சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் - இந்தியா சாதனை

பதிவு செய்த நாள் : 10 ஜூலை 2017

நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமலானது. இது வரித்துறையில் பெருஞ் சீர்திருத்தமாகவும் சாதனையாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய, ஜிஎஸ்டி வரி அமைப்பின் முதுகெலும்பாக திகழுவதுதான் ஜிஎஸ்டிஎன் (GSTN) என்றழைக்கப்படும் இணைய தளமேடை.

இந்தியாவில் வருமானவரி இலாகாவுக்கு  வரியை ஆன்லைனில் செலுத்தலாம். வருடாந்திர கணக்குகளையும் மற்ற மீளறிக்கைகளையும் ஆன்லைனில் செலுத்தலாம்.

நுகர்வோர் செலுத்த வேண்டிய வரி துவக்க நிலையிலிருந்து பதிவு செய்து கொண்டே வந்து நுகர்வோரிடம் இறுதியில் வரியை வசூலிக்க இந்த ஜி.எஸ்.டி.என் மேடை உதவுகிறது. ஒவ்வொரு நிலையிலும் வரி விவரம் ஜி.எஸ்.டி.என் மேடையில பதிவு செய்யப்படுவதால் மோசடிக்கு வாய்ப்பு குறைவு.

ரேஷன் கடைக்கணக்கு மாநிலந் தழுவியது. ஜிஎஸ்டிஎன் கணக்கு அகில இந்தியாவையும் ஒரே எல்லைக்குள் அடக்குகிறது. நாடு முழுக்க உற்பத்திக்கும் சேவைக்கும் ஒரே வரி வீதம் இன்னும் எட்டப்படவில்லை. அதே போலத்தான் சேவைக்கும் இன்னும் ஒரே வரிவீதம் எட்டப்படவில்லை. ஆனால் இரண்டு வரிகளையும் வசூலிக்க ஒரே வரி வசூல் பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. இது மகத்தான சாதனை என்பதில் சந்தேகம் இல்லை.  விரித்துறையில வரி வசூலில் ம்தலில ஏக இந்தியா தோன்றியுள்ளது.

இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக்கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு  நிறுவனம் ஜி.எஸ்.டி.என் மேற்கொண்டு உள்ளது.

ஜி.எஸ்.டி.என் என்றால் என்ன?

ஜி.எஸ்.டி.என் என்றால் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் என்று அர்த்தம். ஜி.எஸ்.டியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்டது. ஒரு சிறப்பு குறிக்கோள் நிறுவனம் என அழைக்கப்படும் ஜி.எஸ்.டி.என் என்பதாகும்.


ஒரு தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஒரு பங்களிப்பும், ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக அனைவரும் பங்குபெறும் வகையில் அதாவது அதன் பங்குதாரர்களாக அரசு வங்கி மற்றும் வரி செலுத்துவோர் இணைந்து செயல்படும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது. மத்திய அரசினால் இந்த வரி அமைப்பின் கீழே உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிதாக கண்காணிக்கப்படும் வகையிலும், வரி செலுத்துவோர் அவர்களின் அனைத்து விதமான வரி பரிவர்த்தனை மற்றும் தகவல்களைச் சேகரிக்கப்பட்டு சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த நெட்வொர்க் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சேவைகள் வரி செலுத்துபவர்கள் மற்றும் வேறு பங்குதாரர்களுக்கு ஜி.எஸ்.டியை அமல்படுத்துவதில்  ஜி.எஸ்.டி.என் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த நெட்வொர்க் மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கீட்டில் ரூ.10 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதில் மத்திய அரசு 24.5 சதவீத பங்குகளிலும் மாநில அரசு 24.5 சதவீத பங்குகளிலும் மேலும் மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் தனியார் வங்கி நிறுவனங்களாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனம் ஜி.எஸ்.டி தொடர்பாக www.gst.gov.in  என்ற இணையதளத்தை உருவாக்கி உள்ளது. வரி செலுத்துவோரின் பயன்பாட்டிற்கென இந்த இணையதளம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படத் துவங்கியது. நாடு முழுவதும் வரி செலுத்தும் லட்சக்கணக்கானவர்  ஜி.எஸ்.டிக்கான  புதிய இணையதளத்தை பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

