சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 305– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 26 ஜூலை 2017

நடி­கர்­கள்: கார்த்­திக், ஜெமினி கணே­சன், கவுண்­ட­மணி, மணி­வண்­ணன், தில­கன், ராஜீவ், கசான் கான், அல்வா வாசு, நக்மா, கவிதா, கலா­ரஞ்­சனி மற்­றும் பலர்.

இசை – சிற்பி, ஒளிப்­ப­திவு -– யூ.கே.செந்­தில்­கு­மார், எடிட்­டிங் – பி.சாய் சுரேஷ், தயா­ரிப்பு – கங்கா கவுரி புரொ­டக்­க்ஷன்ஸ், இயக்­கம் : சுந்­தர் சி.

கதை ஒன்­ப­தாம் நுாற்­றாண்­டில் தொடங்­கு­கி­றது. ராஜ­ராஜ சோழன் மதிப்­பு­மிக்க வாள் ஒன்றை தன் படை­யின் வீர­னுக்கு போரில் அவன் காட்­டிய வீரத்­திற்கு பரி­சாக அளிக்­கி­றார். பரம்­பரை சொத்­தாக அந்த வாளை பாது­காத்து வரு­கி­றார்­கள். இந்த விவ­ரங்­களை அறிந்து கொள்­ளும் தொல்­பொ­ருள்  துறையை சேர்ந்த ஆய்­வா­ளன், அந்த வாளின் மதிப்­பிற்­காக அதை திருட முயல்­கி­றான்.

தற்­ச­ம­யம் அந்த வாளின் காப்­பா­ள­ராக இருக்­கும் ஜெமினி கணே­ச­னி­ட­மி­ருந்து அதை பறிப்­ப­தற்­காக திரு­ட­னான கார்த்­திக்கை அனுப்­பு­கி­றார்­கள். சிறு வய­தில் வீட்டை விட்டு ஓடிய மணி­வண்­ண­னின் மக­னாக, ஜெமினி கணே­ச­னின் பேர­னாக அந்த மாளி­கைக்­குள் நுழை­கி­றார் கார்த்­திக். அந்த வாளை திரு­டு­வ­தற்­காக அவர் போடும் திட்­டம் ஒவ்­வொன்­றும் நகைச்­சு­வை­யாக முடி­கி­றது. இதற்­கி­டை­யில் அவ­ரது முறைப்­பெண்­ணான நக்மா அவரை நேசிக்­கி­றார். சந்­தர்ப்­ப­வ­ச­மாக இரு­வ­ருக்­கும் திரு­ம­ணம் செய்து வைக்­கி­றார் தாத்தா ஜெமினி கணே­சன். கார்த்­திக் பற்­றிய உண்­மையை அறிந்து கொள்­ளும் நக்மா, அவ­ரி­டம் சவால் விடு­கி­றார்.

இதற்­கி­டை­யில் வாளை இனி பாது­காப்­ப­தற்­கான பொறுப்பை தனது வாரி­சாக கார்த்­திக்­கி­டம் ஒப்­ப­டைக்­கி­றார் ஜெமினி கணே­சன். தன் மீது அவர் வைத்­தி­ருக்­கும் நம்­பிக்­கை­யை­யும், அந்த குடும்­பத்­தி­ன­ரின் பாசத்­தை­யும் காணும் கார்த்­திக் மனம் திருந்தி அந்த வாளை காப்­பாற்ற தானே கள­மி­றங்­கு­கி­றார். வில்­லன்­களி ­டமி­ருந்து வாளை காப்­பாற்றி அந்த குடும்­பத்­தி­ன­ரின் நம்­பிக்­கை­யை­யும் பெறு­கி­றார். இறு­தி­யில் எல்­லாம் சுபம்.

சுந்­தர் சி. படங்­க­ளில் இருக்­கும் வழக்­க­மான நகைச்­சுவை இப்­ப­டத்­தி­லும் உண்டு. 75 நாட்­க­ளுக்கு மேல் ஓடி வெற்­றிப்­பட வரி­சை­யில் இடம்­பெற்­றது. சிற்­பி­யின் இசை­யில் பாடல்­கள் துள்­ளல் ரகம். குறிப்­பாக “அடி யாரது யாரது அங்கே…,” “வெல்­வெட்­டா…­­­வெல்­வெட்டா…,” “மானா­ம­துரை குண்டு மல்­லியே..” பாடல்­கள் ரசி­கர்­க­ளி­டம் பெரிய வர­வேற்பை பெற்­றன. இப்­ப­டத்­தின் பாடல்­கள் அனைத்­தை­யும் கவி­ஞர் பழ­னி­பா­ரதி எழு­தி­யி­ருந்­தார்.படத்­தின் வச­னங்­களை செல்­வ­பா­ரதி எழுதி இருந்­தார். அவர் பின்பு  இயக்­கு­ன­ராகி விஜய்யை வைத்து 'நினைத்­தேன் வந்­தாய்.' பிர­சாந்த் நடித்த 'ஹலோ' உள்­ளிட்ட சில படங்­களை இயக்­கி­யி­ருந்­தார். 1996ம் ஆண்டு வெளி­வந்த 'மேட்­டுகுடி' இயக்­கு­னர் சுந்­தர்

சி.யின் டிரேட் மார்க் பட­மாக அமைந்­தது.