ஆஸி., கூடைப்­பந்து அணி­யில் இந்­தி­யர்

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2017 09:48


புது­டில்லி : 

அமெ­ரிக்கா, ஐரோப்பா மற்­றும் ஆஸ்­தி­ரே­லியா நாடு­க­ளில் கூடைப்­பந்து விளை­யாட்டு பிர­ப­லம். கூடைப்­பந்து சர்­வ­தேச போட்­டி­க­ளுக்­கான அணி­கள் இங்­குள்­ளன. ஆஸ்­தி­ரே­லி­யா­டல் என்­பி­எல் எனப்­ப­டும் நேஷ­னல் பேஸ்­கட்­பால் லீக் அமைப்­பில் இடம் பெறு­வது குதி­ரைக் கொம்பு போன்ற கதை­தான். ஆனா­லும், திறமை எங்­கி­ருந்­தா­லும் வாய்ப்பு கிடைக்­கும் என்­பதை நிரூ­பித்­துள்­ளார் இந்­திய கூடைப்­பந்து அணி­யின் முன்­னாள் கேப்­டன் விசேஷ் பிரு­கு­வன்ஷி. இவரை ஓராண்டு ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் என்­பி­எல் அமைப்பு தன்­னு­டன் இணைத்­துக் கொண்­டுள்­ளது. அவர் ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குச் சென்று, அந்த அணி­யு­டன் இணைந்து பயிற்­சி­கள் மேற் கொள்ள முடி­யும். எனி­னும், ‘ஆஸி., அணி­யின் பிர­தான வீரர்­க­ளுக்கு காயம் ஏற்­பட்­டால், அந்த இடத்­தில் விளை­யாட எனக்கு வாய்ப்பு வழங்­கப்­ப­டும்’ என்று என்­பி­எல் ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டள்­ளது. எனி­னும், இந்­தி­யா­வில் இருந்து கூடைப்­பந்து போட்­டி­க­ளுக்­காக வெளி­நா­டு­க­ளில் தேர்வு செய்­யப்­ப­டும் முதல் இந்­தி­யர் என்­ப­தால், அதைப்­பற்றி எல்­லாம் கவ­லைப்­ப­ட­வில்லை. எதிர் காலத்­தில் இது இந்­தி­யா­வின் கூடைப்­பந்து வளர்ச்­சிக்கு கை கொடுக்­கும் என்­கி­றார் பிரு­கு­வன்ஷி.