தமிழ்நாட்டில் சரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.  ஜூலை 1-ம் முதல் இந்த பதிவை வணிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த இணையதளத்தில் பதிவு செய்ய தற்காலிக ஐடி (ID)  மற்றும்  பாஸ்வேர்டு  (Password) வணிகர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் வணிகவரித்துறை இணையதளம் http://ctd.tn.gov.in   மூலமாக வழங்கப்படும். தற்காலிக ஐடி (ID) மற்றும் பாஸ்வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி இணையதளத்தை உபயோகப்படுத்தி இந்த பதிவை பூர்த்தி செய்ய வணிகர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜி.எஸ்.டி பதிவை பூர்த்தி செய்ய http://ctd.tn.gov.in இணையதளத்தில் உள்ள உதவி கோப்பை (Help File) பயன்படுத்திக் கொள்ளலாம். ஜிடி கவுன்சிலின் இணையதளத்தில் புதிய வரி குறித்த விவரங்களை பொது மக்கள் அறிந்துகொள்ள அதிகாரப்பூர்வமாக http://www.gstcouncil.gov.in   என்ற இணையதளம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஜி.எஸ்.டி.என் நெட்வொர்க் பிரண்ட்-எண்ட் (Front-end) மற்றும் பேக் எண்ட் (Back-end) யாக செயல்பட்டு வருகிறது. இந்த பிரொண்ட்-எண்ட் ஜி.எஸ்.டி போர்ட்டில்.  புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்தல், வரி செலுத்துவோர் வருமானத்தை தாக்கல் செய்தல் மற்றும் வரி மூலம் வருமானத்தை செலுத்துதல் என 3 சேவைகள் இதில் இயங்குகின்றன. பேக் எண்ட்ல் (Back-end) மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து வரி துறையினரின் தகவல் அமைப்புகள் இதில் உள்ளன.

ஜி.எஸ்.டி.என் திட்டத்தில் 4 தரவு மையங்கள் (Data Centre) உள்ளன. இந்த தரவு மையங்கள் மாநிலங்களின் தரவு மையங்கள் மற்றும் சி.பி.இ.சி (CBEC) ஆகியவற்றோடு இணைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.என் தளத்தை பற்றி அறிந்து கொள்ள வரி செலுத்துவோர் தங்கள் பகுதியில் உள்ள வரித்துறை ஆலோசகர் (Tax practitioners) அவர்களிடம் ஆலோசனை கேட்டு இது பற்றி அறிந்து கொல்லலாம்.

ஜி.எஸ்.டி.என் தளத்தில் 700 கோடி இன்வாய்ஸ் வரை அப்லோடு செய்து பரிசோதித்துள்ளனர். ஆனால் 320 கோடி இன்வாய்ஸ் உத்தேச திறன் ஆகும். இதனை இரட்டை இலக்கத்தில் சோதனை செய்துள்ளனர்.

ஜி.எஸ்.டி.என் தளம் அமைக்கும் முன் வாட் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 50 சதவீதம் மக்கள் கடைசி தேதியில் தான் அதனை செலுத்த முயல்வர்கள். அதை  எல்லாம் கருத்தில் கொண்டு கணினித் திறன் ஜி.எஸ்.டி.என் தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் எப்போது ஒரு விலைப்பட்டியலை (Invoice) தயாரித்ததும் அதனை உடனுக்கு உடன் இந்த ஜி.எஸ்.டி.என் தளத்தில் அப்லோடு செய்யலாம்.

சிறிய வணிக உரிமையாளர்கள் தங்களது விலைப்பட்டியலை ஆஃப்லைனில் பதிவு செய்து வைத்துகொள்ளலாம். எப்போது நீங்கள் இணைய இணைப்புடன் இருக்கும் போது அதை ஆன்லைனில் அப்லோடு செய்யும் வசதி இதில் அமைத்து தரப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.என் தளத்தின் 4 தரவு மையங்களைக் கொண்டுள்ளது என்று முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. இது டில்லி மற்றும் பெங்களூரில் உள்ளன. இது வணிக தொடர்ச்சி திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 4 தரவு மையத்தில் எதேனும் ஒரு தரவு மையத்தில் பிரச்சனை ஏற்பட்டால் மற்ற மூன்று தரவு மையங்களும் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் செயல்படும் திறன் கொண்டுள்ளது.

ஜி.எஸ்.டி. தொடர்பான விற்பனை விபரங்களைத் தாக்கல் செய்ய எளிதாக எக்சல் டெம்ப்லெட் (Excel Template)  வடிவத்தை ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது.


