இந்­தி­யா­வின் முதல் ஒலிம்­பிக் பதக்­கம் ஏலத்­துக்கு வரு­கி­றது?

பதிவு செய்த நாள் : 27 ஜூலை 2017 09:22


மும்பை : 

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தைச் சேர்ந்த காஷாபா ஜாதவ், மல்­யுத்த வீரர். 1952ம் ஆண்டு ஹெல்­சின்கி ஒலிம்­பிக் போட்­டி­யில் மல்­யுத்­தப் பிரி­வில் இந்­தி­யா­வுக்­காக வெண்­க­லம் வென்­றார். சொந்­த­மாக ஒரு மல்­யுத்­தப் பயிற்சி கூடம் அமைக்க வேண்­டும் என்ற கன­வு­ட­னேயே 1984ம் ஆண்டு இறந்­தார். 2009ம் ஆண்டு சதாரா மாவட்­டத்­தில் தேசிய தரத்­தில் ஒரு மல்­யுத்த பயிற்சி மையம் கட்­டப்­ப­டும் என்று அப்­போ­தைய மாநில விளை­யாட்­டுத்­துறை அமைச்­சர் திலீப் தேஷ்­முக் கூறி­னார். ஆனால், இன்று வரை கட்­டி­ய­பா­டில்லை. இதை­ய­டுத்து மல்­யுத்த பயிற்சி மையத்­துக்கு தேவை­யான ஒரு கோடியே 53 லட்­சம் ரூபாய் நிதியை திரட்­டு­வ­தற்­காக, அவ­ரது வெண்­க­லப் பதக்­கத்தை ஏலத்­தில் வைப்­ப­தாக, காஷாபா ஜாத­வின் மகன் ரஞ்­சித் ஜாதவ் தெரி­வித்­துள்­ளார். ‘அப்­பா­வின் வெண்­க­லப் பதக்­கம், இந்­தி­யா­வுக்­காக ஒலிம்­பிக்­கில் கிடைத்த முதல் பதக்­கம். அதை ஏலத்­துக்கு விடு­வ­தில் வருத்­தம்­தான். ஆனா­லும், அவ­ரது கன­வான மல்­யுத்த பயிற்சி மையத்தை நிறை­வேற்ற எங்­க­ளுக்கு வேறு வழி தெரி­ய­வில்லை’ என்று ரஞ்­சித் தெரி­வித்­தார்.