தி­ராஷ்ட்­ர­னி­டம் ` அரசே! இவ்­வாறு அதர்­மம் நடந்­து­விட்­டது’’ என்றே கூறி­னான்.

  இது பற்றி கதை­க­ளில் பல­வாறு விளக்­கம்  சொல்­லப்­பட்­டுள்­ளது. அதில் முக்­கி­ய­மா­னது ஒரு அம்­சம்­தான்.

 ராமா­வ­தா­ரத்­தில் வாலி , இந்­தி­ரன் மகன். சுக்­கீர்­வன் சூரி­யன் மகன், ராமர் விஷ்­ணு­வின் அவ­தா­ரம். சூரி­யன் மக­னான சுக்­ரீ­வன் இந்­தி­ரன் மக­னான வாலியை விஷ்­ணு­வின் அம்­ச­மான ராமன் உத­வி­யு­டன் கொன்­றான்.

  பதி­லுக்கு அடுத்த பிற­வி­யில் இந்­தி­ரன் மக­னான அர்­ஜு­னன் சூரி­யன் மக­னான  கர்­ணணை விஷ்­ணு­வின் அம்­ச­மான  கிருஷ்­ணர் உத­வி­யு­டம் கொன்­றான்.

 இப்­படி ஒரி­டத்­தி­லும், மற்­றோ­ரி­டத்­தில் வேறு வித­மான கதை சொல்­லப்­பட்­டுள்­ளது.

 யாதவ வம்­சத்­தின் அழி­வுக்­குப்­பின் கிருஷ்­ணர் சோர்­வு­டன் மரத்­த­டி­யில் சாய தூரத்­தி­லி­ருந்து வேடன் ஏதோ ஒரு மிரு­கம் என்று நினைத்து அம்பை எய்­கி­றான்.

 ஜரன் என்ற அந்த வேடன் அரு­கில் வந்து பார்த்து கிருஷ்­ணர் குதி­கா­லில் அம்பு ஆழப் பாய்ந்து இருப்­பது கண்­டும் மனம் பதறி குமு­று­கி­றான்.

 கிருஷ்­ணர், சிர­மப்­பட்டு மெல்ல புன்­மு­று­வல் செய்­த­படி வேடன் நெற்­றி­யில் கைவைக்­கி­றார். மறு­க­ணம், அவன் மனக்­கு­கை­யி­லி­ருந்து எண்­ணற்ற பிம்­பங்­கள் எழு­கின்­றன. அதில் ஒன்­று­தான் அவ­னது முந்­தைய பிறவி.

சுக்­ரீ­வன் அடை­யா­ளம் தெரி­வ­தற்­காக  காட்­டுக் கொடி­க­ளால் ஆன  மாலை­யு­டன் சண்­டை­யி­டு­கி­றான். அண்­ணன் வாலி சுக்­ரீ­வனை  பந்­தா­டு­கி­றான். அப்­போது மறைந்­தி­ருந்த ராமர், அவன் மார்பை குறி­வைத்து அம்பு எய்­கி­றார். அம்பு பாய்ந்து வாலி மண்­ணில் சாய்­கி­றான்.

 அந்த தான்­தான் என்­ப­தை­யும், அந்த ராமரே, எதிரே இருக்­கும் கிருஷ்­ணர் என்­ப­தை­யும் உணர்­கி­றான் ஜரன். ராமர் தன் மீது மறைந்­தி­ருந்து அன்பு எய்து கொன்­ற­தால், பதி­லுக்கு யார் என்று தெரி­யா­மல் தான் எய்த அம்பு கிருஷ்­ண­ரின் உரியை பறிக்­கப்­போ­கி­றது என்­பதை உணர்ந்த அவன் கர்ம வினைக்கு கட­வு­ளும் விலக்­கல்ல என்­பதை உணர்ந்து ஊழ்­வி­னை­யின் வலி­மையை எண்ணி பிர­மிக்­கி­றான்.

 கர்­ண­னின் வதம் குறித்து மற்­றொரு கதை­யும் உண்டு. அர்­ஜு­ன­னும், கிருஷ்­ண­ரும் முற்­பி­ற­வி­க­ளில் ஒன்­றில் நர­நா­ரா­ய­ணர்­க­ளா­கப் பிறந்­தி­ருந்­த­னர்.

  இதனை பீஷ்­மர் பல இடங்­க­ளில் குறிப்­பி­டு­கி­றார். கிருஷ்­ணர் தூது­வந்­த­போது  சமா­தா­னத்­தின் கடைசி கதவு இது­தான் என்­ப­தை­யும், இது மூடப்­பட்­டால் பின்­னால் பெரும் அழி­வு­தான் மிஞ்­சும் என்­ப­தை­யும் உணர்ந்த அவர் துரி­யோ­த­ன­னுக்கு பல­வாறு அறி­வுரை கூறு­கி­றார்.

