ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 26–7–17

25 ஜூலை 2017, 11:19 PM

ஜி.கே.வியை திணற வைத்த பாடல்!

(சென்ற வார தொடர்ச்சி...)

வேறு சில படங்­க­ளுக்கு பின்­னணி இசை சேர்ப்பு நடந்து கொண்­டி­ருந்­தது. அதா­வது காலை 9 மணி­யி­லி­ருந்து இரவு 9 மணி வரை பின்­னணி இசை சேர்ப்பு நடக்க, இந்த படத்­திற்­கான கம்­போ­ஸிங் காலை 7 மணி முதல் 9 மணி வரை­யி­லும் பின் இரவு 10 மணி­யி­லி­ருந்து விடி­யும் வரைக்­கும் நடந்­தது.

முத­லில் இந்த படத்­திற்­காக பதிவு செய்­யப்­பட்ட பாடல்­கள் இரண்டு. படத்­தின் தீம் சாங்­காக “ஒரே நாள் உனை நான் நிலா­வில் பார்த்­தது” என்ற பாட­லை­யும், ''நீ கேட்­டால் நான் மாட்­டேன் என்றா சொல்­வேன் கண்ணா'' பாட­லும் பதிவு செய்­யப்­பட்­டது. மூன்­றா­வ­தாக பதிவு செய்­யப்­பட்ட பாட­லான “தண்ணி கருத்­தி­ருச்சு” பாடலைப் பற்றி ஒரு சில விஷ­யங்­கள் சொல்­லி­யா­க­வேண்­டும்.

கிரா­மிய பாடல் வார்த்­தை­யான 'தண்ணி கருத்­தி­ருச்சு' என்ற வார்த்­தையை வைத்து இளை­ய­ராஜா இசை­ய­மைக்க, அதே வார்த்­தை­களை வைத்­துக் கொண்டு வாலி பாடலை எழு­தி­னார். இந்­தப் பாடலை யாரைப் பாட­வைத்­தால் நன்­றாக இருக்­கும் என்று யோசிக்க, இளை­ய­ரா­ஜா­வின் மன­தில் சட்­டென ஞாப­கத்­திற்கு வந்­த­வர் ஜி.கே.வி. அவ­ரையே பாட­வைக்­க­லாம் என்று முடிவு செய்­யப்­பட்டு அடுத்த நாள் ஏவி.எம் ஸ்டூடி­யோ­வில் பாடல் பதிவு ஆரம்­ப­மா­னது.

இயக்­கு­னர் ஸ்ரீதர் மற்­றும் உதவி இயக்­கு­னர்­கள் கோபு, வாசு, சந்­தா­ன­பா­ரதி என எல்­லோ­ரும் இருந்­தார்­கள். பாடலை கற்­றுக்­கொண்டு ஜி.கே.வி. பல­முறை ஒத்­திகை செய்­தார். பாடு­வ­தற்கு மைக் முன்­னால் போனால் ஒரு வரி பாட, அடுத்த வரி­யின் டியூன் மறந்­து­போ­கும். மறு­ப­டி­யும் நினை­வு­ப­டுத்­திப் பாட, இரண்­டா­வது முறை வேறு இடத்­தில் டியூன் மறந்து போகும். “சரி டேக்­கில் வந்து விடும், டேக்­கில் டிரை பண்­ண­லாம்யா” என்று கோவர்த்­தன் சொல்ல, டேக் தொடங்­கி­யது. ஆனால், அது பல்­ல­வி­யோடு நின்­றது. இப்­ப­டியே ஒரு வரி, அடுத்த வரி, இன்­னொரு லைன் என்று 62 டேக்­கு­கள் ஆயின. மதி­யம் மணி 2-ஐ நெருங்­கிக் கொண்­டி­ருந்­தது. மதி­யம் எம்.எஸ்.விஸ்­வ­நா­த­னின் ரிக்­கார்­டிங். அவரோ வந்­து­விட்­டார். வந்­த­வர் ஜி.கே.வி. பாடு­வ­தைக் கேட்டு, “டேய் வெங்­க­டேசா, நல்லா பாடுடா” என்று தான் வந்­தி­ருப்­ப­தை­யும் அறி­வித்து உற்­சா­கப்­ப­டுத்­தி­னார். டேக் தொடக்­கத்­தில் ஏற்­க­னவே அவ­ருக்கு டென்­ஷன். இன்­னும் அதி­கம் டென்­ஷன் ஆகி­விட்­டார் ஜி.கே.வி.

“இவ்­வ­ளவு கஷ்­ட­மாக இருந்­தால் இந்த பாடல் எதற்கு? வேண்­டாம் ராஜா, கேன்­சல் செய்து விடு­வோம். வேறு டியூன் போட்டு கொள்­ள­லாம்” என்று ஸ்ரீதர் சொல்ல, இளை­ய­ரா­ஜாவோ, “சார் இந்த டியூன் ஹிட்­டா­கும். நல்ல டியூன். நிறுத்தி நிறுத்தி பாடி முழுப்­பா­ட­லை­யும் கேட்­கா­க­தால் உங்­க­ளுக்கு அப்­படி தோன்­று­கி­றது. இந்­தப் பாடலை வேறொ­ரு­வ­ரைப் பாட சொல்­ல­லாம்” என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். ஜி.கே.வியும் எந்த ஒரு வருத்­த­மும் இல்­லா­மல் ஒத்­துக்­கொள்ள, இளை­ய­ராஜா “மலே­சியா வாசு­தே­வனை பாட வைக்­கி­றேன்” என்று சொல்லி அவரை பாட வைத்­தார். அவர் பாடும்­போ­தும் ஜி.கே.வி-யும் உடன் இருந்­தார். பாடல் பதிவு முடிந்து ஜி.கே.வி., மிக அரு­மை­யாக வித்­தி­யா­ச­மான பாட­லாக வந்­தி­ருக்­கி­றது என்று பாராட்­டி­னார்.

''இளமை ஊஞ்­ச­லா­டு­கி­றது'' படத்­தின் எல்­லாப் பாடல்­க­ளுமே சூப்­பர் ஹிட் ஆயின. காதல், இன்­பச்­சுவை, பிரிவு சோகம், நாட்­டுப்­புற ராகம் என எல்­லா­வற்­றி­லும் மிக அரு­மை­யாக இசை­ய­மைத்து வெற்றி கண்­டார் இளை­ய­ராஜா. பாடல்­களை எழு­தி­யது கவி­ஞர் வாலி.

காதல் – “ஒரே நாள் உனை நான்…”, “நீ கேட்­டால் நான் மாட்­டேன் என்றா…”

இன்­பச்­சுவை – “கிண்­ணத்­தில் தேன் வடித்து”

நாட்­டுப்­புற ராகம் – “தண்ணி கருத்­தி­ருச்சு”

பிரிவு சோகம் – “என்­னடி மீனாட்சி”

“என்­னடி மீனாட்சி சொன்­னது என்­னாச்சு” பாடல் பதி­வின் போது ஒரு சுவா­ரஸ்­ய­மான சம்­ப­வம் நிகழ்ந்­தது.

– தொடரும்