ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதிப் போட்டியில் சிந்து

பதிவு செய்த நாள் : 28 ஏப்ரல் 2017 09:22


உகாங் (சீனா) : 

சீனாவில் உள்ள உகாங் நகரில் ஆசிய பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி, நடைபெற்று வருகின்றன.

இந்தப் போட்டியில் இந்தியா-வின் சார்பில் வீரர்களும், வீராங்-கனைகளும் கலந்து கொண்டுள்ளனர். சாய்னா முதல் சுற்றில் வெளியே-றினார். இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சிந்து, ஆண்கள் பிரிவில் அஜய் ஜெயராம் ஆகியோர் 2வது சுற்றுக்குத் தகுதி பெற்றனர். நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் சிந்து, ஜப்பான் வீராங்கனை அயா ஒஹோரியை எதிர் கொண்டு விளையாண்டார். வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்தப் போட்டியில், சிந்து அபாரமாக விளையாடினார். இதனால், 21-14, 21-15 என்ற நேர் செட்களில் அயா ஒஹோரியை தோற்கடித்து, காலிறுதிப் போட்டிக் குள் நுழைந்தார். ஆண்கள் பிரிவில் விளையாடிய அஜய் ஜெயராம், தன் 2வது சுற்றில் சீன தைபேயின் சூ ஜென் ஹோவை எதிர் கொண்டார். இந்தப் போட்டியில் ஜெயராம் 19-21, 10-21 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா, என்  சிக்கிரெட்டி இணைந்து, சீனாவின் ஜெங் சீவெய் - சென் குயிங் சென்னை எதிர்த்து விளையாடினர்.  இதில், சோப்ரா - சிக்கிரெட்டி ஜோடி 15-21, 21-14, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர். அதேபோல் ஆண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்திய ஜோடி முதல் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.