இடம் மாற எடை மாறும் கல்கருடன்

பதிவு செய்த நாள் : 15 ஜூலை 2017

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது திருநறையூர் என்னும் ஊர். திருநறையூர் என்பதற்கு ”தேன் போன்ற இனிமை பொருந்திய ஊர்” என்று பொருள்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 14ஆவது திவ்ய தேசம். திருநறையூர் நம்பி, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளை போற்றி மங்களாசாசனம் செய்துள்ளனர். ஸ்ரீரங்கம், திருப்பதி, அழகர் கோவில் ஆகிய தலங்களைத் தொடர்ந்து 110 பாசுரங்கள் பாடப்பெற்ற தலம் நாச்சியார் கோவில் ஆகும். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

நாச்சியார்கோவில்

மேதாவி என்னும் மகரிஷி தவம் பல செய்து, ஞான நிலையை அடைந்தவர். இவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது என்னவென்றால், தான் வழிபடும் பெருமாளே தனக்கு மருமகனாக வர வேண்டும் என்பதுதான். 

அவருக்கு பெண் குழந்தை ஒன்று இருந்தால், இந்த ஆசை ஒருவகையில் நியாயமானது. எதுவும் இல்லாமல் மகாவிஷ்ணுவே தன் மருமகனாக வரவேண்டும் என்று எண்ணினால் எப்படி நடக்கும்.? எனினும் மேதாவி மகரிஷி முனிவரின் ஆசையை நிறைவேற்றவேண்டும் என்று மகாவிஷ்ணு முடிவெடுத்தார்.

மகாவிஷ்ணு தன் துணைவியான மகாலக்ஷ்மியை பூலோகத்தில் மேதாவி முனிவருக்கு மகளாக வளர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார்.

திருமகளான மகாலக்ஷ்மி பெருமாளின் வேண்டுகோளுக்கு ஏற்ப பூலோகத்திற்கு சென்று மேதாவி மகரிஷி முனிவரின் நந்தவனத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் குழந்தையாக அவதரித்தாள்.நந்தவனத்தில் பூக்கள் பறிப்பதற்காக வந்த மேதாவி முனிவர் அந்த குழந்தையைக் கண்டெடுத்தார்.

வஞ்சுள மரத்தடியில் கண்டெடுக்கப்பட்டதால், அக்குழந்தைக்கு வஞ்சுளவல்லி என்ற பெயர் சூட்டி மேதாவி மகரிஷி வளர்த்து வந்தார். வஞ்சுளவல்லியும் வளர்ந்து பருவம் எய்தினார்,மகாவிஷ்ணு மேதாவி முனிவருக்கு மருமகனாகும் காலம் நெருங்கியது.

மகாவிஷ்ணு அந்தணர் உருவத்தில் மேதாவி மகரிஷி வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு விருந்து அளித்து பணிவிடை செய்வது என்பது அக்காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்த தமிழர்களின் மரபாகும்.

இதற்கேற்ப மேதாவி மகரிஷியும் தனது வீட்டுக்கு அந்தணராக வந்த மகாவிஷ்ணுவிற்கு அமுது படைத்தார். தன் மகளான வஞ்சுளவல்லியை தண்ணீர் எடுத்துவந்து அந்தணரிடம் வழங்குமாறு கூறினார். தண்ணீரை எடுத்துவந்த வஞ்சுளவல்லியின் கரத்தை அந்தணாராக வந்துள்ள பெருமாள் பிடித்து இழுத்தார். இதனை கண்ட மேதாவி மகரிஷி கோபம்கொண்டு சாபம் வழங்க முற்பட்டார். உடனடியாக மகாவிஷ்ணு தன் அந்தணர் வேடத்தை கலைத்து தன் சுயரூபத்தில் காட்சியளித்தார். இவரை கண்ட மேதாவி மகரிஷி அவரின் கால்களில் விழுந்து வணங்கினார். இத்துடன் திருமால் வஞ்சுளவல்லியை தனக்கு மணமுடித்து தர வேண்டும் என்று மேதாவி மகரிஷியிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால், மேதாவி மகரிஷி பெருமாளுக்கு ஒரு நிபந்தனை விதித்தார். இத்தலத்தில் தன் மகளான வஞ்சுளவல்லிக்கு முன்னுரிமை வழங்கி, இத்தலத்திற்கு “நாச்சியார் கோவில்” என்ற பெயர் சூட்டப்படவேண்டும். அத்தோடு இல்லாமல் தன் மகள் வஞ்சுளவல்லியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு திருமால் நடந்துகொள்ளவேண்டும் என்று நிபந்தனை விதித்தார். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு வஞ்சுளவல்லி நாச்சியாரை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டார். அதன்படி இத்தலத்திற்கு நாச்சியார் கோவில் என்னும் பெயர் வந்தது.

