சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 303– எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 12 ஜூலை 2017

நடி­கர்­கள் :  பிரபு, சுவ­லட்­சுமி, ப்ரியா­ரா­மன், கரண், மணி­வண்­ணன், டில்லி கணேஷ், நிழல்­கள் ரவி, சார்லி, மயில்­சாமி, முத்­துக்­காளை மற்­றும் பலர்.

இசை :  எஸ்.ஏ. ராஜ்­கு­மார், ஒளிப்­ப­திவு :  ரமேஷ் காந்தி,  எடிட்­டிங் :  தணி­கா­ச­லம், தயா­ரிப்பு :  பிர­மிட் பிலிம்ஸ் இண்­டர்­நே­ஷ­னல், இயக்­கம் :   எஸ்.பி. ராஜ்­கு­மார்.

ஆனந்­தன் (பிரபு) நல்ல மனம் படைத்த பாட­கன். தன் மனைவி மகேஸ்­வரி (சுவ­லட்­சுமி) மற்­றும் ஆண் குழந்­தை­யு­டன் வாழ்­கி­றான். மணி­வண்­ண­னுக்கு சொந்­த­மான காம்­ப­வுண்­டில் இவர்­கள் குடி­யி­ருக்­கி­றார்­கள். இவர்­க­ளின் பக்­கத்து போர்­ஷ­னுக்கு வங்­கி­யில் பணி­பு­ரி­யும் குமார் (கரண்) குடி­வ­ரு­கி­றார். ஆனந்­தன், மகேஸ்­வரி இரு­வ­ரும் கண­வன் – மனைவி இல்­லை­யென்­றும், இரு­வ­ரும் திரு­ம­ணம் செய்து கொள்­ள­வில்­லை­யென்­றும் குமார் தெரிந்து கொள்­கி­றார். அவர்­க­ளுக்கு இடையே இருக்­கும் நட்­பின் உண்­மையை புரிந்து கொண்டு குமார் மகேஸ்­வ­ரி­யி­டம் தன் காதலை தெரி­விக்­கி­றார்.

மத்­தி­ய­தர வர்க்­கத்தை சேர்ந்த பூர்­ணி­மா­வுக்­கும் (ப்ரியா ராமன்) ஆனந்­த­னுக்­கும் இடையே அடிக்­கடி சிறு மோதல்­கள் ஏற்­ப­டு­கின்­றன. இலங்­கை­யி­லி­ருக்­கும்­போது அங்கு நடந்த குண்­டு­வெ­டிப்­பில் பூர்­ணி­மா­வின் தாயார் இறந்து விடு­கி­றார்.  ஒரு தங்­கைக்கு கால்­க­ளும், மற்­றொரு தங்­கைக்கு கண்­பார்­வை­யும் போய்­வி­டு­கின்­றன. இவ­ரது வரு­மா­னத்­தி­லேயே அந்த குடும்­பம் வாழ்­கி­றது. அவ­ரது துய­ரத்தை கேட்டு உரு­கும் ஆனந்­தன் அவ­ருக்கு நல்ல நன்­ப­னாக மாற, பூர்­ணி­மாவோ அவர் மேல் காதல் வயப்­ப­டு­கி­றார். ஆனந்­த­னும் உள்­ளுக்­குள் அவரை விரும்­பத் தொடங்­கு­கி­றார்.

கடந்த காலத்­தில், ஆனந்­தன் மிக ஏழ்­மை­யான குடும்­பத்­தைச் சேர்ந்த வேலை­யில்லா பட்­ட­தாரி. ஆனந்­த­னின் சகோ­தரி தனது குடும்­பத்தை புறக்­க­ணித்து விட்டு தன்­னு­டைய காத­ல­னு­டன் வீட்டை விட்டு போய்­வி­டு­கி­றார். இந்த அவ­மா­னத்­தி­னால் ஆனந்­த­னின் பெற்­றோர் தற்­கொலை செய்து கொள்­கின்­ற­னர். உயிரை மாய்த்­துக்­கொள்ள வந்த இடத்­தில் ஆனந்­தன், மகேஸ்­வ­ரி­யை­யும் அவ­ளது அக்­காள் குழந்­தை­யை­யும் தண்­ணீ­ரில் குதித்து காப்­பாற்­று­கி­றார். அக்­காளை அவ­ளது கண­வனே கொன்ற பின்பு, தான் குழந்­தை­யோடு தப்பி வந்த கதையை மகேஸ்­வரி கூறு­கி­றார். பிரச்­னை­களை எதிர்­கொள்­வ­தற்­காக இரு­வ­ரும் கண­வன் – மனை­வி­யாக நடிக்­கத் தொடங்­கு­கின்­ற­னர்.

பூர்­ணி­மா­வின் முத­லாளி நிழல்­கள் ரவி அவரை திரு­ம­ணம் செய்ய விரும்­பு­கி­றார். பூர்­ணி­மா­வின் தந்தை தனது குடும்­பத்­தின் நன்­மைக்­காக பூர்­ணி­மாவை விட்­டுக்­கொ­டுக்­கும்­படி ஆனந்­த­னி­டம் வேண்­டு­கி­றார். ஆனந்­த­னும் என்­றுமே உன்னை விரும்­ப­வில்லை என்று கூறி பூர்­ணி­மாவை நிரா­க­ரிக்­கி­றார். கோபம் கொள்­ளும் பூர்­ணிமா, இன்­னொ­ரு­வரை மணந்து வாழ்ந்து காட்­டு­வ­தாக சவால் விடு­கி­றார்.

பூர்­ணிமா தனது முத­லா­ளியை மணந்து கொண்டு திரு­மண விழா­வில் ஆனந்­தனை அவ­மா­னப்­ப­டுத்­து­கி­றார். காத­லி­யின் நல்­வாழ்­விற்­காக காதலை தியா­கம் செய்­யும் ஆனந்­தன் தனி­மை­யால் தவிக்­கி­றார். மகேஸ்­வ­ரி­யும் குமா­ரும் திரு­ம­ணம் செய்து கொண்டு வேறு ஊருக்கு செல்­கி­றார்­கள். தனது குழந்­தை­யாக எண்ணி வளர்த்த மகேஸ்­வ­ரி­யின் அக்­காள் குழந்­தையை தன்­னி­டமே கொடுக்­கும்­படி அவர்­க­ளி­டம் வேண்­டு­கி­றார். இனி அக்­கு­ழந்­தையே தனது வாழ்க்கை என எண்ணி ஆனந்­தம் கொள்­கி­றான் ஆனந்­தன்.

இயக்­கு­னர் கே.எஸ். ரவி­கு­மா­ரின் உதவி இயக்­கு­னர்­க­ளில் ஒரு­வ­ரான எஸ்.பி. ராஜ்­கு­மார் சிறந்த குடும்­பத் திரைப்­ப­ட­மாக “பொன்­ம­னம்” படத்தை உரு­வாக்­கி­யி­ருந்­தார். ரசி­கர்­க­ளின் பேரா­த­ரவை பெற்ற இப்­ப­டம், 1998 ஜன­வரி 14-ல் பொங்­கல் விருந்­தாக வெளி­வந்­தது. இயக்­கு­ன­ருக்கு மட்­டு­மின்றி நடித்த நட்­சத்­தி­ரங்­கள் அனை­வ­ருக்­குமே நல்ல பெயர் வாங்கி தந்­தது.

எஸ்.ஏ. ராஜ்­கு­மா­ரின் இசை­யில் பாடல்­கள் அனைத்­தும் கேட்க இனி­மை­யாக அமைந்­தன.