அகாசி எனக்கு பயிற்சியாளராக இருப்பார்: ஜோகோவிச்

பதிவு செய்த நாள் : 23 மே 2017 08:22


ரோம் : 

டென்­னிஸ் நட்­சத்­தி­ரங்­கள் ஆர்­வ­மு­டன் எதிர்­பார்த்­தி­ருந்த பிரெஞ்ச் ஓபன் டென்­னிஸ் போட்­டி­கள் வரும் ஞாயிற்­றுக் கிழமை தொடங்­க­வுள்­ளது. இந்­தப் போட்­டி­யில் தர வரி­சைப் பட்­டி­யில் உள்ள ஆண், பெண் டென்­னிஸ் வீராங்­க­னை­கள் களம் இறங்­க­வுள்­ள­னர். இந்­நி­லை­யில், இத்­தாலி ஓபன் டென்­னிஸ் போட்­டி­யின் இறு­தி­யில் தோல்­வி­ய­டைந்த செர்­பி­யா­வின் நோவக் ஜோகோ­விச் நிரு­பர்­க­ளி­டம் பேசு­கை­யில், “இப்­போது என் கவ­னம் எல்­லாம் பிரெஞ்ச் ஓபன் மீது திரும்­பி­யுள்­ளது. இதற்­காக என்னை தயார் படுத்­திக் கொள்­ள­வுள்­ளேன். என் பிரெஞ்ச் ஓபன் டென்­னிஸ் பயிற்­சி­யா­ள­ராக அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்த ஆண்ட்ரூ அகாசி செயல்­ப­டு­வார். இதற்­காக அவ­ரி­டம் நான் பேசி வரு­கி­றேன். நான் மதிக்­கும் டென்­னிஸ் நட்­சத்­தி­ரங்­க­ளில் அகா­சி­யும் ஒரு­வர். என் டென்­னிஸ் வாழ்க்­கை­யில் களத்­துக்கு வெளி­யில் நான் மறக்க முடி­யாத நபர். பிரெஞ்ச் ஓபன் போட்­டி­யில் எனக்கு பயிற்­சி­யா­ள­ராக செயல்­ப­டு­வது குறித்து அகா­சி­யு­டன் 2 வாரங்­க­ளாக பேசி வரு­கி­றேன். ஆனால், நீண்ட நாட்­கள் அடிப்­ப­டை­யில் எந்­தத் திட்­ட­மும் இல்லை. பிரெஞ்ச் ஓபன் எங்­களை எந்­த­ள­வுக்கு உயர்த்­து­கி­றது என்­ப­தைப் பார்க்­கப் போகி­றோம்” என்­றார். ஜோகோ­விச் 12 கிராண்ட் ஸ்லாம் பட்­டங்­க­ளை­யும், அகாசி 8 கிராண்ட் பட்­டங்­க­ளை­யும் வென்­றுள்­ளார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.