நெல்­லை­யப்பர் கோயில் ஆனித் தேரோட்­டம்: பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பக்­தர்கள் தரி­ச­னம்

பதிவு செய்த நாள் : 08 ஜூலை 2017 09:10


திரு­நெல்­வேலி:

பக்­தர்­களின் சிவ மந்­திர கோஷங்­க­ளுடன் நெல்­­லை­யப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திரு­விழா கோலா­க­ல­மாக நடந்­தது. தேர் திரு­வி­ழாவில் பல்­லா­யி­ர­க்­க­ணக்­கான பக்­தர்கள் சுவாமி, அம்­பாளை தரி­சனம் செய்­த­னர்.

நெல்­லை­யப்பர் கோயில் 514வது ஆனித் தேரோட்ட திரு­விழா கடந்த ஜூன் 29ம் தேதி கொடி­யேற்­றத்­துடன் துவங்­கி­யது. திரு­வி­ழாவின் ஒவ்­வொரு நாட்­களும் காலை­யிலும், மாலை­யிலும் சுவாமி, அம்பாள் வெவ்­வேறு வாக­னங்­களில் வீதி­யுலா நடந்­தது.

விழா நாட்­களில் ரிக், யஜூர், சாமம், அதர்­வ­ண­வே­தம் என தமி­ழக முழு­வதும் உள்ள சிறந்த வேத விற்­­ப­னர்­களை கொண்டு வேத பாரா­யணம் நடந்­தது. நின்­றசீர் நெடு­மாறன் கலை­ய­ரங்கில் தினமும் பக்தி கலை நிகழ்ச்­சி­களும் நடந்­தது.

நேற்று முன்­தினம் மாலையில் கங்­கா­ள­நாதர் தங்கச் சப்­ப­ரத்தில் வீதி­யுலா, இரவில் தேர் கடாட்சம் வீதி­யுலா, சுவாமி தங்க கைலா­ச­பர்­வத வாக­னத்­திலும், அம்பாள் தங்­க­கிளி வாக­னத்­திலும் வீதி­யுலா நடந்­த­து.

­தி­ரு­வி­ழாவின் முக்­கிய நிகழ்ச்­சி­யான 9வது நாள் ஆனித்­தி­ரு­விழா தேரோட்டம் நேற்று நடந்­தது. தேரோட்­டத்தை முன்­னிட்டு நேற்று காலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சுவாமி, அம்பாள் தேருக்­கு எழுந்­த­ரு­ளினர். சுவாமி தேரில் பிரி­யா­விடை அம்­பா­ளுடன் சுவாமி நெல்­லை­யப்பர் எழுந்­த­ரு­ளினார். சிறப்பு பூஜையை தொடர்ந்து  விநா­யகர், சுப்­பி­ர­மணியர் தேர்கள் பக்­தர்­களால் வடம் பிடித்து இழுக்­கப்­பட்­ட­து.

சுவாமி நெல்­லை­யப்பர் தேர், காலை 8.40 மணிக்கு பக்­தர்­களால் வடம் பிடித்து இழுக்­கப்பட்­டது. தேருக்கு முன்­ன­தாக கோயில் யானை காந்­தி­மதி சிறப்பு அலங்­கா­ரங்­க­ளுடன் கம்­பீ­ர­மாக நடந்­து­வந்­த­து. தேரோட்­டத்தின் போது ‘நெல்­­லை­யப்­பா, வேணு­வ­ன­நாதா, தென்­னா­டு­டைய சிவனே போற்றி, எந்­நா­ட்­ட­வர்க்கும் இறைவா போற்றி’ போன்ற கோஷங்­களை பக்­தர்கள் எழுப்­பி­னர்.

தேருக்கு சிறப்பு அலங்­கா­ரம்

450 டன் கொண்ட சுவாமி நெல்­லை­யப்பர் தேர், கி.பி.1505ம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. 85 அடி உயரம், 28 அடி அகலம் கொண்ட தேரில் 5 அடுக்­கு­களில் புதிய அலங்­கார துணி போர்த்­தப்­பட்டு, சிறப்பு அலங்­காரம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. வாழை தோர­ணங்கள், மாவிலை, பூக்­களால் மாலைகள் கட்­டப்­பட்டு சிறப்பு அலங்­காரம் செய்­யப்­பட்­டி­ருந்­த­து. தேரில் புதிய ரிஷிப கொடி கம்­பீ­ர­மாக பறந்­த­து.

