சினிமாவில் எம்.ஜி.ஆர். – 276 – விஜயபாஸ்கர்

27 செப்டம்பர் 2016, 10:40 PM

தன்னை தகுதிபடுத்தும் பயிற்சிகள்!

அதிர்ஷ்­டம் வந்­து­விட்­டது என்று அவர் சும்மா இருந்து விட­வில்லை, குமார ஆசான் என்ற நடன இயக்­கு­ந­ரி­டம் சுமார் மூன்று மாதம் வரை கடு­மை­யாக நட­னப் பயிற்சி பெற்­றார், படப்­பி­டிப்பு நேரத்­தில் நடன மாஸ்­டரோ, கேமி­ரா­மேனோ ‘இவர் சரி­யாக ஆட­வில்லை’ என்று ஒரு வார்த்தை சொன்­னால் போதும், படத்­தி­லி­ருந்தே எம்.ஜி.ஆரை தூக்கி விடு­வார்­கள் என்­ப­தால் மிகக் கவ­ன­மாக ஆடி­னார், ‘ஸ்ரீமு­ரு­கன் படத்­தில் எம்.ஜி.ஆர். ஆடிய ருத்­ர­தாண்­ட­வத்­திற்கு ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு இருந்­தது. ஜூபி­டர் நிறு­வ­னத்­தி­லும் அவ­ருக்கு நல்ல பேர் கிடைத்­தது.

வெள்­ளித்­தி­ரை­யில் கதா­நா­ய­க­னாக நடிக்­கும் வாய்ப்பு எப்­போது வரும் என்று காத்­தி­ருந்­த­தோடு அதற்­கா­கத் தன்னை தயார்ப்­ப­டுத்­திக் கொள்­ள­வும் தகு­தி­ப­டுத்­திக் கொள்­ள­வும் பயிற்சி மேற்­கொண்­டார். குதிரை சவாரி பழ­கிக் கொள்ள வேண்­டும் என்று முடிவு செய்­த­தால் ஸ்டுடியோ குதி­ரை­க­ளோடு தான் இரவு பக­லும் இருப்­பார்,

சைக்­கிள் ஓட்­டக் கற்­றுக் கொள்ள முடிவு செய்­தால் எப்­போது சைக்­கி­ளும் கையு­மாக இருப்­பார். அப்­போது அவ­ருக்கு சைக்­கிள் ஓட்­டக் கற்­றுக் கொடுத்­த­வர் கலை­வா­ணர் என்.எஸ்.கே. தான்.

நந்­தா­ராம் பயில்­வான் என்ற ஒரு நடி­க­ரின் உடல் வலி­மை­யை­யும் தசை­க­ளின் அழ­கை­யும் பார்த்து வியந்து போன எம்.ஜி.ஆர். அவ­ரைப் போலத்­தா­னும் மாற வேண்­டும் என்று விரும்பி விசேஷ தேகப்­ப­யிற்­சி­க­ளைச் செய்து வந்­தார். இப்­படி எந்­தத் துறையை எடுத்­துக் கொண்­டா­லும் ஒரு சிறந்த மனி­த­ரைப் பார்த்­து­விட்­டா­லும் தானும் அவ­ரைப் போல் ஆக வேண்­டும் எனப் பயிற்சி எடுக்­கத் தொடங்­கி­வி­டு­வார்.

''இந்தி நடி­கர் ராஜேந்­தி­ர­கு­மார் என் நெருங்­கிய நண்­பர் என்று ஏற்­க­னவே சொல்­லி­யி­ருக்­கி­றேன். சென்­னைக்கு வந்­தால் என் வீட்­டில் ஒரு வேளை­யா­வது உண­வ­ருந்தி விட்­டுத்­தான் போவார். 

இம்­முறை சென்னை வந்­தி­ருந்த போது என் பிரச்­சி­னை­களை நன்கு அறிந்­தி­ருந்த அவர் சித்­ரா­ல­யா­வின் நிலைமை பற்றி விச­ரித்­தார். பொரு­ளா­தார நிலை­மையை ஓர­ளவு சமா­ளிக்க இந்தி ஹீரோ-72 பெற்ற வெற்றி உத­வி­யது என்­றா­லும் முழு­வ­து­மாக தீர­வில்லை என்­றேன்.

சிவா­ஜி­யும், அவ­ரது தம்பி சண்­மு­க­மும் எவ்­வ­ளவோ முயன்­றும் எனக்கு கால்­ஷீட் கொடுக்க முடி­ய­வில்லை. படம் தொங்­க­லில்­தான் இருக்­கி­றது என்­றேன். 

சிரத்­தை­யு­டன் கேட்­டுக்­கொண்ட ராஜேந்­தி­ர­கு­மார், சற்று நேரம் மௌன­மாக யோசித்­து­விட்டு திடீ­ரென்று, “ஏன் ஸ்ரீதர் நீங்­கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்­கக் கூடாது?” என்று கேட்­டார். எனக்­குத் தூக்­கி­வா­ரிப் போட்­டது என்ன பதில் சொல்­வது என்று தெரி­யா­மல் நான் தயங்கி, தடு­மாற அவரே தொடர்ந்து “எனக்­கென்­னமோ உங்க பிரச்­சினை தீர அது­தான் வழி என்று தோன்­று­கி­றது” என்­றார். நான் நிதா­ன­மாக “உங்­க­ளுக்கு என் மேல் உள்ள அக்­கறை புரி­கி­றது. ஆனால், உங்­கள் ஆலோ­ச­னையை செயல்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மில்லை” என்­றேன். “ஏன் எம்.ஜி.ஆர். உங்­க­ளுக்கு கால்­ஷீட் தர­மாட்­டாரா?”

