சாய்பாபாவுக்கு ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கக் கீரிடம்: இத்தாலிப் பெண் சமர்ப்பணம்

பதிவு செய்த நாள் : 11 பிப்ரவரி 2017 02:15


ஷீரடி:

ஷீரடி சாய்பாபாவுக்கு  ரூ.28லட்சம் மதிப்புள்ள தங்கக் கீரிடத்தை இத்தாலிப் பெண் காணிக்கையாக வழங்கியுள்ளார்

சாய்பாபாவின் தீவிர பக்தையான 72 வயது இத்தாலிப் பெண் ஒருவர்  சாய்பாபாவுக்கு ரூ. 28 லட்சம் மதிப்புள்ள தங்கக் கீரிடத்தை நன்கொடையாக வழங்கி உள்ளார்.

செலினி டோலொராஸ் எனும் சாய் தூர்கா நேற்று நன்கொடையாக தங்க கீரீடம் வழங்கியுள்ளார். அந்த தங்க கீரிடம் 855 கிராம் எடைக்கொண்டாது என ஸ்ரீ சாய்பாபா சமஸ்தான அறங்காவலர் சச்சின் தாம்பே கூறியுள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக அந்த பெண் ஒவ்வொரு மாதமும் தவறாமல் ஷீர்டிக்கு வந்து சாய்பாபாவை தரிசனம் செய்வாதாகவும் தாம்பே கூறினார்.. ரூ.25 லட்சம் மதிப்புள்ள தங்கத் தகட்டினால் இருமுனைகளிலும் கவசமிடப்பட்ட இரண்டு ருத்ராட்ச மாலைகளை இதற்கு முன்னதாக சாய்பாபா கோவிலுக்கு அவர் வழங்கியுள்ளார் என சாய்பாபா சமஸ்தான அறங்காவலர் சச்சின் தாம்பே கூறியுள்ளார்.

அவர் இத்தாலியில் மிகப் பெரிய சாய்பாபா கோவில் கட்ட திட்டம் இட்டுள்ளார்.   கோவிலுக்கான  வரைபடத்தை பாபா சன்னதியில் வைத்து சாய் தூர்கா ஆசி பெற்றார் என சச்சின் தாம்பே கூறினார்.