சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 304– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 19 ஜூலை 2017

நடி­கர்­கள்:  விஜய், ரம்பா, தேவ­யானி, மணி­வண்­ணன், செந்­தில், ஆர்.சுந்­தர்­ரா­ஜன், வினு­சக்­ர­வர்த்தி, சார்லி, ரஞ்­சித், மலே­சியா வாசு­தே­வன், அல்வா வாசு, எஸ்.என். லட்­சுமி மற்­றும் பலர்.

இசை : தேவா, ஒளிப்­ப­திவு : இள­வ­ரசு, எடிட்­டிங்: பி.எஸ். வாசு - சலீம், தயா­ரிப்பு : சி. அஸ்­வினி தத், திரைக்­கதை, இயக்­கம்: கே. செல்­வ­பா­ரதி, கதை: சத்­யா­னந்த்.

கோகு­ல­கி­ருஷ்­ணன் (விஜய்) ஒரு இசைப்­பி­ரி­யன். தன் கன­வில் எப்­போ­தும் ஒரு பெண்ணை பார்க்­கி­றான். தன் கன­வுக்­கா­த­லி­யின் அடை­யா­ள­மாக அவ­னுக்கு தெரி­யும் ஒரே விஷ­யம் அவ­ளது தொப்­பு­ளுக்கு பக்­கத்­தில் இருக்­கும் மச்­சம் மட்­டுமே. இந்த அடை­யா­ளத்­தைக் கொண்டு அவளை கண்­டு­பி­டிப்­ப­தற்கு அவ­னது மாமா­வும்(மணி­வண்­ணன்), மச்­சான்­க­ளும் உத­வு­கி­றார்­கள். இதற்­கி­டையே அவ­ரது தந்தை அவ­னுக்கு கிரா­மத்து பெண் ஒருத்­தியை திரு­ம­ணத்­திற்­காக நிச்­ச­யம் செய்­கி­றார். தந்­தை­யின் உத்­த­ரவை மீற முடி­யா­மல் அந்த கிரா­மத்­திற்கு செல்­லும் கோகுல், தன் மாமா­வின் உத­வி­யு­டன் அந்த நிச்­ச­யத்தை நிறுத்த முயற்­சிக்­கி­றார். ஆனால், சாவித்­திரி (தேவ­யானி) அவனை விரும்­பு­கி­றாள். அவ­ளது குடும்­பத்­தா­ருக்­கும் அவனை பிடித்­துப் போகி­றது.

கோகுல் ஒரு திரு­மண வீட்­டில் தன் கன­வுக்­கா­தலி ஸ்வப்­னாவை (ரம்பா) சந்­திக்­கி­றான்.  அவ­ளது மச்­சத்தை வைத்து அடை­யா­ளம் கண்­டு­கொள்­ப­வன் அவளை கவர்­வ­தற்­காக பாடல் ஒன்றை பாடு­கி­றான். ஆனால், அவ­ளது அறி­மு­கம் கிடைக்­க­வில்லை. பின்­னர் இசை வகுப்­பில் ஆசி­ரி­ய­னாக அவளை சந்­திக்­கி­றான். இரு­வ­ரும் காத­லிக்க தொடங்­கு­கி­றார்­கள். கிரா­மத்­திற்கு வரும் கோகுல், தனக்கு விருப்­ப­மில்­லாத திரு­ம­ணத்தை நிறுத்த பெரி­தும் முயற்­சிக்­கி­றான். அவ­னது முயற்­சி­கள் அனைத்­தும் தோல்­வி­யில் முடி­கின்­றன. அங்கு வரும் ஸ்வப்னா, சாவித்­தி­ரி­யின் தங்கை என்ற உண்மை வெளி­வ­ரு­கின்­றது. இரு­வ­ரும் ஒரு­வ­னையே விரும்­பு­வதை அறி­யா­மல் இருக்­கின்­ற­னர்.

இறு­தி­யில் சாவித்­தி­ரி­யின் தந்­தை­யி­டமே தனது எண்­ணத்தை தெரி­விக்­கி­றான் கோகுல். அதைக் கேட்­கும் ஸ்வப்னா, சாவித்­தி­ரியை கோகு­லோடு சேர்த்து வைப்­ப­தற்­காக நாட­கம் ஆடு­கி­றாள். தான் இதய நோயால் விரை­வில் இறக்க இருப்­ப­தா­க­வும், தனது விருப்­பப்­படி கோகுல் சாவித்­தி­ரியை மணந்து கொள்ள வேண்­டும் என்­றும் கூறு­கி­றாள். விருப்­ப­மில்­லா­விட்­டா­லும் தனது காத­லி­யின் வேண்­டு­கோ­ளுக்­காக திரு­ம­ணத்­திற்கு தயா­ரா­கி­றான் கோகுல்.

ஸ்வப்­னாவை ஒரு தலை­யாக காத­லிக்­கும் விக்­னேஷ் (ரஞ்­சித்) திரு­ம­ணத்­திற்கு வரு­கி­றான். தனக்கு கிடைக்­காத ஸ்வப்­னாவை கொல்ல முய­லும்­போது சாவித்­தி­ரி­யி­டம் கோகுல், ஸ்வப்னா காதல் பற்றி கூறி­வி­டு­கி­றான். உண்­மையை தெரிந்து கொள்­ளும் சாவித்­திரி, தனக்­காக தியா­கம் செய்ய துணிந்த ஸ்வப்­னா­வை­யும், தான் விரும்­பிய கோகு­லை­யும் ஒன்று சேர்க்­கி­றாள்.

தெலுங்கு மொழி­யில் வெற்­றி­க­ர­மாக ஓடிய ''பெல்லி சந்­தடி'' (1996) என்ற படத்­தின் ரீமேக்­கு­தான் “நினைத்­தேன் வந்­தாய்”. தெலுங்­கில் ஸ்ரீகாந்த், தீப்தி பட்­னா­கர், ரவளி நடித்த இந்த படத்தை கோவி­ல­முடி ராக­வேந்­திர ராவ் இயக்­கி­யி­ருந்­தார். தமி­ழி­லும் படம் ரசி­கர்­க­ளி­டம் அமோக வர­வேற்பை பெற்­றது. தேவா­வின் இசை­யில் பாடல்­கள் அனைத்­தும் ஹிட். பாடல்­களை வாலி­யும், பழ­னி­பா­ர­தி­யும் எழு­தி­யி­ருந்­தார்­கள்.