விஐ­பிக்கள் பங்­கேற்­­பு

தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்­சியில் கலெக்டர் சந்தீப் நந்­தூரி, லஞ்­ச ஒழிப்­புத்­துறை ஐ.ஜி., முருகன், போலீஸ் கமி­ஷனர் (பொ) டி.ஐ.ஜி., கபில் சரத்கர், எம்.பிக்கள் பிர­பா­கரன், விஜிலா சத்­தி­யானந்த், எம்­.எல்.ஏக்கள் ஏ.எல்.எஸ்.லெட்­சு­மணன், வசந்­த­குமார், இன்­ப­துரை, முன்னாள் எம்.பி., ராம­சுப்பு, அதி­முக மாவட்டச் செய­லாளர் பாப்­புலர் முத்­­­தையா, அற­நி­லை­யத்­துறை இணை ஆணையர் பரஞ்­ஜோதி, மாந­க­ராட்சி கமி­ஷனர் சிவ­சுப்­பி­ர­ம­ணியன், போலீஸ் துணைக் கமி­ஷனர் பெரோஸ்கான் அப்­துல்லா, அற­நி­லை­யத்­துறை உதவிக் கமி­ஷனர் சாத்­தையா, கோயில் செயல் அலு­வலர் ரோஷினி, ஆய்வர் ஆனந்த், போலீஸ் உதவிக் கமி­ஷனர் மாரி­முத்து, முன்னாள் மேயர் புவ­னேஸ்­வரி, பி.ஆர்.ஓ., ஜெக­வீ­ர­பாண்­டியன், மாந­க­ராட்சி பி.ஆர்.ஒ., கண்­ண­தாசன், மாந­க­ராட்சி சுகா­தார அதி­காரி டாக்டர் பொற்­செல்வன், முன்னாள் எம்­.எல்.ஏ., கோபா­ல­கி­ருஷ்ணன், காங்., மாவட்ட தலைவர் எஸ்.­கே.எம்.சி­வக்­குமார் உட்­பட பலர் கலந்து கொண்­ட­னர்.

தேருக்கு முன்­ன­தா­க சிவ­ன­டி­யார்கள்  சிவ­பு­ரா­ணங்­களை சொல்லிக் கொண்டும், பாடியும் சென்றனர். சிவ­ன­டி­யார்கள் சாம்­பி­ரா­ணி­யால் தூபம் போட்­டும், ஓது­வா மூர்த்­திகள் பஞ்­ச­பு­ரா­ணங்­க­ளை பாடியும் சென்ற­னர்.

பலத்த பாது­காப்­பு

சபாஷ் போலீஸ்!

தேரோட்­டத்தை முன்­னிட்டு அசம்­பா­விதம் ஏதும் ஏற்­ப­டாமல் இருக்­கவும், பக்­தர்­களை ஒழுங்­கு­ப­டுத்­தவும், திருட்டு மற்றும் செயின் பறிப்பு போன்ற சம்­ப­வ­ங்கள் நடை­பெ­­று­வதை தவிர்க்­கவும் போலீசார் பலத்த பாது­காப்பு ஏற்­பா­டு­களை செய்­தி­ருந்­தனர். 1300 போலீசார் பாது­காப்பு பணியில் ஈடு­ப­­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.  300 பெண் போலீ­சாரும், ஊர்­காவல் படை­யி­னரும் தனித்­த­னி­யாக கூட்­டத்தை ஒழுங்­கு­ப­டுத்­தி­னர். தேருக்கு முன்­ன­தாக கண்­கா­ணிப்பு சுழலும் கேம­ராக்கள் பொருத்­தப்­பட்ட போலீஸ் வேனில் போலீசார் கண்­கா­ணித்து வந்­தனர். அம்பாள் சன்­னதி அருகே போலீஸ் கண்­கா­ணிப்பு அறை ஏற்­ப­டுத்­தப்­பட்டு, ரத­வீ­தி­களில் 32 கண்­கா­ணிப்பு கேமரா அமைக்­கப்­பட்டு, தேர் உலா வருதல் மற்றும் கூட்­டத்தை போலீசார் மூலம் தீவி­ர­மாக கண்­கா­ணித்­த­னர். மப்­டி­யிலும் போலீசார் கண்­கா­ணிப்பு செய்து, அசம்­பா­வி­தங்­கள் நடை­பெ­றாமல் தடுத்த போலீ­சிற்கு பொது­மக்கள் சபாஷ் தெரி­வித்­த­னர்.

நிலை­யத்­திற்கு வந்த தேர்!

சுவாமி தேர் பக்­தர்­களால் காலை 8.40 மணிக்கு இழுக்­கப்­பட்­டது. மதியம் 12.50 மணிக்கு போத்தீஸ் கார்னர் பகு­தியில் இழுக்­கப்­பட்­டது. மதியம் 2.15 மணிக்கு அம்பாள் தேர் இழுக்­கப்­பட்­டது. விநா­யகர் தேர் அதி­காலை 3.30 மணிக்கும், சுப்­பி­ர­ம­ணியர் தேர் அதி­காலை 3.40 மணிக்கும் பக்­தர்­க­ளால் இழுக்­கப்­பட்டு நிலையம் வந்­த­டைந்­தது. சுவாமி தேர் மாலை 4.40 மணிக்கு நிலையம் வந்­த­டைந்­தது. அம்பாள் தேர் மாலை 5 மணிக்கு நிலையம் வந்­த­டைந்­தது. அதன்பின் சண்­டி­­கேஸ்­வரர் தேர் இழுக்­கப்­பட்­டு, நிலையம் வந்­­த­டைந்­த­து.

தேரோட்ட துளி­கள்!

அதி­க­ரித்த பக்­தர்கள் கூட்­டம் தண்ணீர், நீர்மோர் வழங்­கல்

* நெல்­லை­யப்பர் கோயி­லுக்கு மாவட்டம் முழு­­வதும் உள்­ளூர் விடு­முறை விடப்­பட்­டி­ருந்­தது. இதனால் வழக்­கத்தை விட பக்­தர்கள் கூட்டம் அதி­க­மாக இருந்­தது. தேரும் கடந்த ஆண்டை விட, வேக­மாக பக்­தர்­களால் இழுக்­கப்­பட்­ட­து.

பக்­தர்கள் குடும்­பத்­துடன், புத்­தா­டை உடுத்தி கலந்து கொண்­ட­னர்.

* சிவ பூத கணங்கள் பஞ்­ச­வாத்­தி­யங்­களை இசைத்தும், சிவ­பு­ரா­ணங்­களை பாடியும் தேருக்கு முன்­ன­தாக சென்­ற­னர்.

* பக்­தர்கள் வச­திக்­காக மாந­க­ராட்சி சார்பில் ஆங்­காங்கே சில்வர் குடிநீர் தொட்டி வைக்­கப்­பட்டு, தண்ணீர் வசதி செய்­யப்­பட்­டி­ருந்­த­து.

* வெயிலில் மய­ங்கி விழும் பக்­தர்­கள் மற்றும் கூட்ட நெரி­சலில் மயங்­க­ம­டையும் பக்­தர்­க­ளுக்கு

மாந­க­ராட்சி சுகா­தா­ரத்­து­றை சார்பில் ஒ.ஆர்.எஸ்.க­ரைசல் வழங்­கப்­பட்­ட­து.

* பக்தர் பேரவை சார்பில் 120 பேர் குடங்­களில் தண்­ணீரை சுமந்து சென்று கூட்­டத்தில் உள்ள பக்­தர்­க­ளுக்கு வழங்­கி­னர்.

* மாந­க­ராட்சி சார்பில் மொபைல் வாக­னங்கள் மூல­மாக நட­மாடும் மருத்­­து­வக்­கு­ழு­வினர் மற்றும் ஆங்­காங்கே மருத்­துவ குழுக்­களும் அமைக்­கப்­பட்­டு பக்­தர்­க­ளுக்கு உத­வப்­பட்­ட­து.

* டவுன் சாலியர் தெரு நவ­நீ­த­கி­ருஷ்ணன் பஜ­னைக்­குழு சார்பில் பெண்கள், குழந்­தைகள் கோலாட்டம் அடித்தும், சிறிய குழந்­தைகள் சிவன், பார்­வ­தி மற்றும் பல்­வேறு வேடம் அணிந்தும் ரத­வீ­தி­களில் வலம் வந்­த­னர்.

* ரத­வீ­திகள் மற்றும் டவுன்­ பகு­தி­களில் கடைகள் அடைக்கப்­பட்­டதால் பக்­தர்­கள் பேரவை சார்பில் தண்ணீர், சாப்­பாடு வழங்­கப்­பட்­டது. இது­த­விர பொது நல அமைப்­புக்கள், வீடு­களில் நீர்மோர், தண்ணீர் மற்றும் சாப்­பாடு வழங்­கப்­பட்­ட­து.

* லண்டன் மில்­ஹில்ஸ் பள்­ளியில் இருந்து நெல்லை சங்­கர்­நகர் ஜெயேந்­திரா பள்­ளிக்கு வந்­தி­ருந்த 26 மாண­வர்­கள் ஜெயன் சாஞ்சல் தலை­மையில் நெல்­லை­யப்பர் தோரட்­டத்தை பார்க்க வந்­தி­ருந்­தனர். தேரோட்­டத்தின் சிறப்­புக்கள் குறித்து பள்ளி முதல்வர் உஷாராமன், தாளாளர் நிர்மல் ராம­ரத்­தினம், வெளிநாட்­டி­ன­ருக்கு விளக்­கி­னர்.

* தேராட்­டத்தின் போது அதிக வெயில் இல்­லா­ததால் தேரின் முன்புறம் மற்றும் பின்­பு­றங்­களில் உற்­சா­க­மாக வலம் வந்­த­னர்.

* தேருக்கு முன்­ன­தாக இளை­ஞர்கள் டைவ் அடித்து சாக­சங்கள் செய்­த­னர்.

* கடந்த ஆண்டு தடை செய்­யப்­பட்­டி­ருந்த பீப்பி விற்­ப­னையை இந்த ஆண்டு கண்­டு­கொள்­ளப்­ப­டா­ததால் ரத­வீ­தி­களில் பீப்­பி­சத்தம் அல­றி­ய­து.