`உங்­க­ளில் பிரி­யத்­துக்கு உகந்­த­வ­னான அங்க மன்­னன் கர்­ணனை நான் அதி­ர­தர்­கள் கணக்­கில் சேர்க்க மாட்­டேன். இவன் தான் பிறவி சம்­பத்­தான கவச குண்­ட­லங்­களை இழந்து விட்­ட­ப­டி­யால் நமக்கு யுத்­தத்­தில் அதி­க­மாக பயன்­ப­ட­மாட்­டான். பர­சு­ரா­ம­ரின் சாபத்­தால் முக்­கி­ய­மான தரு­ணத்­தில் இவன் தன் நினைவை இழந்து பரி­த­விப்­பான். அர்­ஜு­ன­னோடு, செய்­யப்­போ­கும் யுத்­தத்­தில் இவன் மீள­மாட்­டான்.  அர்­ஜு­ன­னும், கிருஷ்­ண­ரும் நர­நா­ரா­ய­ணர்­கள் என்­பதை அறி­வா­யாக. வட வைத்­தி­யும், ஊழிக் காற்­றும் சேர்ந்து பெருங்­காட்டை எரிப்­பது போல், இவர்­கள் நமது சேனையை எரிக்­கப் போகி­றார்­கள்.

 இவ்­வாறு அவர் தெளி­வாக விளக்­கி­யும் துரி­யோ­த­னன் ஏற்­க­வில்லை.

 இங்கு குறிப்­பிட நரன், நாரா­ய­ணன் இரு­வ­ருமே ரிஷி­கள். அப்­போது அசு­ரன் ஒரு­வன் இருந்­தான். கடுந்­த­வத்­தின் கார­ண­மாக பிரம்­ம­னி­டம் பெற்ற வரத்­தால் ஆயி­ரத்­தெட்டு கவ­சங்­கள் அவ­னுக்கு இருந்­தன.

இத­னால் சகஸ்ர கவ­சன் என்றே அவ­னுக்கு பெயர் வழங்­கி­யது. (சஹஸ்­ரம் என்­றால் ஆயி­ரத்­தெட்டு என்று பொருள். ஆல­யங்­கள்ல் இறை­வ­னின் ஆயி­ரத்­தெட்டு பெயர்­களை கூறி அர்ச்­சனை செய்­வ­தா­லேயே  அதற்கு சஹஸ்­ர­நாம அர்ச்­சனை என்று பெயர்)

 ஆயி­ரத்­தெட்டு கவ­சங்­க­ளு­டன் கூடிய சஹஸ்ர கவ­சனை எதிர்த்து நாரா­ய­ணர் போரிட்­டார். அவ­னி­டம் தவ பல­மும், போர்த் திற­னும் நிரம்பி இருந்­த­தால், பனி­ரண்டு ஆண்­டு­கள் தவம் செய்­வார் பின்­னர் பனி­ரெண்டு ஆண்­டு­கள் போரிட்டு ஒரு கவ­சத்தை உடைப்­பார். இப்­படி ஒவ்­வொன்­றாக ஆயி­ரத்தி ஏழு கவ­சங்­களை உடைத்­தார். கடை­சி­யாக் அஒரே ஒரு கவ­சம் மட்­டும் மிஞ்சி இருந்­தது.

 நிலை­மை­யின் கடு­மையை உணர்ந்த சஹஸ்ர கவ­சன் பூலோ­கத்­தில் ஓடி ஒளிந்து கொண்­டான். அவன் மனி­த­னாக பிறவி எடுக்­கவே நர- நாரா­ய­ணர்­க­ளும், மனி­தப் பிறவி எடுத்­த­னர். நர­ம­க­ரிஷி அர்­ஜு­ன­னா­க­வும், நாரா­ய­ணர் கிருஷ்­ண­ரா­க­வும் அவ­த­ரித்­த­னர். சஹஸ்ர கவ­ச­னின் அம்­சமே கர்­ண­னாக  பிறவி எடுத்­தது. அந்த ஒரே ஒரு கவ­சம் அவன் பிறந்­த­போதே உட­லு­டன் ஒட்­டிப் பிறந்­தது.

 கடு­மை­யான கடை­சிப் போர் இது என்­ப­தால் தவத்தை நர­னும்,  யுத்­தத்தை நாரா­ய­ண­னும் மேற்­கொண்­ட­னர். பனி­ரெண்டு ஆண்டு வன­வா­சத்­தின்­போது, அர்­ஜு­னன் மனம் இடை­ய­றாது தவத்­தில் முழு­கி­யது. இதை­ய­டுத்து நாரா­ய­ணர் வழி­காட்­டு­த­லில் போரில் கர்­ணன் வீழ்த்­தப்­பட்­டான்.

 இயற்கை ஒரு மனி­தனை படைக்­கு­போதே எப்­போது அவ­னுக்கு என்ன தேவைப்­ப­டு­றதோ அதனை வழங்கி வரு­கி­றது.

- – தொடரும்.