அப்­ப­டி­யில்லை ஏற்­க­னவே எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்தை ஆரம்­பித்து சில காட்­சி­கள் மட்­டுமே எடுக்­கப்­பட்ட நிலை­யில், தொடர்ந்து எம்.ஜி.ஆரின் ஒத்­து­ழைப்­புக் கிடைக்­கா­த­தால் படத்தை அப்­ப­டியே நிறுத்த வேண்­டி­ய­தாகி விட்­டது. பிறகு நானே அந்­தக் கதை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்து, சிவா­ஜியை வைத்­துப் பட­மெ­டுத்­தது எம்.ஜி.ஆருக்­குத் தெரி­யும். அப்­ப­டி­யி­ருக்க…..

“ஸ்ரீதர் இப்போ அந்த பழைய கதையை நினைத்­துக் கொண்டு எம்.ஜி.ஆர். ஒத்­து­ழைப்­புத் தர மறுப்­பார் என்று எனக்­குத் தோன்­ற­வில்லை. நீங்­கள் சொல்­வது உண்­மை­யா­கவே இருக்­க­லாம். “ஆனால், அதி­லும் ஒரு தர்ம சங்­க­டம், இப்போ எம்.ஜி.ஆர். கால்­ஷீட் தரு­வ­தாக வைத்­துக் கொண்­டால் சிவாஜி என்ன நினைப்­பார்? ஓஹோ நம்ம படம் பாதி­யிலே நிற்க எம்.ஜி.ஆரை வைத்­துப் படம் எடுக்­கப் போய்­விட்­டாரா ஸ்ரீதர்? என்று சிவாஜி தப்­பாக அர்த்­தம் செய்து கொள்­ளக்­கூ­டும். அல்­லது எம்.ஜி.ஆரே முத­லில் சிவாஜி படத்தை முடித்­து­விட்டு வா, அப்­பு­றம் பார்க்­க­லாம் என்று கூற­லாம்”. ராஜேந்­தி­ர­கு­மார் என் சமா­தா­னங்­களை ஏற்­க­வில்லை. 

“ஸ்ரீதர் யோசித்து யோசித்­துத் தயங்­கா­தீர்­கள், எதற்­கும் எம்.ஜி.ஆரை அணு­குங்­கள், எனக்­குத் தோன்­று­கி­றது உங்­கள் பிரச்­சி­னை­க­ளெல்­லாம் தீர அது­தான் வழி”.

“பெரிய ரிஸ்க் இல்­லையா?” “ரிஸ்க்­தான் துணிந்து ரிஸ்க் எடுங்க” எம்.ஜி.ஆரின் பெருந்­தன்­மையை ராஜேந்­தி­ர­கு­மார் உறு­தி­யா­கக் கூற, நானும் அவர் யோச­னையை ஏற்­பது என்று தீர்­மா­னித்­தேன். இதற்கு முன்பு ஓரிரு சந்­தர்ப்­பங்­க­ளில் எம்.ஜி.ஆரை நான் சந்­திக்க நேர்ந்­த­போது அவர் நாம் இரு­வ­ரும் சேர்ந்து ஒரு படம் பண்­ண­வேண்­டும் என்று கூறி­யது நினைவு இருந்­தது. அதை ஒரு வேளை உப­சா­ர­மா­கக் கூறி­யி­ருப்­பாரோ? யார் என்ன விமர்­ச­னம் செய்­தா­லும் சரி எம்.ஜி.ஆரை அணு­கு­வது என்ற தீர்­மா­னத்­திற்கு வந்­தேன். ஆனா­லும் உள்­ளூர ஒரு தயக்­கம்… எப்­படி எடுத்­துக் கொள்­வாரோ? என்ன பதில் கூறு­வாரோ? எனவே, நான் நேரில் எம்.ஜி.ஆரைப் பார்த்­துப் பேசா­மல் கன்­னையா என்ற நண்­ப­ரி­டம் என் விருப்­பத்­தைத் தெரி­வித்­தேன்.

டைரக்­டர் பி.வாசு­வின் அப்பா பீதாம்­ப­ரம், எம்.ஜி.ஆரி­டம் மேக்­கப்­மே­னாக இருந்­தார். அவ­ரி­டம் என் விருப்­பத்­தைக் கன்­னையா தெரி­விக்க, பீதாம்­ப­ரம் எம்.ஜி.ஆரி­டம் விஷ­யத்­தைச் சொல்ல, எம்.ஜி.ஆரின் பதில் திரும்­ப­வும் கன்­னையா முல­மாக எனக்கு வந்து சேர்ந்­தது. அதிலே எம்.ஜி.ஆரின் பெருந்­தன்மை மீண்­டும் ஒரு­முறை வெளிப்­பட்­டது.