ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 19–7–17

பதிவு செய்த நாள் : 19 ஜூலை 2017

இப்போதும்  அந்த  குணம்  தொடர்கிறது!

(சென்ற வார தொடர்ச்சி...)

டைரக்­டர் ஸ்ரீதர், கண் சிகிச்­சைக்­காக வெளி­நாடு போவ­தாக ஒரு செய்தி இருந்­தது.

அது, நாள­டை­வில் வெளி­நாட்­டில் இருக்­கும் நாட்­களை ஏன் வீணாக்க வேண்­டும் என்று ஒரு திரைப்­ப­டம் எடுக்­கும் திட்­ட­மாக மாறி­விட்­டது. அந்த படத்­தில் இசை­ய­மைக்க என்­னைக் கேட்­டுக்­கொள்ள ஸ்ரீதர் வந்­தார்.

ஏற்­க­னவே, நான் எடுத்­தி­ருந்த முடி­வைச் சோதித்­துப் பார்க்க, ஒரு சரி­யான சந்­தர்ப்­பம். அவரோ பெரிய டைரக்­டர், உள்ளே (அதா­வது மன­திற்­குள்ளே) இப்­ப­டிப்­பட்­ட­வ­ரைக்­கூட வேண்­டாம் என்று விட்­டு­விட்­டேன் என்று பெரு­மைப்­பட ஒரு நல்ல வாய்ப்பு! விட்டு விடாதே என்­றொரு குரல்.

ஆனால், எப்­படி ஸ்ரீத­ரி­டம் சொல்­வது என்று தயக்­கம் ஏற்­பட்­டது. எடுத்த முடிவு என்­னவோ முடி­வு­தான் என்­ப­தில் நான் மிக­வும் பிடி­வா­தக்­கா­ரன்.

என் தயக்­கத்­திற்­குள்­ளேயே இரண்டு மூன்று முறை வந்து போய் விட்­டார் டைரக்­டர். மேலும் இரண்டு முறை­க­ளும் தேடி வந்­து­விட்­டார். பதில் என்­னவோ ஒன்­று­தான். சொல்­லும் வார்த்­தை­கள்­தான் மாறி­யது.

“சார்! நிறைய படங்­களை ஏற்­க­னவே ஒத்­துக் கொண்­ட­தால், குறிப்­பிட்ட நேரத்­தில் உங்­க­ளுக்­குப் பாடல்­க­ளைப் பதிவு செய்து கொடுக்க முடி­யுமோ முடி­யாதோ? என்று சந்­தே­க­மாக இருக்­கி­றது” என்­றேன்.

“அது பர­வா­யில்லை ராஜா!” என்­றார்.

“நாம ஒரே கம்­போ­ஸிங்­கில் எல்­லாப் பாட­லை­யும் முடித்து விட­லாம்” என்­றார்.

“சார், நாளைக்கு சொல்­கி­றேனே…” என்று இழுத்­தேன்.

மறு­நாள், ஏவி.எம்­மில் ரிக்­கார்­டிங்­கில் இருந்­தேன். ரிகர்­சல் முடி­யும்­வரை ஸ்ரீதர் காத்­தி­ருந்­தார்.

“ராஜா, இது­வரை என் லைபில் யாரை­யும் தேடிப்­போ­னது இல்லை. ஏன்? எம்.ஜி.ஆர்.கிட்­டே­யும், சிவா­ஜி­கிட்­டே­யும் கூட நான் ஆறு தடவை போனது இல்லே. இது 6வது முறை உங்­களை பார்க்க நான் வந்­தி­ருக்­கி­றேன். என்ன சொல்­றீங்க?”

அவ­ரி­டம் நான் சாதா­ர­ண­மாய் சொன்­னேன். ''6 தடவை நான் உங்­கள வரச் சொல்­ல­லியே சார்!…''

அவர் அதிர்ந்து போனா­லும், தனது கோபத்தை வெளி­யில் காட்­டிக் கொள்­ளா­மல், “ராஜா, ஒரே கம்­போ­ஸிங் நான்கு மணி நேரம் போதும்” என்று தொடங்­கி­னார்.

நான் இடை­ம­றித்­தேன். “சார், உங்­கள் படத்­தில் பாடல் சரி­யில்­லை­யென்­றால், ரசி­கர்­கள் ஸ்ரீதர் பாடல் சரி­யில்லை என்­பார்­களா? என் பாடல் சரி­யில்லை என்­பார்­களா?”

“இல்லே ராஜா!”

“சார்! இது­வ­ரைக்­கும் 58 படங்­க­ளுக்கு எம்.எஸ்.வி. அண்­ணன் உங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தி­ருக்­கி­றார். அதில் ஒரு பாட்­டும் சோடை­யில்லே! அப்­படி இருக்க உங்க குறிப்­பிட்ட நேரத்­துக்­குள்­ளாற முடிக்­கி­றத்­துக்­காக, எதையோ ரிக்­கார்டு பண்­ணிக் கொடுத்து ரசி­கர்­கள்­கிட்­ட­யி­ருந்து திட்டு வாங்க நான் தயா­ராக இல்ல. தயவு செய்து, இந்­தப் படத்­துக்கு வேற யாரை­யா­வது வச்சு முடிச்­சுக்­குங்க. என்ன மன்­னிச்­சி­டுங்க” என்று சொல்லி மறுத்­து­விட்­டேன். பாஸ்­க­ரும், அம­ரும், பார­தி­ரா­ஜா­வும், “ஒனக்கு ரொம்ப மண்­டைக்­கர்­வம்” என்று திட்­டி­னார்­கள். ஆமாம் கர்­வம்­தான். அன்று இரவு மகிழ்ச்­சி­யாக துாங்­கி­னேன்.

இது, அண்­ணன் எம்.எஸ்.விக்கு தெரி­யாது. இந்த நவ­ராத்­தி­ரி­யின் போது வீட்­டுக்கு வந்த அவ­ரி­டம் இதைப் பற்­றிச் சொன்­னேன். ''அப்­ப­டியா? அப்­ப­டியா?'' என்று கேட்­டுக் கொண்­டார்.

இப்­போ­தும் அந்த குணம் அப்­ப­டியே தொடர்­கி­றது. எதற்­காக ஒரு வேலையை ஒத்­துக் கொள்­வேன் அல்­லது தள்ளி விடு­வேன் என்­பது யாருக்­கும் தெரி­யாது! ஏன்? எனக்கே தெரி­யாது! படத்தை ஒத்­துக் கொள்­வ­தில்­தான் எப்­படி நடந்து கொள்­வேன் என்று சொல்ல முடி­யாது என்­ப­தில்லை!

எந்த நேரத்­தில் எப்­படி நடந்து கொள்­வேன்? ஏன் அப்­படி என்­றெல்­லாம் எனக்கே விளங்­காத பல சம்­ப­வங்­கள்.