ஜி.எஸ்.டி. வரி விற்பனை அல்லது வர்த்தகம் தொடர்பான கணக்குகளை மாதாமாதம் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதற்கு வணிகர்கள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு உதவும் வகையில் எக்செல் டெம்ப்லெட் வடிவத்தை, ஜி.எஸ்.டி. நெட்வொர்க் அறிமுகம் செய்துள்ளது. . இதை, ஜி.எஸ்.டி.,க்கான பொது இணையதளத்தில் (www.gst.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த எக்செல் டெம்ப்லெட் வசதியை இணைய இணைப்பு இல்லாமலே பயன்படுத்துக் கொள்ளலாம்.

இந்த எக்சல் டெம்ப்லெட்டை வரி செலுத்துவர்களுக்கு எளிதாக்குவதே எங்கள் நோக்கம் என்றும் ஜி.எஸ்.டி.என்., தலைவர் நவீன் குமார் கூறியுள்ளார். இதுவரை சுமார்  80.91 லட்சம்  வணிகர்கள் இந்த  ஜி.எஸ்.டி.என்னில் இணைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.எஸ்.டி.என்., நிறுவனம் வரித்துறை, வணிகர் - நுகர்வோர் இடையே வரி தொடர்பான எல்லா பரிவர்த்தனை வசதிகளையும்  ஏற்படுத்தி தருவதே இதன் அடிப்படை நோக்கமாகும், அப்ளிகேஷன் புரோகிராம் இன்டர்பேஸ்  சாப்ட்வேர் இதற்கெனவே உருவாக்கப்பட்டது. இதை வணிகர்களுக்கு, ஜி.எஸ்.டி., வசதியை ஏற்படுத்தி தருவதற்காக நியமிக்கப்பட்ட, சுவிதா புரொவைடர்ஸ் என்ற நிறுவனங்களுக்கு வழங்கினோம். அதே சமயம், 100 சதவீத சாப்ட்வேர் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் வகையில், 24 மணி நேரம் இயங்கும் கண்காணிப்பு பிரிவை அமைத்து உள்ளோம்  என்று இந்நிறுவனத்தின் தலைவர் நவீன்குமார் கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டி இணையதளத்திற்கான மென்பொருள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளை கொண்டு உருவாக்கப்படவில்லை. லினக்ஸ் (Linux) என்ற மென்பொருள் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லினக்ஸ் மென்பொருள் ரான்சம்வேரால் பாதிக்கப்படவில்லை. எனவே ஜி.எஸ்.டி இணையத்தளத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

இணையதளத்தின் அனைத்து செயல்பாடுகளும் சுமுகமாகவே உள்ளது. ஜி.எஸ்.டி நெட்வொர்க்கில் உள்ள பங்குதாரர்களின் விவரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்ட குறிகளின் (Encrypted form) வடிவில் சேமிக்கப்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தவிர வேறு யாரும் புள்ளிவிவரங்களை பெற முடியாது என நிர்வாக அதிகாரி பிரகாஷ் குமார் உறுதியளித்துள்ளார்.

இந்த ஜி.எஸ்.டி.என் இணைப்பு இன்னும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. ஒரு மாநிலத்தில் வரிசெலுத்தப்பட்ட ஒரு பொருள் மேலும் சில சில உற்பத்திப் பணிகளுக்காக  அடுத்த மாநிலம் செல்ல வேண்டியுள்ளது. அடுத்த மாநிலத்திலும் முன்னர் செலுத்தப்பட்ட வரிக்கு இன்புட் கிடைப்பது அவசியம். அதறகு வே இன் பில் ஒன்று வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அறிவிப்போடு சரி. அடுத்து எந்த நடவடிக்கையும் இன்னும் எடுக்கப்படவில்லை. தொழிற்துறையினருக்கு இது முக்கிய பிரச்சினை. எனவே இந்தப்பிரச்சினைக்கு விரைவில் முடிவு வேண்டும்.  துவக்க காலத்தில புதுப்பிரச்சினைகள் தோன்றக்கூடும். பிரச்சினைகளுக்கு உற்பத்தித் தலத்தில் உறபத்திக் காலத்தில் தீர்வு கிடைக்க வேண்டும் இல்லாவிடில் ஜி.எஸ்.டி.யும் மற்றொரு இடியாப்ப வரியாகிவிடும்.
கட்டுரையாளர்: முத்து லட்சுமி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation