சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 306– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 02 ஆகஸ்ட் 2017

ரஜி­னி­காந்த்­தின் நட்­சத்­திர அந்­தஸ்தை உயர்த்­திய படங்­க­ளில் முக்­கி­ய­மா­னது ‘அண்­ணா­மலை’. இப்­ப­டம் 175 நாட்­கள் ஓடி மகத்­தான வெற்றி பெற்­றது.

1992ம் ஆண்டு வெளி­வந்த இப்­ப­டத்­தில் ரஜி­னி­காந்த், சரத்­பாபு, ராதா­ரவி, ஜன­க­ராஜ், ‘நிழல்­கள்’ ரவி, வினு சக்­ர­வர்த்தி, கரண், குஷ்பு, ரேகா, மனோ­ரமா, வைஷ்­ணவி, தாட்­சா­யிணி உட்­பட பலர் நடித்­தி­ருந்­தார்­கள்.

''பாட்ஷா'' படத்­தின் மாபெ­ரும் வெற்­றியை தொடர்ந்து ரஜி­னியை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்­கி­யி­ருந்த படம் இது.

 பால் வியா­பா­ரம் செய்­யும் ரஜி­னி­யும், பணக்­கா­ர­ரான ராதா­ர­வி­யின் மகன் சரத்­பா­பு­வும் சிறு வயது முதல் நெருங்­கிய நண்­பர்­கள். சரத்­பாபு தன் தந்­தை­யின் விருப்­பwத்­துக்கு மாறாக, ஏழை பெண் ரேகாவை திரு­ம­ணம் செய்து கொள்ள ரஜினி உத­வு­கி­றார்.

 இத­னால் ரஜினி மீது ராதா­ர­விக்கு கோபம் ஏற்­ப­டு­கி­றது. எனவே ரஜி­னி­யி­ட­மி­ருந்து தன் மக­னைப் பிரிக்­கத் திட்­டம் தீட்­டு­கி­றார் ராதா­ரவி.

 ரஜினி குஷ்­பு­வைக் காத­லித்து மணந்து கொள்­கி­றார். ரஜி­னிக்கு சொந்­த­மான இடத்­தில் ஐந்து நட்­சத்­திர விடுதி ஒன்றை கட்­டத் திட்­ட­மி­டு­கி­றார் ராதா­ரவி. மதிப்பு மிகுந்த தன் நிலத்­துக்­குப் பணம்­கூட பெற்­றுக் கொள்­ளா­மல் பெருந்­தன்­மை­யு­டன் சும்­மாவே அதை தரு­கி­றார் ரஜினி.

 ஐந்து நட்­சத்­திர விடுதி கட்­டப்­ப­டு­கி­றது. அதற்கு அரு­கி­லுள்ள ரஜி­னி­யின் வீடு நட்­சத்­திர விடு­தி­யின் கம்­பீ­ரத்­தைக் கெடுப்­ப­தா­கச் சொல்லி அதை இடிக்க உத்­த­ர­வி­டு­கி­றார் ராதா­ரவி. இதில் ஏற்­ப­டும் வாக்­கு­வா­தத்­தில் ராதா­ர­வியை அடித்து விடு­கி­றார் ரஜினி. இத­னால் கோப­ம­டை­யும் சரத்­பாபு, ரஜி­னி­யின் குடி­சையை புல்­டோ­சர் வைத்து இடித்து விடு­கி­றார்.

 ‘பணத்­தி­மி­ரில்­தானே இப்­படி நடந்து கொள்­கி­றாய். உன்­னை­விட பண­ப­லத்­தி­லும் அந்­தஸ்­தி­லும் நான் உயர்ந்து காட்­டு­கி­றேன் பார்’ என்று ரஜினி சரத்­பா­பு­வி­டம் சவால் விடு­கி­றார்.