மாடக்கோவில்

75 அடி உயர ராஜகோபுரம், 5 நிலைகளோடு இக்கோவில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இக்கோவிலின் தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் மணிமுக்தா குளம் ஆகும். இங்கு தென்கலை ஆகமம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இக்கோவில் மாடக்கோவில் என்பதால், 21 படிகள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் உள்ள மண்டபத்தில் ஸ்ரீநிவாசபெருமாள் என்னும் நம்பி பெருமாள், தன் துணைவியான வஞ்சுளவல்லி நாச்சியாருடன் வீற்றீருகிறார்.அவர்களுடன் பிரத்யுமணன், அனிருதன், புருஷோத்தமன், ஸங்கர்ஷணன், பிர்மா ஆகியோர் புடைசூழ திருமணக்கோலத்தில் காட்சியளிக்கிறார் பெருமாள்.


நாச்சியாருக்கே முதல் மரியாதை

இத்தலத்தில் திருமகளான நாச்சியாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் இத்தலத்திற்கு நாச்சியார்கோவில் என்னும் பெயர் வந்தது. 

இதனை கூறும் வகையில் கருவறையில் கையில் கிளியுடன் காட்சியளிக்கும் வஞ்சுளவல்லி தாயார் சற்று முன்னே நின்று காட்சியளிக்கிறார்.
பெருமாள் சற்று தள்ளி பின்னே இருகரங்களுடன் காட்சியளிக்கிறார். இவளுக்கே எல்லாவற்றிலும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. இவளுக்குதான் அபிஷேகமும் முதலில் நடைபெறுகிறது.

வீட்டை நிர்வகித்துவரும் பெண்கள் தங்கள் வீட்டு சாவிக்கொத்தை இடுப்பில் அணிவித்துக்கொள்வர். அதேபோல் இக்கோவிலின் வஞ்சுளவல்லி தாயார் உற்சவமூர்த்தியின் இடுப்பில் இன்றளவும் சாவிக்கொத்து அணிவிக்கிறார்கள். அனைத்து உலகத்தையும் நிர்வகித்து வருபவளாக இக்கோவில் நாச்சியார் விளங்குகிறாள்.
வீதியுலா வரும்போது கல் கருடனில் பெருமாளும், அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லி நாச்சியாரும் எழுந்தருள்வார்கள். மற்ற கோவில்களில் நடக்கும் உலாவை போல் இல்லாமல் இங்கு தாயார் முதலில் செல்ல பெருமாள் பின்னே செல்வார். மேதாவி மகரிஷியிடம் பெருமாள் கொடுத்த வாக்கின்படி நாச்சியாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
சாவிக்கொத்துடன் நாச்சியார்

கல் கருடன்

இத்தலத்தில் உள்ள கல் கருடன் மிகவும் பிரசித்தி பெற்றவர்.மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் கருவறைக்கு இடதுபுறம் கல் கருடன் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு இவரே மூலவராகவும் உற்சவராகவும் விளங்குகிறார்.இவருக்கு 6 கால பூஜை தினமும் நடைபெறுகிறது. கல்லால் ஆன உற்சவ மூர்த்தியை வேறு எங்கும் காண இயலாது. இவர் தன் சிரம், கை, மேனி, கால் போன்ற இடங்களில் நாகாபரணங்களைப் பூண்டு காட்சியளிக்கிறார். இவரை வழிபட்டு வந்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். 

மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வான கல் கருடனின் மீது பெருமாள் அமர்ந்து வீதியுலா காணும் வைபவம் மிகவும் புகழ்வாய்ந்தது. அந்த சமயத்தில் கருவறையில் இருந்து பட்டு வஸ்திரம் அணிந்து சர்வ ஆபரணங்களோடு மலர்களால் அலங்கரிக்கபட்ட கருடன் புறப்படுவார்.
இதில் ஒரு சிறப்பம்சம் உண்டு. கருவறையில் இருந்து புறப்படும்போது 4 பேர் அவரை பல்லக்கில் தூக்குவர். மண்டபத்திற்கு வெளியே வரும்போது உற்சவரான கல்கருடனின் சுமை கூடும். கருடனை தூக்குவோரின் எண்ணிக்கை 4-இல் இருந்து 8, 16, 32, 64, 128 என்ற கணக்கில் உயர்ந்துகொண்டே போகும். பின்பு ஸ்ரீநிவாச பெருமாள் கருடாழ்வாரின் மீது அமர்ந்து வீதியுலா காண்பார்.

வீதியுலா முடித்து கோவிலை நெருங்கும்போது,

128 பேர் சுமக்கும் கல் கருடன் எடை மீண்டும்

  64 பேர் சுமப்பதாக,

 32 பேர் சுமப்பதாக

 16 பேர் சுமப்பதாக

  8 பேர் சுமப்பதாக,

  4 பேர் சுமப்பதாக படிப்படியாகக் குறையத்தொடங்கும்.

இந்த அதிசயம் எப்படி நடக்கிறது என்று இன்றுவரை தெரியவில்லை.

இந்த விழாவில் கலந்துகொள்ள தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் அன்றைய தினம் கோவிலில் கூடுவர்.

நாச்சியார்கோவிலுக்கு செல்லும் வழி

கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ தொலைவில் நாச்சியார்கோவில் அமைந்துள்ளது.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி நகரப் பேருந்து வசதிகள் உள்ளன, பாசஞ்சர் ரயிலில் சென்றால் திருநாகேஸ்வரத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் செல்லலாம்.

அருகிலுள்ள கோவில்கள்

ஒப்பிலியப்பன் திருக்கோவில்

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி திருக்கோவில்

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோவில்


கட்டுரையாளர்: தினேஷ் குகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation

வாசகர் கருத்துக்கள் :
Prasanth 15-07-2017 11:16 PM
Good article

Reply Cancel


Your comment will be posted after the moderation


Venkatesh 16-07-2017 04:40 AM
அருமை

Reply Cancel


Your comment will be posted after the moderation


Guna 16-07-2017 06:24 AM
Super thambi arumaiyana article. Nachiyar Kovil pathi kelvi Patten but kal garudar edai kooduvadu pathi thereyadhu ippo therendu konden romba thanks. idhu Pola ne innum neraya article's yeludhanum. Wish you all the best. God bless you.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Divya 16-07-2017 05:53 PM
Nice article Dinesh..

Reply Cancel


Your comment will be posted after the moderation


M.Muralidharam 16-07-2017 05:58 PM
இடம் மாற எடை மாறும் கல்கருடன் என்ற நண்பர் தினேஷின் கட்டுரை அருமையான படைப்பு. வாழ்த்துகள்.

Reply Cancel


Your comment will be posted after the moderation


Vishnu Priya 30-07-2017 05:18 AM
Alagana inimaiyana padaippu.Great Dinesh. Well done

Reply Cancel


Your comment will be posted after the moderation