ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–7–17

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2017

மகிழ்ச்சிக்கு பதிலாக அதிர்ச்சி!

(சென்ற வார தொடர்ச்சி...)

யாரை “தென்­னாட்டு சாந்­தா­ராம்” என்று மக்­கள் அழைத்­தார்­களோ, அன்­றைய கால­கட்­டத்­தில் யாரை இளை­ய­ராஜா ஹீரோ­வாக நினைத்­தாரோ, யார் மேல் அதிக பிரி­யம் வைத்­தி­ருந்­தார்­களோ அந்த ஸ்ரீதர் இளை­ய­ரா­ஜாவை இந்த ஆண்­டில் பார்க்க வந்­தார். கிட்­டத்­தட்ட 58 படங்­க­ளுக்கு இவர் இயக்­கிய படங்­க­ளுக்கு இசை­ய­மைத்­த­வர் எம்.எஸ். விஸ்­வ­நா­தன். ஒரு படத்­தில் கூட இவர்­க­ளின் கூட்­ட­ணி­யில் இசை­ய­மைத்த பாடல் சோடை என்று சொல்­லி­விட முடி­யாது. அப்­ப­டிப்­பட்ட ஸ்ரீதர் இளை­ய­ரா­ஜா­வி­டம் வந்து தான் இயக்­கப்­போ­கும் “இளமை ஊஞ்­ச­லா­டு­கி­றது” என்ற படத்­திற்கு இசை­ய­மைக்­கு­மாறு கேட்­டி­ருக்­கி­றார்.

ஓவர் டூ இளை­ய­ராஜா…

டைரக்­டர் ஸ்ரீதரை எனக்­கும், பார­தி­ரா­ஜா­வுக்­கும், அண்­ணன் பாஸ்­க­ருக்­கும் மிக­வும் பிடிக்­கும்.

அவ­ரு­டைய படங்­களை முதல் நாள், முதல் காட்­சி­யி­லேயே பார்த்­து­வி­டு­வோம்.

வட­நாட்­டில் சாந்­தா­ராமை ஒரு திரைப்­ப­டத்­தில் கவிதை எழு­து­ப­வர் என்று சொல்­வோம். இங்கே அதே­போல் திரைப்­ப­டத்­தில் கவிதை சொல்­லும் ஒரு­வர் ஸ்ரீதர் என்று துள்­ளு­வோம்.

அப்­ப­டிப்­பட்ட ஸ்ரீதர் ‘இளமை ஊஞ்­ச­லா­டு­கி­றது’ படத்­திற்கு இசை­ய­மைக்க என்னை அழைத்­த­போது அதிர்ச்­சி­யாகி விட்­டேன்! மகிழ்ச்­சிக்­குப் பதி­லாக ஏன் அதிர்ச்சி என்று நினைப்­பீர்­கள். அது­வ­ரைக்­கும் ஸ்ரீதர் சாரோடு எம்.எஸ்.வி. 58 திரைப்­ப­டங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தி­ருந்­தார் என்­பதை அவர்­கள் இரு­வ­ரும் மறந்­தி­ருக்­க­லாம்.

ஆனால் நான் குறித்து வைத்­தி­ருந்­தேன் என் நெஞ்­சில். எந்த ஒரு படத்­தி­லும் இசையை மட்­டம் என்று தள்­ளி­விட முடி­யாது.

அப்­ப­டிப்­பட்ட எம்.எஸ்.வி.யை வேண்­டாம் என்று சொல்ல, அவ­ரது இசை கார­ண­மாக இருக்க முடி­யாது. என்­னி­டம் வரு­வ­தற்கு என் இசை கார­ண­மில்லை. இரண்­டிற்­கும் இடை­யில் ஏதோ ஒன்று இருக்­கி­றது என்­றும், என்னை ஜனங்­கள் விரும்­பு­கி­றார்­கள் என்­றும் அந்த உண்மை, மன­தில் உறுத்­தி­யது.

அடடா! என்­னடா இந்த விவஸ்தை கெட்ட சினிமா உல­கம்? இதோடு எப்­படி நான் ஒத்­துப் போவது ? இன்­னும் கொஞ்­சம் சினி­மாவை தூர­மாக்கி இசையை மட்­டும் அரு­கில் வைத்­துக் கொண்­டேன்.

டைரக்­டர்­க­ளும், அவர்­க­ளின் தயா­ரிப்­பா­ளர்­க­ளும், நடி­கர்­க­ளும் எனக்கு இரண்­டாம் பட்­சம்­தான். ஆனால் இசை மட்­டும், கதை­யோ­டும், பாத்­தி­ரங்­க­ளோ­டும், மக்­க­ளோ­டும் ஒட்டி இருக்க வேண்­டும் என்­ப­தில் கவ­ன­மாக இருந்­தேன்.

என் ஓரோர் பாட­லும் வேறோர் பாடலே! இசை­ய­மைத்த ஓரோர் படத்­தின் பின்­னணி இசை­யும் வேறோர் இசையே என்­ப­தில் இன்­று­வரை நியா­ய­மா­கவே செய்து வந்­தி­ருக்­கி­றேன்.

இதில் ஏதா­வது சரி­யில்லை என்­றால் அதன் கார­ணம் நான் இல்லை. இந்த மாதி­ரி­யான மன­நி­லை­யில் அப்­போதே மற்­ற­வர்­க­ளி­ட­மி­ருந்து மாறு­பட்­டி­ருந்த நான், இவர்­கள் வேண்­டும்­போது ஒத்­துக்­கொள்­ளவோ, வேண்­டாம் எனும்­போது சும்மா இருப்­ப­தற்கோ, நான் என்ன விலைமாதா என்று யோசிப்­பேன்.

நான் மிக­வும் மதிக்­கும் எம்.எஸ்.வி.யை வேண்­டாம் என்று தூக்­கி­ய­டிக்­கி­றார்­களே? அப்­ப­டிப்­பட்ட இவர்­களை நான் 'வேண்­டாம்' என்று சொல்ல வேண்­டும் என்று ஒரு முடி­வெ­டுத்­தேன்.''