 கடு­மை­யான உழைப்­பி­னா­லும், தனது நேர்­மை­யா­லும் ரஜினி பெரிய பணக்­கா­ர­ராக உரு­வெ­டுக்­கி­றார். ரஜினி மகள் தாட்­சா­யி­ணி­யும், சரத்­பா­பு­வின் மகன் கர­ணும் காத­லிக்­கின்­ற­னர். ஆனால் ரஜினி இந்­தக் காத­லுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கி­றார்.

 சரத்­பாபு கலந்து கொள்­ளும் ஏல நிகழ்ச்­சிக்கு ரஜி­னி­யும் வரு­கி­றார். இரண்டு மில்­லி­யன் ரூபாய் மதிப்­புள்ள நிலம் ஒன்றை, தனது சாகச திட்­டத்­தின் மூலம் 120 மில்­லி­யன் ரூபாய்க்கு சரத்­பா­புவை ஏலம் எடுக்க வைக்­கி­றார் ரஜினி.

 இத­னால் கடும் நஷ்­டத்தை சந்­திக்­கும் சரத்­பாபு, கட­னா­ளி­யா­கி­றார். அவ­ரது வீடு ஏலத்­துக்கு வரு­கி­றது. ரஜி­னியே அதை ஏலத்­தில் எடுக்­கி­றார்.

 ராதா­ர­வி­யின் உற­வி­ன­ரான ‘நிழல்­கள்’ ரவியே அவ­ரைக் கொல்ல முயற்­சிக்க, தக்க சம­யத்­தில் அதைத் தடுத்து ராதா­ர­வி­யின் உயி­ரைக் காப்­பாற்­று­கி­றார் ரஜினி. ராதா­ரவி, சரத்­பாபு இரு­வ­ருக்­கும் சரி­யான பாடம் கற்­றுக் கொடுக்­கும் ரஜினி அவர்­கள் செய்த தவ­று­களை மன்­னிப்­ப­து­டன். ஏலத்­தில் தான் எடுத்த அவர்­க­ளின் வீட்­டை­யும் அவர்­க­ளி­டமே திருப்பி கொடுக்­கி­றார். தன் மக­ளை­யும் சரத்­பா­பு­வின் மக­னுக்­குத் திரு­ம­ணம் செய்து வைக்­கி­றார்.

 தேவா இசை­யில் பாடல்­கள் அத்­த­னை­யும் சூப்­பர் டூப்­பர் ஹிட்­டா­கின.குறிப்­பாக ''வந்­தேன்டா பால்­கா­ரன்'' ஓப்­ப­னிங் பாடல் ரஜினி ரசி­கர்­க­ளால் கொண்­டா­டப்­பட்­டது. 'கொண்­டை­யில் தாழம்பூ கூடை­யில் என்ன பூ குஷ்பு' என்ற பாட­லும் பிர­ப­ல­ம­டைந்­தது.

   ராகேஷ் ரோஷ­னின் ‘குட்­கர்ஸ்’ என்ற இந்­திப் படத்­தைத் தழுவி உரு­வாக்­கப்­பட்ட படம் கிருஷ்­ணம ராஜூ நடித்த ‘பிரேன ஸ்நேகி­தலு’ என்ற தெலுங்­குப் படம். அதைத் தழுவி உரு­வாக்­கப்­பட்ட படம்­தான் ‘அண்­ணா­மலை’. ஆனால், இவை எல்­லா­வற்­றுக்­கும் மூலம் ஜெப்ரி ஆர்ச்­சர் எழு­திய ‘கனே அண்ட் அபெல்’ நாவல்­தான் என்று கூறப்­ப­டு­கி­றது. இதில் குறிப்­பி­டத்­தக்க விசே­ஷம் என்­ன­வென்­றால் 1993ம் ஆண்டே வெங்­க­டேஷ், சுமன், நக்மா நடிக்க ‘கொண்­ட­பள்ளி ராஜா’ என்ற பெய­ரில் மீண்­டும் தெலுங்­கில் உரு­வாக்­கப்­பட்­ட­து­தான்.